ஈஸ்டர் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? நோக்கம் என்ன?
சென்னை: ஈஸ்டர் பண்டிகை உலகமெங்கிலும் கிறிஸ்துவை விசுவாசிக்கும் மக்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிற பண்டிகையாக இருக்கிறது. ஈஸ்டர் என்ற வார்த்தை, கிரேக்க மொழி மற்றும் கிரேக்க மதத்திலிருந்து வந்தது ஆகும். இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலும் பற்றிய தான பின்னணிதான் புனித வெள்ளி (சிலுவையில் உயிர் தியாகம் செய்த நாள்) மற்றும் ஈஸ்டர் (மூன்றாம் நாள்) உயிர்த்தெழுந்த நாளை குறிக்கிறது. ஈஸ்டர் பண்டிகையின் உண்மையான பின்னணி என்ன என்பதையும், மற்றும் இதை பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்த ஈஸ்டர் பண்டிகை, ஒரே மாதத்திலோ, அல்லது ஒரே நாளிலோ வருவது இல்லை என்பது அநேகருக்கு தெரிந்திருக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இது கிறிஸ்துமஸ் பண்டிகையை போல் டிசம்பர் மாதத்தில் 25ஆம் தேதியில் கொண்டாடப்படுவது போல், ஈஸ்டர் திருநாள் குறிக்கப்பட்ட ஒரு நாளில் அனுசரிக்கப்படுவதில்லை. ஏனெனில் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் தொடங்கி சாம்பல் புதன் (Ash Wednesday) சுமார் 40 நாட்கள் என்ற கணக்கில் வைத்து, ஏப்ரல் மதத்தின் முதல் வாரத்தில் வரும் பவுர்ணமியை (Full moon) தொடர்ந்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தான் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

ஆதாரம்: வேதாகமத்தில் (அப்போஸ்தலர் 12:4) படி, "அவனை பிடித்து சிறைச்சாலையிலே வைத்து, பாஸ்கபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி", இதே வசனத்தை ஆங்கில வேதாகமத்தில் பாஸ்கபண்டிகைக்கு (Easter) என்று சொல்லப்பட்டிருப்பதை பார்க்கலாம். இந்த குறிக்கப்பட்ட (அப்போஸ்தலர் 12:4) வசனத்தில் மட்டுமே பாஸ்கபண்டிகைக்கு (Easter) என்றும், மற்ற இடங்களில், பாஸ்கபண்டிகைக்கு (Passover) என்ற வார்த்தை காணப்படும். வேதாகமத்தின் ஆதாரத்தின் படி பாஸ்க பண்டிகை என்பது, தேவன் எகிப்து தேசத்தில் உள்ள தலைச்சங்களை சங்கரித்தார், அதை இஸ்ரவேலர் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை நினைவு கூறும்படியாக நியமித்த நாள் தான் பாஸ்கபண்டிகை. எனவே ஈஸ்டர் என்பது உயிர்த்தெழுந்த நாளை குறிக்க அல்ல, அது பழைய ஏற்பாட்டின் பாஸ்க பண்டிகையை குறிக்கிறது.
ஏன் கொண்டாட வேண்டும் எப்படி கொண்டாடலாம்: Easter (Victory over the death), ஈஸ்டர் என்றால் மரணத்தின் மீது வெற்றி என்று அர்த்தம். இயேசு கிறிஸ்து மரணத்தையும், அவருடைய உயிர்தெழுதலையும் நினைவுகூறவும், அதை எப்படி அனுசரிக்க வேண்டும் என்பதை வேதாகமம் மிக தெளிவாக கூறுகிறது. இதை 1 கொரிந்தியர் 11 ஆம் அதிகாரத்தில், கர்த்தருடைய பந்தியை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் கர்த்தருடைய பந்தியை (Holy Communion), வேத சட்டத்தின்படி செய்வது என்பதுதான் பண்டிகை என்று வேதம் சொல்கிறது. எனவே வேதாகமத்தின் விதிகளின்படி நாம் அவருடைய புனித வெள்ளி மற்றும் உயிர்த்தெழுதல் நாளைக் கொண்டாட வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.












Click it and Unblock the Notifications