"திருந்தாத" எடப்பாடி.. டிடிவி தினகரனுக்கு 'ஐடியா' தந்து.. பண்ருட்டி ராமச்சந்திரன் உடைத்த அந்த ரகசியம்
பண்ருட்டி ராமச்சந்திரன் சசிகலா - ஓபிஎஸ் எப்போது என்பது குறித்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்
சென்னை: ஓபிஎஸ் - சசிகலா அரசியல் ரீதியான சந்திப்பு ஏன்இன்னும் நடைபெறவில்லை என்ற ரகசியத்தை மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெளிப்படுத்தி உள்ளார்.. இது எடப்பாடி டீமின் கவனத்தையும் திருப்பி வருகிறது..!!
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது.. அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்க உள்ளது.. நாளை மார்ச் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம்,
மார்ச் 20 ஆம் தேதி அன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது என்றும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 26 ம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரைக்கும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் , மார்ச் 27ம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டவுட் கிளம்பியது
இப்போதைக்கு அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கிறார்.. இவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக தேர்தல் நடத்தப்படுகிறது என்பதால், இவரைஎதிர்த்து யாருமே போட்டியிடப் போவதில்லை, எப்படி பார்த்தாலும், எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட போகிறார் என்கிறார்கள்.. ஒருவேளை ஓபிஎஸ் தரப்பில் இன்றைய தினம் போட்டியிட வாய்ப்பிருக்குமோ என்ற யூகங்களும் சந்தேகங்களும் கிளம்பின.. ஆனால், எடப்பாடி தரப்பை பொறுத்தவரை, ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்..

ரகசியம்
அப்படி நீக்கப்பட்டவர்களின் அடிப்படை உறுப்பினர் தகுதி காலாவதி ஆகிவிட்டது.. அதனால் ஓபிஎஸ்ஸுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை.. அவர் அணியை சேர்ந்தவர்கள் யாரும் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என்பதுதான், எடப்பாடி டீமின் அழுத்தமான வாதமாக இருந்து வருகிறது.. எனினும், ஓபிஎஸ் தரப்பு இந்த முறை தேர்தலின்போது ஏதாவது பிரச்சனை செய்துவிடுமா? என்ற கலக்கம் உள்ளுக்குள் இருப்பதால்தான், போலீஸ் பாதுகாப்பையும் அதிமுக கோரியுள்ளதாக சொல்கிறார்கள். இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்..

சிறுபிள்ளைத்தனம்
அப்போது, "அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு என்பது சிறுப்பிள்ளைத்தனமானது. தேர்தலை முறையாக அவர்கள் அறிவிக்கவில்லை. தேர்தல் என்றால் முறையான உரிய கால அவகாசத்துடன் நடைபெற வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு அறிவிப்பு மிகவும் சிறுப்பிள்ளைத்தனமானது. அதிமுக தேர்தல் நடத்துவதற்கு என சட்ட விதிகள் உள்ளன. விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் நடத்துவது, சட்ட விதிகளை மாற்றுவது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல்.. பிரேக் இல்லாத வண்டியை போல அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

எம்ஜிஆர்
நிச்சயம் மக்கள் மன்றம் செல்வோம்.. மேலும், ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவராக இருந்தவர் ஓபிஎஸ். அதிமுகவை காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அதிமுகவை சீர்குலைக்கும் முயற்சியில் எடப்பாடி ஈடுபட்டு வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகும் எடப்பாடி பழனிசாமி திருந்தவில்லை. அதிமுகவினர் உண்மையான தொண்டர்கள் மன வேதனையில் உள்ளனர். ஜெயலலிதா, எம்ஜிஆர் வகுத்துக் கொடுத்த சட்ட விதிகளின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அனைத்து முயற்சி எடுப்போம். மாவட்டந்தோறும் அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ் சந்திக்க போகிறார்..

CPM CPI
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற அனைத்தையும் விட்டுகொடுத்தோம். இனி இவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த தன்னை நீக்கியது செல்லாது என்று சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் தான் ஓபிஎஸ் - சசிகலா அரசியல் ரீதியான சந்திப்பு இன்னும் நடைபெறவில்லை. அதேபோல டிடிவி தினகரன் அமமுக என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவரும் இணைந்து பணியாற்றலாம். அதாவது சிபிஎம், சிபிஐ போன்று செயல்படலாம்.

தலைக்கு மேல் கத்தி
தேர்தல் நேரத்தில் எல்லா விதமான சந்திப்புகளும் நிச்சயம் நடைபெறும். எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாக சொல்லி வருகிறார். அவருடன் இருப்பவர்கள் தொண்டர்கள் அல்ல. குண்டர்கள் என்பதை காலம் அவருக்கு உணர்த்தும்" என்று தெரிவித்துள்ளார் பண்ருட்டியார். கடந்த சில நாட்களுக்கு முன்பும்கூட, பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, மக்கள் மன்றத்தை நாட போவதாக சொல்லியிருந்தார்.. இதற்கு காரணம், பாஜகவுக்கு ஓபிஎஸ் அளவுக்கு அதிகமாக பணிந்துபோய்விட்டதால், இடைத்தேர்தலின்போதும் ஏமாற்றம் அடைந்துவிட்டதாகவும், அதனால், தன்னுடைய சொந்த செல்வாக்கையும் பணத்தையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஓபிஎஸ்ஸுக்கு உள்ளதாகவும் தெரிகிறது..

கூடாரம் காலி
எனவே, பாஜகவிடம் இருந்து சற்று ஒதுங்கி, அரசியல் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மக்களை நாடி போகிறோம் என்று பண்ருட்டியார் சொன்னதாகவும் கூறப்பட்டது.. அதை முன்னிறுத்தியே சிவகங்கையில் ஓபிஎஸ் டீம் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி காட்டியிருந்தது.. அதுபோலவே இன்றைய தினமும் மக்களை நாட போவதாக பண்ருட்டி அறிவித்துள்ளதால், ஓபிஎஸ் அரசியல் வேகம் எடுத்து வருகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த தன்னை நீக்கியது செல்லாது என்று சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால்தான், ஓபிஎஸ் - சசிகலா அரசியல் ரீதியான சந்திப்பு இன்னும் நடைபெறவில்லை என்ற ரகசியத்தையும் பண்ருட்டியார் வெளிப்படுத்தி உள்ளது, எடப்பாடி தரப்பின் கவனத்தை திருப்பி வருகிறது..!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications