2 பேருமே பொதுச்செயலாளர் ஆக முடியாது.. சசிகலா - ஓபிஎஸ்சுக்கு ஒருசேர செக்.. எடப்பாடி "ஸ்மார்ட் கேம்"!
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் காரணமாக இனி சசிகலா - ஓ பன்னீர்செல்வம் இருவரும் அதிமுகவில் பொதுச்செயலாளர் ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆடிய ஸ்மார்ட் கேம் காரணமாக ஓபிஎஸ் - சசிகலா இரண்டு பேருக்கும் ஒரு சேர செக் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதிமுக செயற்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது தொடர்பாக தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த தீர்மானத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்பின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

தேர்தல் தீர்மானம்
இதையடுத்து பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது அதிமுக விதிப்படி, எம்ஜிஆர் விருப்பப்படி கட்சியில் பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய முடியும். இதனால் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த தீர்மானத்தின்படி 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொண்டர்கள் வாக்கு
தொண்டர்கள் வாக்களித்து பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட உள்ளார். அதாவது தொண்டர்கள் தேர்வு செய்து பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். இந்த தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிட முடியும். ஆனால் 10 மாவட்ட செயலாளர்கள் குறைந்தபட்சம் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

10 மாவட்ட செயலாளர்கள்
இதில் இன்னொரு முக்கியமான விதியும் உள்ளது. அதன்படி பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட 10 ஆண்டுகள் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். தலைமைக் கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்று விதி கொண்டு வரப்பட்டுள்ளது. 10 மாவட்ட செயலாளர்கள் போட்டியிட உள்ள வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதால் ஓ பன்னீர்செல்வம் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது சந்தேகம் ஆகியுள்ளது.

போச்சு
ஏனென்றால் ஓ பன்னீர்செல்வத்திற்கு 3 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. இதனால் ஓ பன்னீர்செல்வம் சட்ட ரீதியாக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலிலேயே போட்டியிட முடியாது. அதேபோல் சசிகலா 10 ஆண்டுகளாக அதிமுகவில் தொடர்ச்சியாக உறுப்பினராக இல்லை. இடை இடையே நீக்கப்பட்டு இருக்கிறார். இதனால் சசிகலாவும் பொதுச்செயலாளர் பதவியில் போட்டியிட முடியாது. இதன் காரணமாக இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் காரணமாக இனி சசிகலா - ஓ பன்னீர்செல்வம் இருவரும் அதிமுகவில் பொதுச்செயலாளர் ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆடிய ஸ்மார்ட் கேம் காரணமாக ஓபிஎஸ் - சசிகலா இரண்டு பேருக்கும் ஒரு சேர செக் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications