"தயவு கூர்ந்து" கேட்காதீங்க.. டெல்லி பயணத்திற்கு பின்..டக்குனு டோனை மாற்றிய எடப்பாடி.. நடந்தது என்ன?
சென்னை: டெல்லியில் இருந்து நேற்று சென்னைக்கு திரும்பிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் "டோனில்" பெரிய மாற்றம் இருந்தது. எப்போதும் வலிமையாக பேசும் எடப்பாடி பழனிசாமி நேற்று கொஞ்சம் சோர்வாக பேசியது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக டெல்லி சென்றார். டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டு இருந்தார்.
இவர்களை தனியாக சந்தித்து ஆலோசனை செய்ய எடப்பாடி திட்டமிட்டு இருந்தார். டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி முதலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி
அப்போது பிரதமர் மோடியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி கைகுலுக்கினார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பார்த்தும் கைகுலுக்கினார். ஆனால் அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி பேசவில்லை. 22ம் தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று இரவுதான் சென்னைக்கு விமானம் ஏறுவதாக இருந்தது. இன்று புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது.

பேசவில்லை
இதற்கு இடையில் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதாக இருந்தது. ஆனால் இரண்டு பேருமே சந்திப்பிற்கு நேரம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு பேரையும் அவர்களின் அலுவலகத்தில் சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டு பேருமே சந்திக்காத காரணத்தால் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு சென்னை திரும்பி உள்ளார்.

டெல்லி பயணம் முடிந்தது
பிரதமர் மோடி பிசியாக இருக்கிறார்.. அப்பாயிண்ட்மென்ட் கொடுக்க முடியாது என்று கூறி எடப்பாடியின் கோரிக்கை மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்ட போதும் இதே பதில் வந்து இருக்கிறது. இந்த நிலையில்தான் திரௌபதி முர்முவின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு திரும்பினார். டெல்லியில் தான் நினைத்தது நடக்கவில்லை என்று வருத்தத்தில் எடப்பாடி இருக்கிறாராம்.

வருத்தம்
முக்கியமாக ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக மோடியை பார்க்க முடியவில்லை. அதிமுக - பாஜக உறவு பற்றி மோடியிடம் பேச முடியவில்லை. சில விஷயங்களை விளக்க முடியவில்லை என்ற வருத்தத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. முக்கியமாக ரெய்டு விஷயங்கள் குறித்து பேச முடியவில்லை என்ற வருத்தம் எடப்பாடிக்கு இருக்கிறதாம். இந்த நிலையில் எப்போதும் திடமாக காணப்படும் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை வந்த பின் கொஞ்சம் சோர்வாக காணப்பட்டார்.

எடப்பாடி பேச்சு
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய எடப்பாடி.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டேன். நேற்று புதிய குடியரசுத் தலைவராக போகும் திரௌபதி முர்முவை நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். கட்சி மூத்த நிர்வாகிகள் என்னுடன் கலந்து கொண்டனர். அதிமுக பொதுக்குழு விவகாரம், கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.
Recommended Video

டோன் மாற்றம்
இது பற்றி நீதிமன்றத்தில் மாறி மாறி வழக்கு தொடுத்து வருகின்றனர். தயவு கூர்ந்து இதை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். வழக்கு முடியட்டும். கோர்ட் இதில் முடிவு எடுக்கட்டும். இப்போது இதில் கருத்து தெரிவிக்கவில்லை என்று எடப்பாடி பேசினார். எப்போதும் வலிமையாக பேசும் எடப்பாடி பழனிசாமி நேற்று கொஞ்சம் சோர்வாக பேசியது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications