சிங்கங்களை விட்டுவிட்டு புலிகளை மட்டும் ஏன் தேசிய விலங்காக அறிவித்தோம்? வனத்துறை அதிகாரி விளக்கம்
சென்னை: நம் நாட்டில் சிங்கங்களும் இருக்கும் போது புலிகளை மட்டும் ஏன் இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்? இதற்கான காரணம் என்ன தெரியுமா? அது போல் புலிகளை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் வனத்துறை அதிகாரி தெளிவாக விளக்கியுள்ளார். இன்று (ஜூலை 29) சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்த வீடியோ புலிகள் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதுகுறித்து வனத் துறை அதிகாரி சதீஷ் நிர்மல் குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று நான் உங்களிடம் பேசப்படும் உயிரினம் புலி. இது நம் நாட்டின் தேசிய விலங்கு. புலிகளை ஏன் நம் தேசிய விலங்காக அறிவித்தோம். அந்த புலிகளை ஏன் கொண்டாடி வருகிறோம்.? 1923 ஆம் ஆண்டு நம் நாட்டின் தேசிய விலங்காக புலிகளை அறிவித்தோம். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

பொதுவாக புலிகள் நமது கலாச்சாரத்தோடும் பண்பாடோடும் ஒன்றிணைந்த ஒரு உயிரினம். அது மட்டுமல்லாமல் புலிகளிடம் இருக்கும் சக்தி, அதன் வலிமை, அதன் சுறுசுறுப்பு - இவையும் ஒரு காரணம்! சிங்கங்களும் நம் நாட்டில் இருக்கும் நிலையில் புலிகளை மட்டும் ஏன் நம் தேசிய விலங்காக அறிவித்தோம் என உங்களுக்கு கேள்வி எழலாம்.
பொதுவாக சிங்கங்கள் குஜராத் மாநிலத்தில் கிர் காடுகளில் மட்டுமே உள்ளன. ஆனால் புலிகள் இந்தியாவில் ஏறக்குறைய 17 மாநிலங்களில் உள்ளன. அதனால் புலிகளை தேசிய விலங்காக அறிவிக்க இதுவும் ஒரு காரணம். இந்தியாவை போல் 13 நாடுகளில் மட்டுமே புலிகள் உண்டு. அவை ரஷ்யா, சீனா, இந்தோனேஷியா, கம்போடியா, பூடான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் உள்ளன.
உலகம் முழுவதும் இருக்கும் புலிகளிலேயே 80 சதவீதம் இந்தியாவில்தான் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும்தான் சிங்கங்களும் புலிகளும் இரண்டுமே உள்ளன. புலிகளில் 6 வகையானவை உண்டு. இந்தியாவில் இருப்பதற்கு ராயல் பெங்கால் டைகர் என்பார்கள். மேற்கு வங்கத்தில் சுந்தரவனக் காடுகளில் இவை அதிகம் காணப்படும். இதை வங்கப்புலி என்றும் அழைப்பார்கள்.
அதுபோல் சுமத்தரன் டைகர், சைபீரியன் டைகர், இந்தோ சைனீஸ் டைகர், மலாயன் டைகர், சவுத் சீனா டைகர் என பல வகைகள் உண்டு. 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 3,682 புலிகள் உள்ளன. இந்திய அரசானது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகளை கணக்கெடுக்கிறது. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் புலிகள் இருக்கின்றனவா என்றால் ஒரு 17 மாநிலங்களில் மட்டுமே உள்ளது.
குறிப்பாக மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் புலிகள் உள்ளன. புலிகளின் எண்ணிக்கையில் நம் தமிழகம் 5 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் புலிகளை காக்க புலிகள் காப்பகங்களை வனத்துறையினர் அமைத்துள்ளனர். இந்தியா முழுவதும் 54 புலிகள் காப்பகங்கள் உள்ளன.
நம் தமிழகத்தில் 5 புலிகள் காப்பகம் உள்ளன. சத்தியமங்கலம், முதுமலை, களக்காடு முண்டந்துறை, ஆணைமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை ஆகியவை ஆகும். புலிகளுக்கும் அடையாளம் உண்டு. புலிகளை அதன் வரிகளை கொண்டு அடையாளப்படுத்துவோம். அது போல் புலிகளின் கால் தடத்தை வைத்தும் புலிகளின் நடமாட்டத்தை அறியலாம்.
புலிகளின் ஆயுட்காலம் என்பது ஏறக்குறைய 12 முதல் 15 ஆண்டுகள் ஆகும். விலங்கியல் பூங்காக்களில் இருக்கும் புலிகள் 20 ஆண்டுகள் கூட உயிர் வாழும். பொதுவாக ஒரு புலி 3 முதல் 5 குட்டிகள் வரை போடும். இதில் சில குட்டிகள் இறந்துவிடும். மீதிதான் வளரும். புலிகள் இரு ஆண்டுகள் மட்டுமே தனது குட்டிகளை தன்னுடன் வைத்துக் கொள்ளும்.
புலிகள் பதுங்கியிருந்து தாக்கக் கூடிய உயிரினம். மான்கள், காட்டு மாடுகளை அடித்து அவற்றை 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடும். தனது எல்லையை மரங்களில் நகத்தில் கீறல்களை போட்டு வரையறுத்துக் கொள்ளும். தனது சிறுநீரை வைத்தும் 4 புறங்களில் அதன் எல்லையை குறித்து வைத்துவிடும். அந்த இடத்திற்கு வேறு புலிகள் வந்தால் இந்த புலி ஒதுங்கி சென்றுவிடும்.
அப்படி வரும் போது இரு புலிகளுக்கும் சண்டை ஏற்பட்டு அதில் எது வெல்கிறதோ அதுவே அந்த இடத்தில் இருக்கும். கண் பார்வை திறன் புலிகளுக்கு அதிகம். புலிகளை ஏன் நாம் பாதுகாக்க வேண்டும்? காடுகளில் புலிகளே இல்லை என்றால் அந்த இடத்தில் தாவர உண்ணிகள் அதிகமாக இருக்கும். மான்கள் அதிகம் பெருகும்.
இதனால் அந்த இடத்தில் மரங்களாக வளரக் கூடிய சிறிய செடிகளை மான்கள் அழித்துவிடும். இதனால் காடுகளே உருவாகாது. புலிகளால்தான் அந்த சிறிய செடிகள் மரங்களாக உருவாகிறது. மரங்களால் மழை பெய்கிறது. இதனால் ஆறுகள் உருவாகிறது. மனித குலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் காடுகளில் புலிகள் இருக்க வேண்டும். புலிகளை பாதுகாக்க வனத்துறையுடன் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications