Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்ல வாய்ப்பு.. ஏன் அப்படி ஒரு முடிவெடுத்தார் ஸ்டாலின்.. எழும் விமர்சனங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் அதிமுகவை கேள்விகள் திணறடித்திருக்கலாமே.. ஏன் சட்டசபையை திமுக புறக்கணித்தது என்று விமர்சனங்கள் எழுகின்றன. ஒவ்வொரு துறைவாரியாக அரசின் நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கி நெருக்கடி கொடுத்திருக்கலாமே என்று சமூக வலைதளங்களில் குரல்கள் எழும்பி இருப்பதை பார்க்க முடிகிறது,.

சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாள் என்பது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.
அப்போது ஸ்டாலின் மற்றும் ஆளுரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்டாலினுக்கு பேச மைக் வசதி தரப்படவில்லை. அத்துடன் பேசவும் அனுமதிக்கப்படவில்லை.

ஸ்டாலின் வாக்குவாதம்

ஸ்டாலின் வாக்குவாதம்

இதற்கிடையே . சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் கூறுகையில் ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்பு நான் எழுந்து பேசுவதற்கு முயற்சித்தேன். ஆனால் ஆளுநர் என்னைப் பேச அனுமதிக்கவில்லை.

கடைசி பட்ஜெட்

கடைசி பட்ஜெட்

ஆளுநர் பேசியதில், எனக்குப் பிடித்தது-உண்மையானது என்னவென்றால், 'இதுதான் கடைசி பட்ஜெட்' என்று சொன்னார். அதுதான் உண்மை. அதனை உள்ளபடியே நாங்கள் வரவேற்கிறோம். எனவே இந்த ஆளுநர் உரையைப் பொறுத்தவரையில் திமுகவின் சார்பில் புறக்கணிப்பதாக முடிவு செய்திருக்கிறோம்.

ஆதாரங்கள் உள்ளது

ஆதாரங்கள் உள்ளது

அதற்குக் காரணம் கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி ஆளுநரைச் சந்தித்து இந்த அதிமுக அரசின் மீது-முதல்வர் மீது-துணை முதல்வர் மீது-அமைச்சர்கள் மீது இருக்கும் ஊழல் புகார்களை பொத்தாம் பொதுவாக இல்லாமல், ஆதாரங்களைத் திரட்டி, ஏற்கனவே நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கும் வழக்குகளையொட்டி ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறோம். இதுவரையில் ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆளுநரைப் பொறுத்தவரையில் முதல்வருக்கு-அமைச்சர்களுக்குப் பக்கபலமாக - ஊழலுக்குத் துணை நிற்கிறார் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.

புறக்கணிக்க முடிவு

புறக்கணிக்க முடிவு

அதுமட்டுமின்றி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையைத் தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி 2 ஆண்டுகளுக்கு முன்னால் அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரையில் அதற்கும் எந்தவிதமான முறையான பதிலும் இல்லை. விடுதலை செய்வதற்கான சூழலையும் ஆளுநர் உருவாக்கவில்லை. எனவே அதையும் கண்டித்து நாங்கள் ஆளுநர் உரையை மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து கூட்டத்தொடர் முழுமையையும் புறக்கணிப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம் என்றார்.

கேள்விகள் கேட்டிருக்கலாமே

கேள்விகள் கேட்டிருக்கலாமே

இதற்கிடையே ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தொடரை திமுக புறக்கணிப்பதாக அறிவித்திருப்பதற்கு ஒருபக்கம் வரவேற்பு இருந்தாலும் மறுபக்கம் விமர்சனங்களும் எழுந்துள்ளன. துறைவாரியாக கேள்விகள் திணறடித்திருக்கலாமே. விவாவத்தில் பங்கேற்று தொகுதிவாரியாக செய்வதாக கூறி செய்யாமல் போனவற்றை கேட்டிருக்கலாமே.. விவாதம் என்பது மிக முக்கியமானது என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுகின்றன.

திமுக வெயிட்டிங்

திமுக வெயிட்டிங்

இதற்கிடையே சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடக்கும் என தெரிகிறது. அப்போது வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய திமுக விரும்பி இருக்கலாம் என்கிறார்கள். எனவே அடுத்த மாதம் நிச்சயம் ஸ்டாலின் , அதிமுகவை கேள்விகளால் திணறடிப்பார் என்கிறார்கள் திமுக அனுதாபிகள். சட்டசபை தேர்தல் நெருங்கும் அந்த வேளையில் வலுவான கேள்விகளை அதிமுக எதிர்கொள்ளவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+