ரஜினி, கமல் எங்கே? மக்கள் மனதில் நிலைத்து நின்ற மயில்சாமி!
சென்னை: நாட்டுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் நிதியை அள்ளிக் கொடுப்பதில் தமிழர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. அப்படித்தான் கடந்த 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் மூண்டபோது தமிழர்கள் அள்ளிக் கொடுத்தார்கள்.
இந்தியாவிலேயே அதிக நிதியை அளித்த மாநிலமாகத் தமிழ்நாடு அன்றைக்கு இருந்தது. அப்படித்தான் 2018இல் இல் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியை அளித்தார் மு.க.ஸ்டாலின்.

இந்தியாவைத் தாண்டி இலங்கை நாடு கடந்த 2022ஆம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானபோது திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார். மேலும் முதற்கட்டமாக 40ஆயிரம் டன் அரிசி மற்றும் 500 டன் பால் பவுடர் கூடவே உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பிவைத்தார்.
வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்த கேரளாவுக்குக் கூடுதலாக வெள்ள நிவாரண நிதியாக ரூ.3,048 கோடி தருவதற்கு மத்திய உள்துறை ஒப்புதல் அளித்தது. தற்போது மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டை மீட்க ரூ.12659 கோடி தேவை என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.
ஆனால், இதுவரை மாநில பேரிடர் நிதிக்கு வழங்க வேண்டிய 900 கோடியைத்தான் மத்திய அரசு விடுவித்துள்ளது. அதற்கு மேலாக நிதியை வழங்க வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. பத்திரிகையாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இறுதிவரை அது பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ளவே இல்லை.
இதனிடையே அவர் தூத்துக்குடிக்கு நேரில் வருகை தந்து வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்திருக்கிறார். அவரிடம் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இழப்பீட்டுக்கான அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறார். இனிமேல் தான் மத்திய அரசு எவ்வளவு நிதியை அளிக்கும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கோ ஒரு மாநிலத்தில் பிரச்சினை என்றால் உடனடியாக முன்னுக்கு நிற்கும் தமிழ்நாட்டிற்கு இதுவரை அண்டை மாநிலங்கள் எவையும் நிதி அளிக்கவில்லை.
கேரளா அரசுடன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நல்ல நெருக்கம் இருந்து வருகிறது. அப்படி இருந்தும் கேரளா இதுவரை சிறிய அளவில் கூட நிவாரணங்களை வழங்கவில்லை. ஆனால், மாநில மாநிலக் கட்சியாக திமுக கேரளாவின் துயர் துடைக்க 1 கோடியைத் தந்தது.
முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுப் பல தனியார் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் ஒரு நாள் ஊதியத்தை வெள்ள நிவாரண நிதியாக அளித்துள்ளது ஒரு ஆறுதலான செய்தி.
ஆனால், கோடிகளில் வருமானம் பார்க்கின்ற திரைத்துறை பெரும் நட்சத்திரங்கள் இதுவரை நிதி அளிக்க முன்வரவில்லை.
சொல்லி வைத்ததைப்போன்று ரஜினி, கமல், விஜய், அஜித் என்று முன்னணி நடிகர்கள் யாரும் ஒரு ரூபாய் நிதி அளிக்கவில்லை.

தூத்துக்குடி மக்கள் வேதனையில் மூழ்கிக் கிடக்கும் போது 'சிஸ்டம் கெட்டு விட்டது' என்று டயலாக் பேசி அரசியலுக்கு வர ஆசைப்பட்ட ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு ஷுட்டிங் வேலைகளுக்காகச் சென்றிருக்கிறார். அங்கே பேச்சுக்குக்கூட ஊடகங்களைச் சந்தித்து மக்களின் வேதனையில் தானும் பங்கேற்பதாக ஒரு வார்த்தை தெரிவிக்கவில்லை.
சமீபத்தில் வெளியான அவரது 'ஜெயிலர்' ரூ. 635 கோடியை வசூல் செய்ததாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. அதன் மூலம் அவரது மார்க்கெட் வேல்யூ இன்னும் அதிகரித்துள்ளது.
அந்த வருமானம் எல்லாம் தமிழக மக்கள் கொடுத்ததுதான். அதற்கு முன்னதாக வெளியான கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் இந்தியாவில் மட்டும் 307.60 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தியேட்டர்களில் மட்டும் அவர் படம் 432.50 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் செய்திகள் வெளியாகின. அவர் இப்போது பிக்பாஸ் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டி வருகிறார்.

கடைசியாக வெளியான விஜய்யின் 'லியோ' உலக அளவில் ரூ.600 கோடி வசூலானது. கடந்த சில ஆண்டுகளில் வெளியான 4 படங்களின் மூலம் மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் விஜய் சம்பாதித்திருப்பார் என்கிறார் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அவரது நிழலாக நின்றவர்களில் ஒருவர்.
அதைப்போலத்தான் அஜித். மழையில் நனைந்தவருக்குக் குடை கொடுத்தார். பைக்கில் வந்தவருக்கு ஹெல்மட் கொடுத்தார் எனப் பல பில்ட் அப் செய்திகள் அவரைப் பற்றி வெளியாகிக் கொண்டேதான் உள்ளன. இந்த மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் கூட அமீர்கானுக்கு தங்க இடம் அளித்தார் என பில்ட் அப் செய்திகள் வந்தன.
ஆனால், ஒரு மாநிலத்தின் மக்கள் துயரத்தில் கிடக்கும் போது அவர் கொட்டிக் கொடுக்கவில்லை என்றாலும் கிள்ளியாவது தந்திருக்கலாம். கடைசியாக வெளியான அவரது 'துணிவு' உலக அளவில் ரூ.250 கோடியை வசூல் செய்தது.

அந்தளவுக்குப் பண வசதி கொண்ட பெரும் நடிகர்கள் யாரும் திட்டமிட்டு ஒரு பைசா கொடுக்காமல் தவிர்ப்பதற்குள் ஏதோ அரசியல் இருக்கிறது என்கிறார்கள்.
இந்த விசயத்தில் ரஜினி, மத்திய அரசின் 'மூவ்' என்ன என்று பார்த்து அதற்கு ஏற்ப காய் நகர்த்தலாம் என முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருங்கியவர்கள் சொல்கிறார்கள்.
எந்த மாநிலத்தில் அவர் வாழ்கிறாரோ அந்த மாநில மக்களின் மனசாட்சியாகத்தானே அவர் இருக்க வேண்டும்? அப்படி இல்லாதது பெரிய துரோகம் இல்லையா ? என்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்.
அன்றைக்குத் தூத்துக்குடி கலவரத்தில், சம்பந்தமே இல்லாமல் வந்து நக்ஸ்லைட்கள் ஊடுருவி விட்டனர் என்று வாய் மலர்ந்தவர், இன்றைக்கு அரசியல் அல்லாத ஒரு வெள்ள நிவாரண விசயத்தில் வாய்மூடிக் கொண்டிருக்கிறார் என்றால் அது தான் ரஜினியின் உண்மை முகம் என்று அவர் சொல்கிறார்.

அதிகம் பிரபலம் இல்லாத, பெரிய அளவில் வருமானம் பார்க்காதா கலக்கப்போவது யாரு காமெடி நடிகர் பாலா கூட வீடு வீடாகப் போய் ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார். அந்த மனசுதான் சார் கடவுள் என்கிறார் இதே திரைத்துறையைச் சேர்ந்த காமெடி நடிகர் ஒருவர்.
இந்த வெள்ளத்தின் போது அதிக ட்ரெண்டிங்கில் இருந்த காமெடி நடிகர் மயில்சாமி. அவர் கடந்த 2015 வெள்ளத்தில் உதவியை மறக்காமல் இந்த வெள்ளத்தில் போது குறிப்பிட்டுப் பேசினர். அந்தளவுக்குப் பெயரைச் சம்பாதித்துவிட்டுச் சென்றுள்ளார் மயில்சாமி.
ஆனால், இந்த வெள்ள நிவாரண நேரத்தில் வழக்குத் தொடர்பாகப் பத்திரிகையைச் சந்தித்த ரஜினியின் மனைவி லதா கூட, அவரது கணவர் அரசியலுக்கு வராமல் ஏமாற்றியது வருத்தும் என்று பேசி இருக்கிறார்.
அவர் அரசியலுக்கு வந்திருந்தால், என்ன செய்திருப்பார் என்பதற்கு இந்த மழை வெள்ளமே சாட்சி. வாய்மூடி மௌனமாக இருக்கும் அவர், ஒப்புக்கு அவரது ரசிகர் மன்றம் சார்பாக உதவச் சொன்னதாக அவரது தரப்பிலிருந்து செய்தி வெளியிடப்பட்டது. வாகனங்கள் மூலம் நிவாரணம் அளித்ததைப் போல ஒரு தோற்றம் காட்டப்பட்டது.
சிறிய வேடங்களில் நடிக்கும் நடிகராக அறியப்பட்ட, மயில்சாமிக்குக் கிடைத்த பெயர்கூட சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அந்த விசயத்தில் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
அவரைப் போலவே கமல். அவரே ஒரு கட்சியை நடத்துகிறார். பல நாள் மழை வெள்ளம் வடிந்த பிறகு போய் எண்ணூர் எண்ணெய் கசிவை ஆய்வு செய்தார். அப்படியே போய் அதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் மைலேஜ் வேண்டிப் பேசினார்.
அதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ட்விட்டரில் பாரதியைப் போல் வேஷம் போட்டுக்கொண்டு காட்சி அளிக்கும் கமல், புயல் காலத்தில் எப்படி மக்களுக்கு உதவ வேண்டும் என்பது பற்றி பாரதியைப் படித்து விட்டாவது பாடம் கற்ற வேண்டும்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications