Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 மாநிலங்களில் கிளீன் போல்ட்டான காங்கிரஸ்! கெட்டதில் ஒரு நல்லது.. சந்தோஷத்தில் திமுக! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 4 மாநில சட்டசபை தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜகவிடம் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து உள்ளது. காங்கிரசின் இந்த படுதோல்வி திமுகவிற்கு கூட்டணி என்ற ரீதியில் வருத்தத்தை கொடுத்திருக்கும் என்றாலும்.. அரசியல் ரீதியாக வேறு விதமாக திமுக தரப்பை இந்த தரப்பு குஷிப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன. . மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, சரத் பவார், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த கூட்டணியில் கரம் கோர்த்து உள்ளனர்.

Why DMK is slightly happy with Congress losing 3 states out of 4 in State elections

ஆனால் இந்தியா கூட்டணியை மதிக்காமல் இந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தனியாக நிற்க முயன்றது. முக்கியமாக வடக்கில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் இரண்டிலும் காங்கிரஸ் தனியாக நின்றது. மத்திய பிரதேசத்தில் கூட்டணியை சட்டசபை தேர்தலில் தொடர காங்கிரஸ் விரும்பவில்லை. அங்கே வலுவாக இருக்கும் பகுஜன் சமாஜ் உடனே கூட்டணி இல்லை. இந்திய கூட்டணியில் பகுஜன் சமாஜ் இல்லை.

குறைந்தபட்சம் இந்தியா கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. ராஜஸ்தான்: அதேபோல் ராஜஸ்தானிலும் இந்திய கூட்டணி கட்சிகளுடன் இணையாமல் தேர்தலை சந்தித்தது காங்கிரசின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

( காங்கிரசை காலி செய்த உதயநிதி ஸ்டேட்மென்ட்? வடக்கில் காங்கிரஸ் வீழ காரணமான சனாதனம்)

இந்தியா கூட்டணி முக்கியத்துவம்: இப்போது 5 மாநிலங்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்து இருப்பது.. காங்கிரசுக்கு இந்திய கூட்டணியின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அதோடு இல்லாமல்.. காங்கிரசுக்கு தான் பெரிய தேசிய கட்சி என்று இருக்கும் மிதப்பை உடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு இந்த தோல்வி பெரிய பாடத்தை, மிகப்பெரிய அளவில் தன்னடக்கத்தையும் கூட கொடுக்கும்.

திமுகவிற்கு நல்ல செய்தி: அதோடு இல்லாமல் கூட்டணி கட்சிகளிடம் அதிக இடங்களை கேட்க முடியாத நிலையை காங்கிரசுக்கு இது கொடுக்கும். மாநிலங்களில் வலிமை இன்றி காணப்படும் காங்கிரஸ்.. மாநில கட்சிகளிடம் அதிக இடங்களை கேட்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.

திமுகவிற்கு கூட்டணி ரீதியாக கூடுதல் பவரை கொடுக்கும். திமுக கொடுக்கும் இடங்கள்தான் இறுதி, அவர்கள் வைப்பதே கூட்டணியில் சட்டம். காங்கிரஸ் நினைத்த இடங்களை கேட்டு வாங்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தும்.

2024 லோக்சபா தேர்தலுக்கு காங்கிரசுக்கு கடந்த முறை போல 10 இடங்களை கொடுக்காமல் 7 இடங்களுக்குள் சுருக்கும் முடிவில் திமுக உள்ளதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் காங்கிரசின் தோல்வி.. திமுகவிற்கு கூட்டணி ரீதியாக அதிக பவரை கொடுக்கும்.

காங்கிரஸ் தோல்வி: வெளியாகி உள்ள சட்டசபை தேர்தல் முடிவில்.. மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றிபெறும் நிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக வெற்றிபெறும் நிலையில் உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. சத்தீஸ்கரில் பாஜக வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.மிசோராமில் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்படவில்லை. நாளை நடக்க உள்ளது.

Why DMK is slightly happy with Congress losing 3 states out of 4 in State elections

மத்திய பிரதேசத்தில்., பாஜக 164 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 64 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும். அங்கே சாரதான வெற்றி இல்லாமல் மாபெரும் இமாலய வெற்றியை நோக்கி பாஜக சென்று கொண்டு இருக்கிறது. இந்தியா கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் களமிறங்கியது அங்கே பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளது.

அதேபோல் ராஜஸ்தானில் பாஜக 109 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 74 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 200 இடங்களில் மெஜாரிட்டி பெற 101 இடங்கள் போதும். சத்தீஸ்கரில் ., பாஜக 57 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 64 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற அங்கே 90 இடங்களில் 46 இடங்கள் போதும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+