வெற்றி மேல் வெற்றி வந்தும்.. முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு.. அண்ணாந்து பார்த்த எடப்பாடி.. என்னாச்சு?
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சோகமாக அமர்ந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் சோகமாக அமர்ந்திருந்த புகைப்படம் இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது.
அதிமுக உட்கட்சி மோதலில் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து வென்று வருகிறார். ஏற்கனவே பொதுக்குழுவை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.
அதன்பின் இரட்டை இலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி வென்றார்.

பொதுக்குழு
அதன்பின் பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கிலும் வென்றார். இரண்டு நாட்களுக்கு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

தீர்ப்பு என்ன?
ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதோடு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகள் மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால் அந்த தீர்மானங்களை நிராகரிக்க முடியாது. அதோடு பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் பொதுக்குழு தீர்மானங்களும் செல்லும். அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதாவது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிமுக தேர்தல் குழு நிர்வாகிகள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வெற்றி
இப்படி அதிமுகவில் வெற்றிமேல் வெற்றி பெற்றும் கூட இன்று தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சோகமாக அமர்ந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் சோகமாக அமர்ந்திருந்த புகைப்படம் இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. அவர் விட்டத்தை பார்த்தபடி அவை நடவடிக்கைகளை பெரிதாக கவனிக்காமல் அமர்ந்து இருந்தார். தனக்கு அருகிலேயே ஓ பன்னீர்செல்வம் அமர்ந்து இருந்ததுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வத்தின் இருக்கையை இன்னும் சபாநாயகர் அப்பாவு மாற்றவில்லை.

எடப்பாடி
இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வைக்கும் வாதத்தில், ஓ பன்னீர்செல்வத்திற்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை. ஆர்பி உதயகுமார்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும். எடப்பாடியை இன்னும் தேர்தல் ஆணையம் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை என்று ஓ பன்னீர்செல்வம் வாதம் வைத்து வருகிறார்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையத்தில் இப்போதும் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர். எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர். இதையடுத்து தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 2 கூட்டத்தொடரிலும், இந்த கூட்டத்தொடரிலும் இருக்கைகள் மாற்றப்படவில்லை. இரண்டு தரப்பும் வைத்த கோரிக்கையால் இன்னும் அப்பாவு இருக்கைகளை மாற்றவில்லை. இதனால்தான் இன்று எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் அருகே அமர்ந்து இருக்கும்போதே சோகமாக காணப்பட்டார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications