நெஞ்சுக்கு நீதி.. 1 வாரம் ஹவுஸ் புல்! உதயநிதியை "இம்ப்ரஸ்" செய்ய குதித்த மா.செக்கள்.. காரணமே வேறயாம்
சென்னை: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகி உள்ள நிலையில் படத்தை பெரிய அளவில் ப்ரோமோட் செய்ய திமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் களமிறங்கி உள்ளனராம்.
திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்.. உதயநிதி ஸ்டாலின் படம் என்றாலே திமுகவினருக்கு கொண்டாட்டம்தான். 2012ல் ஓகே ஓகே படம் ரீலிஸ் ஆன போதே அதை திமுகவினர் திருவிழா போல கொண்டாடினர்.
திமுக மாவட்ட செயலாளர்கள் மாவட்ட வாரியாக தியேட்டர்களில் மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி குவித்து கொண்டாடினர். அந்த படமும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

நெஞ்சுக்கு நீதி
இந்த நிலையில்தான் அதேபோல் தற்போது நெஞ்சுக்கு நீதி படத்தையும் பெரிதாக கொண்டாட திமுகவினர் திட்டமிட்டு இருக்கிறார்களாம். இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா இயக்கத்தில் பெரிய ஹிட் அடித்த படம் ஆர்டிக்கள் 15. இதன் ரீமேக்தான் நெஞ்சுக்கு நீதி. போனிகபூர் தயாரிப்பில், அருண்குமார் காமராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக உதயநிதி இந்த படத்தில் நடித்து இருக்கிறார்.

பெரிய ஹிட்
இந்த நிலையில்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் நெஞ்சுக்கு நீதி படத்தை 1 வாரமாவது ஹவுஸ் புல்லாக ஓட வைக்க வேண்டும் என்ற திட்டத்தில் திமுக நிர்வாகிகள் இருக்கிறார்களாம். இது பற்றி தலைமை ஏதும் உத்தரவை போடவில்லை என்றாலும், திமுக நிர்வாகிகள் தாமாக முன் வந்து படத்தை ஓட வைக்க தீவிரமாக முயன்று வருகிறார்களாம். 1 வாரம் கண்டிப்பாக படத்தை ஹவுஸ் புல்லாக ஓட வைக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்களாம்.

ஹவுஸ் புல்
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட செயலாளர்கள் களமிறங்கி தீவிரமாக பணிகளை செய்து வருகிறார்களாம். தியேட்டர்களில் மொத்தமாக டிக்கெட் வாங்குவது, அதை தங்கள் பகுதி இளைஞர்களுக்கு கொடுப்பது. வீட்டிற்கு ஒரு குடும்பம் குடும்பமாக டிக்கெட் கொடுப்பது. போன் நம்பரை அழைத்து கேட்டால் இலவசமாக டிக்கெட் கொடுப்பது என்று சேவை செய்து வருகிறார்களாம். மாவட்ட செயலாளர்கள், தொகுதி எம்எல்ஏக்கள் மூலம் மொத்தமாக இதற்காக டிக்கெட் வாங்கப்படுகிறதாம்.

உதயநிதி ஸ்டாலின்
பொதுவாக உதயநிதி ஸ்டாலின் படம் வந்தாலே அதை திமுகவினர் பெரிதாக கொண்டாடுவது வழக்கம்தான். ஆனால் இந்த படத்தை திமுக நிர்வாகிகள் பெரிதாக ப்ரொமோட் செய்ய பெரிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி தற்போது திமுக உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. அடுத்த வாரம் ஒன்றிய கழகம், மாவட்ட கழக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான நியமனத்தில் பெரும்பாலும் உதயநிதி ஆதரவாளர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.
Recommended Video

நெஞ்சுக்கு நீதி படம்
அதேபோல் மாவட்ட செயலாளர்கள் இந்த ஒன்றிய கழக நிர்வாகிகள் நியமனத்தை வைத்தே உள்ளூர் அளவில் அரசியல் செய்ய முடியும். இந்த நிலையில் உதயநிதியிடம் குட் மார்க் வாங்க வேண்டும் என்று நிர்வாகிகள் பலர் இப்படி ஓடி ஓடி உழைப்பதாக கூறப்படுகிறது. உதயநிதிக்கு ஆதரவாக பணிகளை செய்து அவரை இம்ப்ரஸ் செய்தால் தேர்தல் நேரத்தில் நமக்கு பதவி கிடைக்கும் என்று நிர்வாகிகள் நினைக்கிறார்களாம்.

ஏன் இந்த முறை அதிகம்?
இதனால் வழக்கத்தை விட இந்த முறை அதிகமாக ப்ரோமோஷன் செய்ய திட்டமிட்டு உள்ளனராம். பெரிய கட் அவுட் வைப்பது, வித்தியாசமாக ப்ரோமோஷன் செய்வது என்று எதையாவது செய்து உதயநிதி ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் திட்டத்தில் இருக்கிறார்களாம். இன்னொரு பக்கம் ஐடி விங்கும் இந்த விவகாரத்தில் களமிறங்கி உள்ளதாம். படத்திற்கு இணையத்தில் முடிந்த அளவு பாசிட்டிவ் ரிவ்யூ கொடுக்க வேண்டும் என்று ஐடி விங்கை களமிறங்க "மேலிட" உத்தரவு சென்று இருப்பதாக அறிவாலய பட்சிகள் சொல்கின்றன.












Click it and Unblock the Notifications