சசிகலா கூட பதறலையே.. "கம்முனு இரு".. வார்த்தையை விட்ட எடப்பாடி.. டென்ஷனுக்கு பின்னுள்ள பரபர காரணம்!
சென்னை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் சசிகலாவிற்கு எதிராக கடுமையான கருத்துக்கள் உள்ளன. இதில் சசிகலாவை நேரடியாக குற்றஞ்சாட்டி பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்று உள்ளன.
சசிகலாவை இதில் முக்கிய நபராக குற்றஞ்சாட்டுவதை தவிர வேறு வழியே இல்லை என்று நேரடியாக சசிகலாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.
இதில் சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

என்ன சொல்கிறது
முக்கியமாக சசிகலா ஜெயலலிதா இடையிலான உறவு குறித்தும் இதில் கடுமையான குற்றச்சாட்டுகளை ஆறுமுகசாமி ஆணையம் வைத்து உள்ளது. அதில், இந்த அறிக்கையில், 2012-க்குப் பிறகு ஜெ- சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை. ஜெயலலிதா மயக்கத்துக்குப் பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுவிட்டன. ஜெ. டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய்யான அறிக்கையை வெளியிட்டனர். ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் சுமூக உறவு இல்லை. பிரிவிற்கு பின் இவர்கள் சேர்ந்த போது அவர்களிடம் சுமுகமான உறவு இல்லை. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை. ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு என ஆறுமுகசாமி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

சசிகலா எப்படி எதிர்கொண்டார்
இதில் இருக்கும் சில வார்த்தைகள் சசிகலாவை காயப்படுத்தி இருப்பதாக கூறப்படுகின்றன. சில வார்த்தைகள் நேரடியாக சசிகலாவை காயப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை எதிர்த்து சசிகலா வெளியிட்ட அறிக்கையிலும், என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என் மீது பழிபோடுவது ஒன்றும் புதிது இல்லை. என்றைக்கு நான் அம்மா அவர்களின் கரத்தை பிடித்தேனோ அன்று ஆரம்பமானது என் மீது இந்த பழி போடும் படலம். அது இந்த நொடிவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நிதானம்
இதைப்பற்றி கவலைப்பட்டு இருந்தால் எங்களால் அரசியலில் இந்த அளவுக்கு சாதித்து இருக்கமுடியாது. ஆனால் அதே சமயம் என் அக்கா, நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதுதான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது, என்று குறிப்பிட்டார். ஆனால் சசிகலா பதறிப்போய் செய்தியாளரை சந்தித்து கோபத்தை காட்டவில்லை. அவர் பதற்றம் அடையாமல் நிதானமாக அறிக்கை மட்டுமே வெளியிட்டார்.

எடப்பாடி
ஆனால் இன்னொரு பக்கம் எடப்படியோ மொத்தமாக பதற்றம் அடைந்து.. சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். பொதுவாக தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் போது, விசாரணைகள் நடக்கும் போது அதற்கு எடப்பாடி தன்மையாக பதிலடி கொடுத்து இருக்கிறார். பெரிதாக முகத்தில் ரியாக்சனை காட்டியது இல்லை. ஆனால் நேற்று எடப்பாடி கத்தி, கோபம் அடைந்து, போலீசிடம் சீறியது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

என்ன சொன்னார்?
எடப்பாடி பழனிசாமியா இப்படி பேசியது.. ஏன் அவர் இப்படி நடந்து கொண்டார். இப்படிப்பட்ட ஆள் இல்லையே அவர். அரசியல் முதிர்ச்சியோடு இருப்பாரே என்று அதிமுகவினர் விமர்சனம் செய்யும் அளவிற்கு அவரின் செயல் இருந்தது. நேற்று சட்டசபையை புறக்கணித்து அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி உண்ணாவிரதம் இருக்க முயன்றார். சாலையில் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி பழனிசாமியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இதனால் போலீசாருக்கும் எடப்பாடிக்கும் இடையில் கடுமையாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

செய்தியாளர் சந்திப்பு
முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது போலீசார் அவரை அப்புறப்படுத்த வந்தனர். அப்போது எடப்பாடி கடுமையாக கோபம் கொண்டார்.ஏய்.. ஏய்.. என்ன இது.. கம்முனு இரு.. கம்முனு இரு.. நிருபர்களாம் இருக்காங்க.. என்னங்கிற இப்போ என்று கடுமையாக கேள்வி கேட்டு கோபம் அடைந்தார். அங்கு இருந்த போலீஸ் அதிகாரி ஒருவரை பார்த்து எடப்பாடி இப்படி கோபம் அடைந்தார். அவர் இப்படி நடந்து கொண்டதுதான் சர்ச்சையாகி உள்ளது.

எமோஷன்
எடப்பாடி ஏன் இப்படி எமோஷனை வெளியே காட்டுகிறார் என்ற விவாதங்கள் அதிமுகவினர் இடையே எழுந்துள்ளதால். அதிமுக பொதுக்குழு வழக்கு.. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் நேரடியாக தன்னுடைய அரசுக்கு எதிரான அறிக்கை.. அதில் தனக்கு எதிராக உள்ள கருத்துக்கள்.. அதிமுக இருக்கை விவகாரம்.. சபாநாயகர் அப்பாவுவை சமாளிக்க முடியாதது என்று பல விஷயங்கள் அடுத்தடுத்து நடப்பதாக உணர்ச்சி ரீதியாக எடப்பாடி உச்சத்தில் இருக்கலாம். அதன் காரணமாகவே வர இப்படி ரியாக்ட் செய்து இருக்கலாம் என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.












Click it and Unblock the Notifications