ஸ்டாலின் ஆக்சனால் மிரண்டு போன டெல்லி.. எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு பாஜக டாப் அப்படி பதறியது ஏன்? காரணம்
சென்னை: பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு தேசிய அளவில் பாஜக தலைவர்கள் பலர் ரியாக்சன் கொடுத்து இருப்பது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முதல்நாள் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு பாஜகவை அதிர வைத்து உள்ளது. இதற்கு எதிராக பாஜகவினர் 10-12 பேர் அன்று இரவே மதுரையில் போராட்டங்களை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து எஸ்.ஜி.சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாஜவின் மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்.
தொடர்ந்து கடுமையான போஸ்ட்டுகளை போடுவது இவரின் வழக்கம். அதே சமயம் இவர் சில நேரங்களில் ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளை வைப்பது, வதந்திகளை பரப்புவதை வழக்கமாக வைத்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
முக்கியமாக திமுகவிற்கு எதிராக இவர் தொடர்ச்சியாக வதந்திகளை பரப்புவதாக திமுகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் இவர் ஆதாரம் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட போஸ்ட் ஒன்று பெரிய சர்ச்சையானது.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அதில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்.
எங்கே உங்கள் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்! ஆளும் பாஜக அரசுக்கு எதிராக என்றால் உடனே முந்திக்கொண்டு வருவீர்கள். இப்போது எங்கே சென்று விட்டீர்கள்? பதுங்கி விட்டீர்களா அல்லது பம்மி விட்டீர்களா? பிரிவினை வாதம் பேசி சிவப்பு கொடியை போர்த்தி கொண்டு அரசியல் செய்யும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே" என சு.வெங்கடேசனை கடுமையாக தாக்கி போஸ்ட் செய்து இருந்தார் எஸ்.ஜி.சூர்யா.
இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த எஸ்.ஜி.சூர்யா மீது சிபிஐஎம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில்தான் சூர்யா கைது செய்யப்பட்டார்.
போலீசார் சென்னை தி.நகரில் எஸ்.ஜி.சூர்யாவை அதிரடியாக கைது செய்தனர்.பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு தேசிய அளவில் பாஜக தலைவர்கள் பலர் ரியாக்சன் கொடுத்து இருப்பது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய அளவில் பரபரப்பு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்துள்ள போஸ்டில், மதிப்பிற்குறிய நாடளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அவர்களே,எஸ். ஜி சூர்யா கைதானது 'பொய்யா'? இல்லை கட்சி தொண்டர் சூர்யாவை முதல்வர் ஸ்டாலின் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைப்பது 'பீதியை பரப்புவதா'?
ஒரு சமூக பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காண நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உழைப்பது நம் கடமை. இந்த உழைப்பிற்கு ஆயுதம் வேறில்லை. இதற்கு கவசம் தேவையில்லை. இதுவே உண்மை, என்று கூறியுள்ளார்.
நிர்மலா சீதாராமன் தொடங்கி பாஜகவின் தேசிய தலைவர்கள் பலர் இந்த கைதை கண்டித்து உள்ளனர். மத்திய அமைச்சர்கள் பலர் வரிசையாக இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்ட் செய்து வருகின்றனர். முக்கியமாக தேசிய அளவிலான பாஜக ஐடி விங் ஐடிகள் திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
என்ன காரணம்? : டெல்லி பாஜக இந்த விவகாரத்தில் இவ்வளவு கடுமையாக கோபம் அடைய என்ன காரணம் என்று பாஜக வட்டாரத்தில் விசாரித்தோம், அதில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ள நிலையில் அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் கைதாகி வருகிறார்கள்.
முதல்வர் அடுத்து முக்கிய சிலரை கைது செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதிலும் பாஜகவின் டாப் தலைவர்கள் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பாஜக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
முக்கிய தலைவர்கள் கைது செய்யப்படும் முன் சிறிய தலைவர்கள் கைதுக்கு கடுமையான ரியாக்சன் கொடுத்தால்.. திமுகவை ஆக்சன் எடுப்பதில் இருந்து தடுக்க முடியும் என்பதற்காக பாஜக டெல்லி தலைமை களமிறக்கப்பட்டு உள்ளது என்று கூறுகின்றனர் பாஜக தலைவர்கள்.












Click it and Unblock the Notifications