சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காரணமே "அவர்"தானாமே.. துரைமுருகனுக்கு வந்த திடீர் போன்.. விரட்டும் பாஜக.. திமுகவில் என்ன நடக்கிறது?

துரைமுருகனின் துபாய் பயணம் திடீரென ரத்தானது குறித்த தகவல் கசிந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகனின் துபாய் பயணம் ஏன் கடைசி நேரத்தில் கேன்சல் ஆனது? நெஞ்சுவலி என்ற பொய்யான தகவல் எப்படி பரவியது என்பது குறித்த தகவல்கள்தான் தற்போது வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

அரசுமுறை பயணமாக துபாய்க்கு சென்று விட்டு நேற்று முன்தினம் அதிகாலையில் சென்னை திரும்பியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்...

சென்னைக்கு நள்ளிரவிலேயே ஏர்போர்ட்டில் வந்திறங்கிய முதல்வரை துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்றனர்...

ஸ்டாலினை நள்ளிரவில் வரவேற்ற துரைமுருகன்.. திடீர்னு வந்த புதுசிக்கல்.. என்னனு பாருங்க..!ஸ்டாலினை நள்ளிரவில் வரவேற்ற துரைமுருகன்.. திடீர்னு வந்த புதுசிக்கல்.. என்னனு பாருங்க..!

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

ஏர்போர்ட்டில் இருந்து ஸ்டாலின் புறப்பட்டதும் அமைச்சர்களும் தங்களது வீடுகளுக்கு கிளம்பிச் சென்றனர். வீட்டிற்கு சென்ற துரைமுருகன் மறுபடியும் அன்றைய தினம் காலையில் தனிப்பட்ட பயணமாக துபாய் செல்ல மறுபடியும் ஏர்போர்ட் வந்திருந்தார். அவரிடம் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், பாஸ்போர்ட்டில் விசா எண் தவறாக உள்ளதால், விமான பயணத்துக்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். இதனால், திகைத்து போன துரைமுருகன் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு மறுபடியும் வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார்.

 விமான பணியாளர்கள்

விமான பணியாளர்கள்

பாஸ்போர்ட்டில் விசா நம்பர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததை திருத்தம் செய்துவிட்டு, அன்று மாலை 6:50 மணிக்கு மறுபடியும் 'ஏர் இந்தியா' விமானத்தில் துபாய் செல்வதற்காக வந்தார். விமானத்தில் ஏறியும் உட்கார்ந்துவிட்டபோதுதான், அந்த போன் வந்துள்ளதாக தெரிகிறது.. பிறகு, விமான பணியாளர்களை அழைத்து, நான் பயணம் செய்ய விரும்பவில்லை என்று சொல்லிவிட்டாராம்.. எனவே, துரைமுருகன் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.. இதன் காரணமாகவே அந்த விமானம், 10 நிமிடம் தாமதமாகவும் புறப்பட்டு சென்றுள்ளது.

 துரைமுருகன்

துரைமுருகன்

இப்படிப்பட்ட சூழலில்தான், துரைமுருகனுக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அதனாலேயே அவர் துபாய் செல்வதை தவிர்த்து, அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றதாகவும் காரணம் சொல்லப்பட்டது. ஆனால், இந்த தகவலை அவரது மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த் மறுத்தார்.. தன் தந்தை உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக விளக்கமும் தந்தார்.. அப்படியானால் உண்மையிலேயே துரைமுருகனுக்கு என்னதான் நடந்தது? ஏன் திடீரென பயணத்தை கேன்சல் செய்தார் என்ற குழப்பமும் சந்தேகமும் வட்டமடித்தது.

 பயணம் ரத்து

பயணம் ரத்து

இதையொட்டி சில தகவல்களும் கசிந்து வருகின்றன.. முதல்வர் துபாய் பயணத்தின்போது, தன்னையும் அழைத்துச் செல்வார் என்று துரைமுருகன் பெரிதும் எதிர்பார்த்தாராம்.. அது நடக்கவில்லை... அதனால், அதிருப்தியில் இருந்த துரைமுருகனை சரிக்கட்டவே, துபாயில் முதல்வர் மேற்கொண்ட பணிகளை துரிதப்படுத்துவதற்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டதாம்.. ஆனால், முதல்வருக்கு நெருக்கமானவர்கள், துரைமுருகனின் இந்த பயணத்தை விரும்பவில்லை என்கிறார்கள்.

 போன் தகவல்

போன் தகவல்

அதனாலயே செல்போன்மூலம் விமானத்தில் உட்கார்ந்திருந்த துரைமுருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம். விமான ஊழியர்களிடம் உடல் நலக் குறைவு காரணம் காட்டி, விமானத்தில் இருந்து இறங்கிவிட்டதால், அந்த காரணம்தான் கசிந்து மீடியாக்களில் வெளியாகி விட்டது. துரைமுருகன் பயண ரத்துக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. துபாய் பயணத்தை வைத்து பாஜக தேவையில்லாமல் பிரச்சனையை கிளப்பி கொண்டிருப்பதால், துரைமுருகனும் துபாய் சென்றால் மேலும் சிக்கலாகும் என்பதால் இந்த பயண திட்டத்தை இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டதாம்.. துரைமுருகனின் துபாய் பயணம் ரத்து குறித்து இப்படி பல காரணங்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன..!

 குழப்பம் தீர்ந்தது

குழப்பம் தீர்ந்தது

துபாய் பயணத்தை வைத்து பாஜக தேவையில்லாமல் பிரச்சனையை கிளப்பி கொண்டிருப்பதால், துரைமுருகனும் துபாய் சென்றால் மேலும் சிக்கலாகும் என்பதால் இந்த பயண திட்டத்தை இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டதாம்.. துரைமுருகனின் துபாய் பயணம் ரத்து குறித்து இப்படி பல காரணங்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன..!

English summary
why dmk senior leader duraimurugan canceled his dubai trip in the last minute
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X