இதுதான் அதிமுக! ஓபிஎஸ் ஒருபக்கம் ஆர்டர் போட.. இபிஎஸ் மறுபக்கம் கண்ட்ரோல் செய்ய.. எதிர்பாராத ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அலுவலகம் இன்று தொண்டர்களுக்கு திறக்கப்பட்டாலும் கட்சி நிர்வாகிகள் யாரும் அலுவலகத்திற்கு செல்லவில்லை.

Recommended Video

    சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி, ஓபிஎஸ் ஒரே அணியில் வர வேண்டும் - ஓ.பி.ரவீந்திரநாத்

    அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி ஓ பன்னீர்செல்வம் எதிர்ப்பை மீறி நடந்தது. இந்த பொதுக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஓ பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தனது தொண்டர்களுடன் சென்று அமர்ந்து இருந்தார்.

    இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் வென்றுவிட்டார்.

    இருந்தாலும் இன்னும் அதிமுக அலுவலக வழக்கில் ஓ பன்னீர்செல்வம் வெற்றிபெறவில்லை. ஜூலை 11ம் தேதி ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் செல்லும் வழியிலும், அதிமுக அலுவலகத்திற்கு வெளியிலும் அதிமுக நிர்வாகிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து வட்டாச்சியர் சார்பாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

    சீல் வழக்கு

    சீல் வழக்கு

    இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் 20ம் தேதி, அதிமுக அலுவலகத்தின் சீலை நீக்கி அதன் சாவிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என் சதீஷ்குமார் உத்தரவிட்டார். அதே சமயம் ஒரு மாதத்திற்கு, அதாவது நேற்று வரை அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் செல்ல கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

    உத்தரவு

    உத்தரவு

    உயர் நீதிமன்ற உத்தரவில், அதிமுக அலுவலகத்திற்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு சாவி கொடுக்கப்பட்டாலும், அவர் 1 மாதத்திற்கு தொண்டர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது, என்று கூறப்பட்டது. இந்த வழக்கிற்கு எதிராக தற்போது ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. ஓ பன்னீர்செல்வம் சட்டப்படி தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்.

    அதிகாரம்

    அதிகாரம்

    ஆனால் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவர் அதிமுக அலுவலகம் செல்ல நினைக்கவில்லை. கோர்ட் உத்தரவை மதிக்க வேண்டும் என்பதால் ஓ பன்னீர்செல்வம் அதிகாரம் இருந்து அதிமுக அலுவலகம் செல்லவில்லை. இன்னொரு பக்கம் கையில் அலுவலக கீ இருந்தும் எடப்பாடியும் அதிமுக அலுவலகம் செல்லவில்லை. அவர் இன்று தொண்டர்கள் கூட்டத்தோடு ஆரவாரமாக செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் எடப்பாடிக்கு எதிராக தீர்ப்பு வந்துவிட்டது.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை என்று தீர்ப்பு வந்துவிட்டது. இதனால் இன்று அவரும் அதிமுக அலுவலகம் செல்லவில்லை. இந்த நிலையில் இன்று தொண்டர்கள் அதிமுக அலுவலகம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக அங்கு போலீசும் குவிக்கப்பட்டது. ஆனால் தொண்டர்கள் யாரும் அதிமுக அலுவலகம் செல்லவில்லை. இதனால் அலுவலகமே வெறிச்சோடி காணப்பட்டது.

    என்ன ஆனது

    என்ன ஆனது

    தனது தொண்டர்கள் யாரும் அதிமுக அலுவலகம் செல்ல கூடாது என்று ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் அறிவுறுத்தி இருந்தார். அவரின் பேச்சை கேட்டு அவரின் ஆதரவாளர்கள் யாரும் இன்று அதிமுக அலுவலகம் செல்லவில்லை. இன்னொரு பக்கம் எடப்பாடியும்.. தீர்ப்பு நமக்கு சாதகமாக வரட்டும். அது வரை பொறுமை காப்போம். இப்போது ஆரவாரமாக செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளாராம். இதனால் எதிர்பாராத விதமாக இன்று அதிமுக அலுவலகத்திற்கு யாரும் செல்லாமல் அமைதி காத்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+