உடனே லாக் பண்ணுங்க.. இல்லைனா செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் எல்லாம் போயிடும்.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களின் சேமிப்பிற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் இணைய லாக் இன் டைம் உள்ளது.

மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு சேமிப்பு திட்டம்தான் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். பெண்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து குறைந்த சேமிப்பு ஆனால் நிறைய வருமானம் வரும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது

selvamagal saving scheme selvamagal semippu thittam narendra modi

இந்த திட்டத்தில் நிறைய லாபம் வட்டி மூலம் கிடைப்பதால் பெற்றோர்கள் பலரும் இதை விரும்புகின்றனர். இதனால் அதிக அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தொடங்கி வைத்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.

எப்படி சேமிப்பது?: 10 வயதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் பெயரில் திட்டத்தை தொடங்கலாம். பெண் குழந்தைகள் வயது 10ஐ கடந்ததும் அவர்கள் பெயருக்கு திட்டத்தை மாற்றிக்கொள்ள முடியும். 15 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும். 21 ஆண்டுகளுக்கு பின் டெபாசிட்டை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். 2 ஆயிரம் ரூபாய் முதலீடும் செய்ய முடியும். இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது. இதனால் நீங்கள் 2 ஆயிரம் ரூபாயை 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் வட்டியோடு சேர்த்து உங்களுக்கு 11.16 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் இணைய லாக் இன் டைம் உள்ளது.

லாக் இன் டைம்

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) கீழ், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒரு பெண் குழந்தை 10 வயதை அடையும் முன் கணக்கைத் திறக்க முடியும். பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை கணக்கு தொடங்கலாம். அதற்கு மேல் தொடங்க முடியாது. அந்த வகையில் உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் 10 வயதை நெருங்கி இருந்தால் இப்போதே திட்டத்தில் உங்கள் பெயரை லாக் செய்து இணைய முடியும். பெண் குழந்தைக்கு 10 வயதுக்கு முன் எந்த நேரத்திலும் கணக்கைத் திறக்கலாம். ஒரு குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைக்கு அதிகபட்சம் இரண்டு கணக்குகளைத் திறக்கலாம்.

கவனிக்க வேண்டிய விஷயம்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தற்போது 8.2 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. 21 ஆண்டுகள் இந்த திட்டத்தின் கீழ் சேமிக்க முடியும். ஆனால் இந்த திட்டத்தில் சில தவறுகள் நடந்தால் வட்டி நிறுத்தப்படும்.

1. இந்த திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சேர்த்துவிட்டீர்கள்.. 21 ஆண்டுகள் தொகை முதிர்ந்துவிட்டது என்றால் அந்த வருடமே பணத்தை எடுக்க வேண்டும். எடுக்காமல் வைத்து இருந்தால்.. 21ம் ஆண்டுக்கு பின் வட்டி வழங்கப்படாது. கூடுதலாக 1 ரூபாய் கூட வட்டி கிடைக்காது. அதுவரை வந்த வட்டி + சேமிப்பு தொகை மட்டுமே இருக்கும்.

2. அதேபோல் இடைப்பட்ட காலத்தில் திட்டம் தொடங்கப்பட்ட பெயர் கொண்ட அந்த பெண், சிறுமி வெளிநாட்டிற்கு சென்று அங்கே குடியுரிமை பெற்றுவிட்டார் என்றால் அவருக்கு வட்டி அதோடு நிறுத்தப்படும், இந்திய குடியுரிமை இதற்கு அவசியம்.

3. அதாவது 21 ஆண்டு வரை வெளிநாட்டில் வேலை பார்க்கலாம். அதுவரை அங்கே குடியுரிமை பெற முடியாது.

4.அதோடு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு வைத்து உள்ள அந்த பெண், சிறுமி இறந்துவிட்டால், வட்டி நிறுத்தப்பட்டு, கணக்கு மூடப்பட்டு, பாதுகாவலருக்கு அல்லது பெற்றோருக்கு பாக்கி வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+