மோடியை ஏன் பிடிக்கும்? என்ன ஸ்பெஷல்? பாரிவேந்தர் ஓபன் டாக்!
சென்னை: தனி சின்னத்தில் போட்டியிடாமல் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதற்கான காரணம் என்ன? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் பாரிவேந்தர்.
கடந்த முறை திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாரிவேந்தர். இவரைப் போல திமுக கூட்டணியில் கடந்த முறை விசிக உள்ளிட்ட சில கூட்டணிக் கட்சிகள் திமுக சின்னத்தில் நின்று வென்றன.

கூட்டணிக் கட்சிகளின் மன மாற்றம்:
ஆனால், இந்த முறை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் தனிச் சின்னத்தில் தேர்தலை எதிர்கொண்டுள்ளன.
ஆனால், பாரிவேந்தர் அதே பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அதாவது இந்தப் பெரம்பலூர் தொகுதியில் மூன்றாவது முறையாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அதற்கான பிரச்சாரத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஒவ்வொரு நாளும் அவர் தேர்தல் களத்தில் விதவிதமான வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்காளர்களைக் கவர்ந்து வருகிறார்.
இந்தப் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் 1962 தொடங்கி, திமுகவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. அதன்பிறகு அதிமுக. அந்த நம்பிக்கையை உடைத்தவர் பாரிவேந்தர்.
பாரிவேந்தரின் பலம் என்ன?:
இந்திய ஜனநாயகக் கட்சியைத் தொடங்கிய நான்கே ஆண்டுகளில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டார். எடுத்த எடுப்பிலேயே 2,38,887 வாக்குகளை அவர் பெற்றார். புதிய கட்சி ஒன்று இத்தனை வாக்குகளைப் பெறுவது ஒன்றும் சாதாரணமல்ல.
2வது முறை இவர் போட்டியிட்ட போது அப்படியே வாக்குகள் 100% அதிகரித்தது. இந்த 2024 தேர்தலிலும் இவர் களம் காண்கிறார். இவருக்குப் பெரம்பலூர் தொகுதியில் பெரிய அளவில் எதிர்ப்புகள் இல்லை. ஆதரவு அதிகமாகவே உள்ளது.
இவர் திமுக, அதிமுக ஆகிய அணிகளைத் தவிர்த்து, பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறார். இரண்டு மாநிலக் கட்சிகளை வேண்டாம் என உதறிவிட்டு பாஜகவுடன் கைகோர்த்திருக்கிறார் பாரிவேந்தர்.

அதற்குக் காரணம், அவர் தனது செயல்பாடு மீது வைத்துள்ள நம்பிக்கை. கடந்த முறை தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை 100% நிறைவேற்றி உள்ளேன் என்கிறார் இவர். அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்தத் தொகுதியிலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில், 3 மாதத்திற்கு ஒருமுறை இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும் இந்த முறை தேர்தல் களத்தில் உறுதி மொழி கொடுத்துள்ளார்.
புதுமையான வாக்குறுதிகள்:
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஆண்டுக்கு 300 குடும்பங்கள் வீதம் 5 வருடங்களுக்கு மொத்த 1500 குடும்பங்களைக் கண்டறிந்து தலா 10 லட்சம் ரூபாய் செலவில் உயர் சிகிச்சையைத் தனது மருத்துவ நிறுவனம் மூலம் இலவசமாகச் செய்து தருவேன் என்றும் புதியதாக ஒரு வாக்குறுதியை அளித்துள்ளார். இதன் மொத்த மதிப்பீடு ரூ.150 கோடி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முறை அவர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். தனிச் சின்னத்தில் போட்டியிடாமல், கூட்டணிக் கட்சியின் சின்னத்தில் ஏன் போட்டியிடுகிறார்? அதற்கான பதிலை பாரிவேந்தர் கொடுத்துள்ளார்.
தாமரை சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக பாரிவேந்தர், "நான் ஏன் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும்? பாஜகவின் கொள்கையுடன் நாங்கள் ஒத்துப் போகிறோம். அக்கட்சியுடன் நாங்கள் தேசிய கொள்கையில் இணைந்து போகிறோம்.
இந்தியா வளமாக இருக்க வேண்டும். இந்தியா சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். உலக நாடுகள் மத்தியில் இந்தியா வலுவான தேசமாக உருவாக வேண்டும். இதை எல்லாம் பாஜக சொல்கிறது. எங்களுக்கும் அதே கொள்கைதான் உள்ளது.
தனிச் சின்னத்தில் என்ன பிரச்சினை?:
மது ஒழிக்கப்பட்ட வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். அதை பாஜக ஏற்கிறது. எங்கள் கட்சி தொடங்கி 13 வருடங்கள்தான் ஆகியுள்ளது. பாஜக இந்திய அளவில் வளர்ந்த கட்சி. கூடவே வலுவான கட்சி.
எங்கள் கட்சி இளம் கட்சி. அதிக வருடங்கள் ஆகிவிடவில்லை. முதலில் எங்கள் கட்சிக்கு சில சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை. அதற்கான வியூகம் வகுத்துச் செயல்படுகிறோம்.
எங்கள் கட்சிக்கு அரசியல் வலிமை கிடைத்தால், தொண்டர்கள் நம்பிக்கை பெறுவார்கள். கட்சி வளரும். கூடவே தமிழ்நாட்டில் எங்கள் அமைப்பும் வளரும். அதை நான் முதலில் செய்தாக வேண்டும்.
தாமரை சின்னம் ஏன்?:
அதன் தொடர்ச்சியாகத்தான் பல விசயங்களைச் செய்கிறோம். ஒரு அரசியல் கட்சிக்கு அந்த மாதிரியான வியூகங்கள் தேவை. வெறும் முரட்டுப் பிடிவாதம் கட்சியை வளர்க்கப் பயன்படாது.

ஒரு மாநிலக் கட்சியின் தலைவரான எனக்கு மோடியின் பல பண்புகள் எனக்குப் பிடித்துள்ளது. அவரது ஆன்மிக பற்று, கடினமான உழைப்பு, நாட்டுப் பற்று என அனைத்தும் பிடித்துள்ளது.
அப்படி சிந்தனை ரீதியாக, கொள்கை ரீதியாக ஒத்து கருத்துடைய கட்சியான பாஜக சின்னத்தில் போட்டியிடுவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. அப்படி உள்ளபோது நான் ஏன் தனிச் சின்னத்தைத் தேடிப் போகவேண்டும்?
எங்களுக்கு என்று ஒரு சின்னம் எடுக்க வேண்டிய ஒரு காலம் வரும்போது நாங்கள் உறுதியாகத் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம்" என விளக்கம் அளித்துள்ளார்.
-
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications