அனைவருக்கும் எல்லாம் கிடைக்கனும்.. திமுக மகளிர் மாநாடு இதற்காகத்தான்.. கனிமொழி அழைப்பு
சென்னை: திமுகவின் மகளிர் உரிமை மாநாடு இந்தியாவில் பெண்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் களமாகவும், பெண் உரிமை மற்றும் மகளிர் நலனில் அக்கறை கொண்ட தலைவர்களை ஒருங்கிணைக்கும் பாலமாகவும் அமையும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
அனைத்து நிலைகளிலும் பெண்களின் முன்னேற வேண்டும் என்பதே திமுக மகளிர் உரிமை மாநாட்டின் நோக்கம் எனக் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள பொதுமக்களையும் குறிப்பாக பெண்களையும் வரவேற்பதாக கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இது டொடர்பாக கனிமொழி கூறியதாவது;

''கலைஞர் நூற்றாண்டை ஒட்டி இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைசிறந்த பெண் ஆளுமைகள் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'மகளிர் உரிமை மாநாட்டை' திமுக மகளிர் அணி நடத்தவிருப்பதை பெருமையுடன் அறிவிக்கிறேன். சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில் நாளை மாலை 4.30 மணியளவில் இம்மாநாடு நடைபெறும்.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களின் குரல் உரிய பிரதிநிதித்துவத்தோடு ஒலிக்கும் விதமாக 'பெண்கள் இடஒதுக்கீடுச் சட்டம்' நனவாகவும், நாடெங்கிலும் உள்ள பெண்களும் குழந்தைகளும் தொடர்ந்து வன்முறைக்கு உள்ளாகும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் பெண்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். அதற்கான ஒரு தளமாக இம்மாநாடு அமையவிருக்கிறது.
இந்த மாநாடு மகளிர் இடஒதுக்கீடு மசோதா, ஒன்றிய அரசால் நிகழ்த்தப்படும் அநீதிகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் கட்டாயம், நாடாளுமன்ற தொகுதி வரையறை, இந்தியக் குடிமக்கள் எதிர்க்கொள்ளும் பல்வேறு இன்னல்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் .
இம்மாநாடு இந்தியாவில் பெண்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் களமாகவும், பெண் உரிமை மற்றும் மகளிர் நலனில் அக்கறை கொண்ட தலைவர்களை ஒருங்கிணைக்கும் பாலமாகவும் அமையும். முக்கியமான பிரச்சினைகளில் கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் நேர்மறையான மாற்றங்கள் கொண்டு வருவதும், அனைத்து நிலைகளிலும் பெண்களின் முன்னேற்றமும் இந்த நிகழ்வின் நோக்கங்கள்.
இந்த முக்கியமான நிகழ்வில் கலந்து கொண்டு மகளிர் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவம் குறித்த கருத்துப் பரிமாற்றங்களில் பங்கேற்க ஊடக நண்பர்களையும், பொதுமக்களையும் குறிப்பாக பெண்களையும் திமுக மகளிர் அணி அன்புடன் அழைக்கிறது.''
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications