குழப்பியடித்த எடப்பாடி! 2 பேரும் அப்பறம் எப்படித்தான் பேசுவாங்க? விழி பிதுங்கிய பாஜக! அப்போ அண்ணாமலை?
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான மோதல் புதிய உச்சத்தை அடைந்து உள்ளது.
சமீபத்தில் திமுகவின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில் அதிமுகவிற்கு எதிராகவும் சில விஷயங்களை அண்ணாமலை பேசினார்.
அதாவது அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட போவதாக மறைமுகமாக கருத்து சொன்னார்.
அவர் தனது பேட்டியில், ஊழல் பட்டியலில் திமுகவிற்கு எதிராக பற்றி மட்டும் பேச மாட்டேன். ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையை அப்படியே எதிர்க்க வேண்டும். அடி ஆழத்தில் இருந்து எதிர்க்க வேண்டும். திமுக பைல்ஸ் என்பது இப்போது முடிய போவது இல்லை.
இது பார்ட் 1னுடன் முடியாது. தமிழ்நாட்டில் எந்த கட்சி எல்லாம் இதுவரை ஆட்சி செய்து இருக்கிறதோ அந்த கட்சி எல்லாம் பற்றி பேசுவோம். அத்தனை கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசுவோம், என்று கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அண்ணாமலை பெயரை கேட்டதும் கோபம் அடைந்த எடப்பாடி தனது பேட்டியில், அண்ணாமலை பற்றி என்னிடம் கேட்காதீங்க. அவரை பற்றி என்னிடம் பேச வேண்டாம்.
முதிர்ந்த அரசியல்வாதிகளைப் பற்றி கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன். அவர் இப்படி பேசி பேசித்தான் பிரபலம் ஆகி உள்ளார். அவர் பேட்டி கொடுத்து பிரபலம் ஆகி உள்ளார்.
அவர் ஊழல் பட்டியலை வெளியிட்டாரா என்று தெரியவில்லை. சொத்து பட்டியலை வெளியிட்டதாகவே தெரிகிறது என்று எடப்பாடி கூறினார்.

கூட்டணி மோதல்: ஆனால் அதற்கு முன்பாக இவர்களுக்கு இடையில் கூட்டணி அளவிலான மோதல்கள் ஏற்பட்டுவிட்டன. சமீபத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசிய அண்ணாமலை, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும்.
எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.
கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன்.
கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றிய முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை.
தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

எடப்பாடி பதிலடி: இதற்கு எடப்பாடி தந்த பதிலடியை.. நாங்கள் பாஜகவுடனே கூட்டணியில் இருக்கிறோம். இதை அமித் ஷாவும் கூறிவிட்டார். பாஜகவில் தேசிய தலைவர்கள்தான் முடிவு எடுப்பார்கள்.
மாநில தலைவர்கள் முடிவு இங்கே செல்லாது. பாஜகவில் தேசிய தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது என்று எடப்பாடி அண்ணாமலையை மேலும் சீண்டினார்.
இந்த நிலையில் இன்றும் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி, அவர்கள் கட்சி பாஸ் மேலே இருக்கிறார். அவர்கள்தான் முடிவு எடுப்பார்கள். கீழே இருப்பவர்கள் இங்கே மாறிக்கொண்டே இருப்பார்கள்.,
மேலே பாஸ் இருக்கும் போது கீழே இருப்பவர்கள் குறித்து எதற்குப் பேச்சு.கூட்டணியை நிர்ணயம் செய்யக் கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோர் தான் இதில் முடிவெடுப்பார்கள், என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பகை: பாஜகவுடன் உறவில்தான் இருக்க வேண்டும்.. ஆனால் அண்ணாமலையுடன் உறவில் இருக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி இருக்கிறாராம். அண்ணாமலை தன்னை ஒரு மூத்த தலைவராக மதிக்கவில்லை என்ற கோபம் எடப்பாடிக்கு உள்ளதாம்.
அதோடு கொங்கு மண்டலத்தில் பாஜக வளர்வதை எடப்பாடி விரும்பவில்லை. அண்ணாமலை வளர்ந்தால் கொங்கில் தன்னுடைய ஆதிக்கத்தை எதிர்க்க வாய்ப்பு உள்ளது. அதிமுக கொங்கில் வலிமையாக உள்ள நிலையில், பாஜக அந்த இடத்தை பிடிக்க பார்க்கிறது. அது சரியில்லை. முக்கியமாக அண்ணாமலை அந்த இடத்தை பிடிக்க பார்க்கிறார் என்பதால் அண்ணாமலையை எடப்பாடி எதிர்க்கிறார் என்கிறார்கள்.

முக்கியமாக தன் அரசியலின் அடிமடியிலேயே பாஜக கை வைக்கிறது என்று எடப்பாடி நினைக்கிறாராம். அதோடு எடப்பாடி இருக்கும் வரை கொங்கில் நாம் 2ம் கட்ட தலைவராகவே இருப்போம் என்பதால்தான் எடப்பாடியை அண்ணாமலையும் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
மோதலுக்கு காரணம்: இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதல் நேருக்கு நேரான மோதலாக மாற இதுவே காரணம் என்று கூறப்படுகிறது.
இதே நிலை தொடர்ந்தால் அண்ணாமலை எப்படி கூட்டணி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார். அண்ணாமலை போட்டியிட விரும்பும் தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுப்பாரா? அப்படியே விட்டுக்கொடுத்தாலும் அண்ணாமலைக்காக எடப்பாடி பிரச்சாரம் செய்ய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications