"நவ திரௌபதியே".. திருமாவளவன் அலர்ட்.. "எச்சரிக்கை கௌரவர்களே".. கர்ஜித்த கமலாலயம்: சீறிய சிறுத்தைகள்
திருமாவளவனின் வாழ்த்துக்கு பதிலடி தந்து ட்வீட் போட்டுள்ளது தமிழக பாஜக
சென்னை: திருமாவளவன், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து சொன்னதையடுத்து, பாஜக கொந்தளித்து பதிலளித்து உள்ளது.. இதனால் வழக்கம்போல் இரு தரப்பிலும் பரபரப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலத்தை சேந்த பழங்குடியின தலைவரான, திரௌபதி முர்முவை குடியரசு தலைவராக வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியபோதே, பலரும் இதை பற்றி கருத்து சொல்லியிருந்தனர்.
முக்கியமாக, முர்முவை குடியரசுத் தலைவராக்குவதன் மூலம் அடுத்து வரும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில், நாற்காலியை எட்டிப்பிடித்து விடலாம் என்பதே பாஜகவின் பிளானாக உள்ளதாக அரசியல் கணக்கு போடப்பட்டது.

மேதா பட்கர்
ஆனால், எல்லாவற்றையும்விட, திரௌபதி முர்மு தேர்வு குறித்து, சமூக ஆர்வலர் மேதா பட்கர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியை இங்கு நாம் அழுத்தமாக குறிப்பிட வேண்டி உள்ளது.. மேதா பட்கர் சொல்லும்போது, "ஆதிவாதிகள் மற்றும் தலித்துக்களின் நலன்களை பாதுகாக்க, குடியரசு தலைவருக்கும் மட்டுமல்ல, கவர்னருக்கும் அரசியல் சாசனத்தில் உரிமை உண்டு. எஸ்சி., எஸ்டி சமூகத்தினரின் எதிரான எந்த சட்டத்தையும் அவர் பயன்படுத்துவதை தடுக்க முடியும்.

கரண்ட் எங்கே?
ஆனால் முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரால் முடிந்ததை உடனே செய்துவிட முடியுமா? குடியரசு தலைவர் ஆளும் கட்சியின் ரப்பர் ஸ்டாம்பாக மாறுகிறார் என்றே இதன் அர்த்தம்.. சொந்த கிராமத்தில் மின்சாரம் கிடைக்காத திரௌபதி முர்முவுக்கு என்ன அதிகாரம் இருக்கும் என்று தெரியவில்லை? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல, விசிகவின் திருமாவளவனும் ஒருமுறை இதை பற்றி கருத்து சொல்லி இருந்தார்..

பாகன் - ஜோசியர்
"பாஜகவில் இருக்கும் தலித்துகளான எல்.முருகனும், திரௌபதி முர்முவும் பாகன் கையில் இருக்கும் கோயில் யானைகள், ஜோசியரிடம் உள்ள கூண்டுக்கிளிகள், சர்க்கஸ் புலிகள் போன்றுதான் செயல்பட முடியும்.. அவர்களால் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் செயல்படுத்துவார்கள் என்று ஓபனாகவே கூறியிருந்தார்.. இந்நிலையில்தான், நேற்றைய தினம் திரௌபதி முர்மு ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ளார்..

திருமா வாழ்த்து
இவருக்கு பல தலைவர்கள் வாழ்த்து கூறியதைபோலவே, திருமாவளவனும் வாழ்த்து கூறியிருந்தார்.. அதுகுறித்து பதிவிட்ட ட்வீட்டில், "இந்திய முதல் குடிமகவாக உயர்ந்துள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு எமது வாழ்த்துகள். மகா பாரதத்தில் நாட்டைச் சூதாட்டத்தில் விட்டவர்கள் திரௌபதியையும் விட்டார்கள். நவ பாரதத்தில் நாட்டைக் கார்ப்பரேட்டுகளிடம் விற்பவர்கள் மகா பாரத பாண்டவர்களின் வாரிசுகளாம். ஏமாறக் கூடாது நவ திரௌபதி" வாழ்த்து கூறியும், லேசாக அலர்ட் செய்தும் இந்த பதிவை திருமாவளவன் போட்டிருந்தார்.

நாராயணன் திருப்பதி
வழக்கம்போல், பாஜக இதற்கு எதிர்வினையாற்றி உள்ளது.. தமிழக பாஜகவின் மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி, திருமாவுக்கு ட்வீட் போட்டு பதிலடி தந்துள்ளார்.. "மகாபாரதத்தில் நாட்டையும், திரௌபதியையும் சூழ்ச்சியால் அடைய துடித்த கௌரவர்களை கிருஷ்ண பரமாத்மா வீழ்த்தினார். நவபாரதத்தில் நாட்டை பிளக்க நினைக்கும் கௌரவர்களை வீழ்த்தி கொண்டிருக்கிறார் நவீன கிருஷ்ண பரமாத்மா நரேந்திர மோடி.. எச்சரிக்கை கௌரவர்களே! என்று பதிலுக்கு வார்னிங் தந்துள்ளார்.

டவுட் கேட்கும் சிறுத்தைகள்
இந்த ட்வீட்டுக்கு சிறுத்தைகள் பலரும் திரண்டு, பதிலடி தந்து வருகிறார்கள்.. "கௌரவத்தை தேடும் கூட்டம், கௌரவம் தனக்கானது என்று ஒப்பாறி வைத்த கூட்டங்களை கட்டாயம் சமத்துவம் வீழ்த்தும், கவலை வேண்டாம் என்றும், என்ன சூழ்ச்சியா இருந்தாலும் யாராவது கட்டின பொண்டாட்டிய வைத்து சூது ஆடுவாங்களா? இதுதான் தர்மமா? என்றும் மகாராபாரதத்தில் இருந்து டவுட் கேட்டு வருகிறார்கள் சிறுத்தைகள்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு











Click it and Unblock the Notifications