திமுக இப்படி செய்யலாமா?.. "அந்த" முக்கிய நிகழ்வு.. கனிமொழியை அழைக்காதது ஏன்?.. வெடிக்கும் சலசலப்பு
திமுக விழாவில் கனிமொழி பங்கேற்காதது ஏன் என்ற சலசலப்பு எழுந்துள்ளது
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு இதழான தி ரைசிங் சன் இதழ் வெளியீட்டு விழாவில், திமுக எம்பியுமான கனிமொழி கொள்ளாதது சலசலப்பை கிளப்பி உள்ளது.. கருணாநிதியின் மகளுக்கே அழைப்பு இல்லையா? என்று அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தன்னுடைய அரசியல் கட்சிக்கு முரசொலி பத்திரிகையை அடித்தளமாக்கியவர் கருணாநிதி.. தன்னுடைய கருத்துக்களை, மனஓட்டங்களை, கட்சியின் நகர்வுகளை முரசொலியை வைத்துதான் வெளிப்படுத்தி கொண்டிருந்தார்.
இதேபோல ஆங்கிலத்திலும் ஒரு பத்திரிகை இருக்க வேண்டும் என்பது அவரது பல வருட எண்ணமாக இருந்தது.. காரணம், திமுகவின் கொள்கைகளையும், கருத்துக்களையும் பிற மாநில மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

தமிழகம்
அதனாலேயே தி ரைசிங் சன் என்ற ஆங்கில இதழ் தொடங்கப்பட்டது.. ஆனால் ஒருசில சிக்கல்களால் அது நிறுத்தப்பட்டும் விட்டது. இப்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்தடுத்த தேர்தல்கள் வர உள்ள நிலையில், இந்தியாவில் மிக முக்கிய கட்சியாக திமுக உருவெடுத்து வரு நிலையில், மற்ற மாநிலங்களிலும் கட்சியின் சிறப்பையும், செயல்பாட்டையும் அறிய மறுபடியும் 'தி ரைசிங் சன்' தொடங்கப்பட்டுள்ளது...

உதயநிதி
திமுகவின் அதிகாரப்பூர்வ இதழ் இது.. மாதம் 2 முறை வெளியாகும். அறிவாலயத்தில் கடந்த 26ம் தேதி வெளியிடப்பட்டது... முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்... இதழின் முதல் பிரதியை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு மற்றும் ஆசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்... இந்த விழாவில் உதயநிதியும் பங்கேற்றிருந்தார்.

சந்தேகம்
ஆனால், எம்பி கனிமொழி மட்டும் மிஸ்ஸிங்.. கருணாநிதியின் மகள் என்ற முறையிலும் அவர் விழாவிலும் கலந்து கொள்ளவில்லை.. திமுகவின் மாநில மகளிரணி செயலாளர் என்ற முறையிலும் அவர் விழாவில் கலந்து கொள்ளவில்லை.. எம்பி என்ற முறையிலுமை கலந்துகொள்ளவில்லை... இதுதான் சலசலப்பாக வெடித்து கிளம்பி உள்ளது... அவர் ஏன் இந்த விழாவில் இல்லை என்ற சந்தேகமும், ஆதங்கமும் அவரது ஆதரவாளர்களிடம் எழுந்துள்ளது.

களப்பணி
அதற்கு, "அழைப்பு இல்லை, அதனால் கலந்து கொள்ளவில்லை" என்ற பதில்கள் கிடைக்கிறது.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. இது தொடர்பாக 2 விதமான காரணங்களும் சொல்லப்படுகின்றன.. கனிமொழியை பொறுத்தவரை சமீப காலமாக படுசுறுசுறுப்பாக களப்பணியில் இறங்கி வருகிறார்.. சென்ற முறை சட்டமன்ற தேர்தல் வாக்கு திரட்டில், திமுகவில் முதல் ஆளாக களத்தில் குதித்தது கனிமொழிதான்..

தூத்துக்குடி
தேர்தல் முடிந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் டீம் ஒரு கள ரிப்போர்ட்டை திமுக மேலிடத்திடம் தந்தது.. அதில், தென்மாவட்டங்களில் திமுகவுக்கு இந்த முறை அதிக அளவு வாக்கு சதவீதம் கிடைத்துள்ளது, அதற்கு காரணம் கனிமொழியின் அதிரடிகள்தான் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்.. அதேபோல திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது தொற்று பாதிப்பு கட்டுக்கடங்காமல் இருந்தது.. அந்த சமயத்தில் தென்மண்டலங்களில் முகாமிட்டு, கிராமம் கிராமமாக சென்று தொற்றை தடுக்கும் முன்னெடுப்பை கனிமொழி மேற்கொண்டது அனைவருக்குமே வியப்பை தந்தது..

செல்வாக்கு
இப்போதும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் சூழலில் முன்கூட்டியே பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார் கனிமொழி.. எல்லாவற்றிற்கும் மேலாக, தொண்டர்களும் நிர்வாகிகளும் எளிதில் அணுகக்கூடிய தலைவராகவே திகழ்ந்து வருகிறார்.. இதனால் அவரது செல்வாக்கும் கூடி வருகிறது.. இதனை திமுகவின் மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள் சிலர் விரும்பவில்லை என்றும், அதனாலேயே கனிமொழியை இந்த விழாவுக்கு அழைக்காமல் இருந்திருக்கலாம் என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

வதந்தி
ஆனால், மற்றொரு தரப்பிலோ, இதெல்லாம் கட்டுக்கதை.. தேவையில்லாமல் புரளியை கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.. உள்ளாட்சி தேர்தல் நெருங்கி உள்ள சூழலில் அவரவர் வெளிமாவட்டங்களில் பிஸியாக பிரச்சாரத்தில் உள்ளனர்.. மேலும் இந்த ஒரு விழாவில் பங்கேற்காததை வைத்து, ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்படுகிறார் என்று சொல்லிவிட முடியாது..

ஸ்டாலின்
கனிமொழியை தவிர்க்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.. அதுவும் தேர்தல்கள் வர உள்ள நிலையில், நிச்சயம் இப்படி ஒரு எண்ணம் மேலிடத்துக்கு இருக்க வாய்ப்பே இல்லை.. யதேச்சையாக நடந்ததையெல்லாம் விவகாரமாக்க கூடாது என்கிறார்கள்.. இதில் எது உண்மையோ தெரியவில்லை.. ஆனாலும், திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த விழாவில், கருணாநிதியின் செல்ல மகள், கனிமொழி கலந்து கொள்ளாதது வருத்தம்தான் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி











Click it and Unblock the Notifications