பல நூற்றாண்டுகளாக தீபாவளியை கொண்டாடாத ஒரே இந்திய கிராமம்.! விடாமல் தொடரும் கர்ப்பிணி பெண்ணின் சாபம்
சென்னை: இந்தியாவில் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படும் நாளாகத் தீபாவளி இருக்கிறது. இந்த நாளில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகத் தீபாவளியைக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், ஒரு கிராமம் மட்டுமே தீபாவளியைக் கொண்டாட முடியாமல் இருக்கிறது. அது என்ன கிராமம்.. பின்னணி காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
நாடு முழுக்க உற்சாகமாகக் கொண்டாடப்படும் நாளாகத் தீபாவளி இருக்கிறது. ஒளி மிகுந்த திருவிழாவான தீபாவளியை நாடு முழுக்க உள்ள 140 கோடி மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்தியர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொண்டு வரும் இந்த விழாவை, ஒரு கிராமம் மட்டும் பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

இமாச்சலப் பிரதேச கிராமம்
சில கிராமங்கள் தங்கள் ஊர்களில் இருக்கும் பறவை, விலங்குகள் காரணமாகக் கடந்த சில ஆண்டுகள் தீபாவளி கொண்டாடாமல் இருந்து நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்தி கிராமம் பல நூறு ஆண்டுகளாகவே தீபாவளியைக் கொண்டாடுவதில்லையாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சம்மூ என்ற சிறிய கிராமம் தான் அது. அவர்கள் ஏதோ ஓரிரு ஆண்டுகள் மட்டும் தீபாவளியைக் கொண்டாடாமல் இல்லை. அவர்கள் பல நூற்றாண்டுகளாகத் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. இதற்குப் பின்னணியில் ஒரு பெண்ணின் சாபம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கணவனை இழந்த அந்த பெண், கணவனின் உடலுக்கு மேல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாராம். அப்போது அவர் விட்ட சாபம் காரணமாகக் கிராமம் தீபாவளி கொண்டாடுவதில்லையாம். அந்த பெண்ணின் கதையைக் கேட்டாலே நமக்குச் சற்று பயமாக இருக்கும்.
உயிரிழப்பு
அதாவது அந்த பெண் தனது இறந்த கணவனின் உடலுக்கு மேல் தீக்குளித்து உயிரிழந்துள்ளார். அந்த நாளில் சாபமிட்டதிலிருந்து அந்த கிராமத்தால் தீபாவளியைக் கொண்டாட முடிவதில்லையாம். ஒருவேளை அந்த கிராமத்தில் எதாவது ஒரு குடும்பத்தினர் தீபாவளியைக் கொண்டாடினால் அங்கு மரணமும், பேரழிவும் ஏற்படும் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள்.
கிராமத்தில் சில இடங்களில் மட்டும் மண் விளக்குகளை ஏற்றுகிறார்கள். இருப்பினும், பட்டாசு வெடித்தல், இசை வாசித்தல் போன்ற கொண்டாட்டங்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை.. இதுதான் அங்கு எழுதப்படாத விதியே இருக்கிறதாம். இன்னுமே கூட அங்குப் பல உள்ளூர்வாசிகள் தீபாவளி அன்று வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.. சாபத்தின் காரணமாக ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
அதென்ன சாபம்?
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கர்ப்பிணிப் பெண் தனது கணவருடன் தீபாவளி கொண்டாடக் காத்துக் கொண்டிருந்தார். அங்கு மன்னரின் படையில் போர் வீரராக இருந்த தனது கணவர் வீட்டிற்கு வருவார் என அந்த பெண் ஆவலாக இருந்தார். இருப்பினும், அப்போது அவரது கணவன் வரவில்லை. மாறாக அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர்.
இந்தத் துயரத்தால் மனம் உடைந்த அந்தப் பெண், இனிமேல் கிராம மக்கள் தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்று சாபமிட்டு, தனது கணவனின் உடலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.. இதில் அந்த பெண்ணும் அவளது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துவிட்டது. அப்போது அந்த பெண் விட்ட சாபம் காரணமாகவே சம்மூ கிராம மக்கள் தீபாவளியைக் கொண்டாட முடியாமல் போனது. கிராம மக்கள் தீபாவளியைக் கொண்டாடிய போதெல்லாம் மரணமும், பேரழிவும் நிகழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.
தொடரும் சாபம்
இது தொடர்பாக அங்கு வசித்து வந்த வயதான நபர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் தீபாவளியைக் கொண்டாட முயலும் போதெல்லாம், யாராவது இறக்கிறார்கள் அல்லது கிராமத்தில் ஒரு பேரழிவு ஏற்படுகிறது. இதனால் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் எனச் செய்தோம்" என்கிறார்.
பெண்ணின் சாபத்தை நீக்கப் பல ஆண்டுகளாகக் கிராம மக்கள் பல்வேறு சடங்குகள் மற்றும் மத வழிபாடுகளைச் செய்துள்ளனர். இருப்பினும், அது எதற்கும் பலன் இல்லை.. நூற்றாண்டுகளைக் கடந்தும் அந்த பெண்ணின் சாபம் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications