அயோத்தி முதல் ஆயுஷ்மான் வரை ஊழல்.. சிஏஜி அறிக்கை பற்றி மோடி ஏன் பேசவில்லை.. கேட்கிறார் மு.க ஸ்டாலின்
சென்னை: அயோத்தி முதல் ஆயுஷ்மான் திட்டம் வரை 7 லட்சம் கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது
என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். உங்கள் ஆட்சி பற்றி சிஏஜி அறிக்கை என்ன சொல்லியிருக்கிறது என்று படித்து பார்த்தீர்களா? அதைப்பற்றி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் ஏன் விவாதிக்கவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைப்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்று பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், இந்தியா கூட்டணியும் இந்தியா கூட்டணி தலைவர்களும் பேசியது பிரதமர் மோடியின் முகத்திரையை கிழித்து விட்டது. உண்மையாக தரவுகளின் அடிப்படையில் சொல்றோம் என்று சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியா கூட்டணியை ஊழல் கூட்டணி என்று குற்றம் சாட்டும் மோடி அவர்களே.. உங்கள் ஆட்சி பற்றி சிஏஜி அறிக்கை என்ன சொல்லியிருக்கிறது என்று படித்து பார்த்தீர்களா? அதைப்பற்றி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் விவாதித்தீர்களா? பதில் சொன்னீர்களா?
அயோத்தி திட்டத்தில் கூட ஊழல் செய்த கட்சிதான் பாஜக என்று சிஏஜி அறிக்கை சொல்லியிருக்கிறது. எல்லா திட்டங்களுக்கும் நமக்கும் வாய்க்குள் நுழைய முடியாத பெயராக வைப்பார்கள். அப்படி வைத்தால்தான் அதில் என்ன நடக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதாவது ராமாயணம் நடந்த இடங்களுக்கு பயணிகளை சுற்றுலா அழைத்து செல்லப்போகும் திட்டத்தை உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கோவா, இமாச்சல பிரதேசம், சிக்கிம், தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களுக்கு அழைத்துச்செல்வதாக கூறினார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்தியதில் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கை சொல்கிறது. ஒப்பந்தம் வழங்கியதில் விதிமீறல் இருப்பதாக சிஏஜி அறிக்கை கூறியுள்ளது.
ஏழைகள் விமானத்தில் பயணம் செய்வதற்காக 2016ஆம் ஆண்டு உதான் திட்டத்தை மத்திய பாஜக அரசு தொடங்கியது. இந்த திட்டத்திற்காக 1089 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. 7 சதவிகித இடங்களில் மட்டுமே விமானம் இயக்கப்படுகிறது. 93 சதவிகித இடங்களில் விமானம் இயக்கவில்லை என சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது. ரயில்வே துறையிலும் அதிக செலவு செய்யப்பட்டிருப்பதாக சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.
விளம்பரங்களால் பொய் பிம்பங்களை கட்டமைக்கும் பாஜக அரசு 2017 முதல் 2021 வரைக்கும் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்பட்டு முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த முறைகேடுகளுக்கெல்லாம் உச்சம் டோல் பிளாசா முறைகேடுதான். பயணம் செய்யும் பொதுமக்களிடம் தினசரியும் டோல் பிளாசா மூலம் பல கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் மாபெரும் வசூல் நடந்துள்ளது தெரியவந்துள்ளதாக சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
நாடு முழுவதும் சாலைகளை இணைக்க பாரத் மாத திட்டம் கொண்டு வந்தனர். அந்த திட்டத்தில் 40 சதவிகிதம் கூட பணிகள் முடிவடையவில்லை. திட்டமிட்ட மதிப்பை விட கூடுதலாக செலவு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் காப்பீட்டு தொகை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எக்கச்சமாக முறைகேடு நடந்துள்ளது. இதை தனித்தனியாக சொன்னால் தலையே சுற்றிவிடும். அயோத்தி முதல் ஆயுஷ்மான் திட்டம் வரை 7 லட்சம் கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு பிரதமரோ மத்திய அமைச்சர்களோ பதில் சொல்லவில்லை. அவர்களால் பதில் சொல்லவும் முடியாது. மக்களை அதை திசை திருப்ப பல்வேறு அரசியலை கையில் எடுக்கின்றனர். பாஜக அரசு மக்களுக்கு எதிரான அரசு என்று மக்கள் புரிந்து கொண்டனர்.
2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக ஒட்டு மொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும். இந்திய மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஒரே குரலாக முழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். பரந்து விரிந்த நம் இந்திய நாட்டினை காப்பாற்றும் கடமை நம் எல்லோரின் கையிலும்தான் இருக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி












Click it and Unblock the Notifications