"என்னன்னு கேளுங்க".. ஆளுநரை பார்த்ததும் பட்டென சொன்ன எடப்பாடி! கையில் இருந்த "கார்ட்டூன்".. ஆஹா அவரா
சென்னை: நேற்று எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்தார். இவர்களுக்கு இடையிலான சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நடந்தன. இந்த சந்திப்பில் முக்கியமான ஒரு நபரை பற்றி எடப்பாடி பழனிசாமி புகார் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்தார். ஆளுநர் ஆர். என் ரவி கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைதான் டெல்லியில் இருந்தார். அவர் டெல்லியில் இருந்து 2 நாள் பயணம் முடித்து திரும்பி வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆளுநர் ஆர். என் ரவியை நேரில் சந்தித்தார்.
அதிமுக - பாஜக இடையே லேசான உரசல் நிலவி வரும் நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி இந்த சந்திப்பை நடத்தினார்.

என்ன நடந்தது?
உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு வாரம் முன் சென்னை வந்தார். தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார். முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதை பற்றி பேட்டி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி. அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார்.

கூட்டணி
இதன் காரணமாக அதிமுக பாஜக கூட்டணி உடைய போவதாக செய்திகள் வந்தன. அதோடு அதிமுக + காங்கிரஸ் கூட்டணி வைக்க போவதாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர். என் ரவியை நேற்று சந்தித்தார். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவர் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. அவர் மது வாங்குவதிலும் மின்சார கொள்முதலில் ஊழல் செய்துவிட்டதாக புகார் வைக்கப்பட்டது. அவரின் படம் போட்டோ.. பின்னால் கார்ட்டூன் படங்கள் வரையப்பட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இந்த செய்திக்கு எதிராக வழக்கு தொடுப்பேன், இதில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று செந்தில் பாலாஜியும் குறிப்பிட்டு இருந்தார்.

செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் வலுவாக இருக்கிறார். கரூர், கோவை என்று இரண்டு மாவட்டங்கள் இவரின் கோட்டையாக இருக்கிறது. அதிமுக வலுவாக இருந்த இந்த மாவட்டங்களில் செந்தில் பாலாஜி வருகைக்கு பின் அதிமுக மிக மோசமான பின்னடைவை சந்தித்து உள்ளது . நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக இங்கே படுதோல்வி அடைந்து வாஷ் அவுட் ஆக செந்தில் பாலாஜி காரணமாக இருந்தார். பாஜகவிற்கும் செந்தில் பாலாஜி வியூகங்கள் பெருமளவில் குடைச்சலை கொடுத்து வருகின்றன. ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு எதிராக பல்வேறு வழக்குகளை பாஜக தூசி தட்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டத்தையே தற்போது செந்தில் பாலாஜிதான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

வலிமை
இவர் வலிமையாக இருக்கும் வரை அதிமுகவிற்கு சிக்கல்தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி புகார் கொடுத்துள்ளார் என்கிறர்கள். இவர் மீது உள்ள புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் கேட்டு உள்ளார். செய்தி ஊடகத்தில் வெளியான கட்டுரையை காட்டி நடவடிக்கை எடுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், திறமையில்லாத முதல்வர் உள்ளார். காவல்துறையை கட்டுப்படுத்த முடியவில்லை. உளவுத்துறை செயலிழந்து விட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் குலைந்து விட்டது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை. அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள். டெண்டர்களில் அமைச்சர்கள் முறையீடு செய்கிறார்கள். கமிஷன், கலெக்சன், கரப்சன் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது, என்று கூறினார்.

திமுகவினர் கிண்டல்
நேற்று நடந்த மீட்டிங்கில் எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் 4 விஷயங்களை பேசி உள்ளார். அதன்படி தமிழ்நாடு சட்ட ஒழுங்கு குறித்து ரிப்போர்ட் ஒன்றை எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் கொடுத்துள்ளார். சென்னை, சீர்காழி வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கொடுக்கப்படவில்லை என்று எடப்பாடி ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். 3வதாக போதை பொருள் பயன்பாடு பற்றி இவர் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இது போக 4வது விஷயமாக.. அதிமுக - பாஜக உறவு குறித்து இன்று அவர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுகவினரிடம் பேசியதில், ஆளுநர் ஆர். என் ரவிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று இவர் புகார் கொடுக்கிறார். அதுவும் ஊடகத்தில் வந்த தகவலை வைத்து புகார் கொடுக்கிறார். அவர் முதல்வராக இருந்தவர்தானே? ஆளுநர் இதில் என்ன நடவடிக்கை எடுக்க முடியும். அவருக்கு அதிகாரமே இல்லையே. ஆதாரம் இல்லாததால் ஊடகத்தில் வந்த செய்தியை வைத்து புகார் கொடுப்பது நகைச்சுவையாக இருக்கிறது என்று விமர்சனம் வைத்து உள்ளனர்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications