Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா சட்டென குரல் மாறுதே.. பாஜக வாய்சை எடுத்த எடப்பாடி.. அவரா இப்படி பேசுறது.. குழப்பமா இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக வழக்கமாக வைக்கும் புகார் ஒன்றை எடப்பாடி பழனிசாமி தனது குரலில் முதல்முறையாக பதிவு செய்து இருக்கிறார். அவரின் இந்த திடீர் நிலைப்பாடு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நங்கநல்லூரில் இருக்கும் தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் 5 அர்ச்சகர்கள் மூழ்கி பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டையே இந்த சம்பவம் உலுக்கி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயிலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு உள்ள தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்து இருக்கிறது.

கோவில் வழிபாடு ஒன்றில் நடந்த இந்த சம்பவம் இதயத்தை உலுக்கும் விதமாக அமைந்து உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக உடனே விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதே சமயம் இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரண நிதியையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

நேற்று காலை 9.30 மணியளவில் குளத்திற்குள் அர்ச்சகர்கள் இறங்கி சிறப்பு பூஜை செய்துள்ளனர். ஆழமான நீர் பகுதியில் அவர்கள் பூஜை செய்து கொண்டு இருந்தனர். கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது திடீரென சேற்றில் மூழ்கி சூர்யா (வயது-22) பலியானார். அவரை காப்டரை சென்ற பானேஷ் (வயது-22), ராகவன் (வயது-22) யோகேஸ்வரன் (வயது-21) மற்றும் ராகவன் (வயது-18) ஆகிய ஐந்து பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இவர்கள் 5 பேரும் ஒரே குளத்தில் எப்படி பலியானார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. முதலில் ஒரு அர்ச்சகர்தான் தண்ணீரில் மூழ்கி இருக்கிறார். அவரை காப்பாற்ற போய் மேலும் 4 பேர் தண்ணீரில் சிக்கிய நிலையில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

Why does Edappadi Palanisamy talk like BJP in the Nanganallur priests death and What is the reason?

இந்நிலையில், இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், "சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அறநிலையத் துறையின் அலட்சியத்தாலும் மெத்தனத்தாலுமே இத்தகைய அசம்பாவிதங்கள் கோவில் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.

உயிரிழந்த 5 அர்ச்சகர்களுமே 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளவயதினர் என்பது மேலும் வருந்தத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க மிகுந்த கவனத்துடன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்தார்.

அவர் அறநிலையத்துறை மீது வைத்த இந்த புகார் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. ஏனென்றால்..

1. அந்த அர்ச்சகர்கள் போலீஸ் அனுமதி இன்றி இந்த குளத்தில் இறங்கி வழிபாடுசெய்துள்ளனர்.

2. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை கூட அனுமதி இன்றி இங்கே இறக்கி உள்ளனர்.

3. இது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலே கிடையாது. நங்கநல்லூர் ஸ்ரீ சர்வமங்கலாம்பிகை பக்த சமாஜம் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்.

4. அந்த குளமும் கூட கோவிலுக்கு சொந்தமான குளம் கிடையாது.

5. சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று உடனே பார்வையிட்டார் . அங்கே தீவிர சோதனைகளை அவர் நடத்தினார். அங்கே இவர் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், இது கோவில் குளம் கிடையாது. இது பஞ்சாயத்து குளம் என்று தகவல் வந்து உள்ளது. எதன் அடிப்படையில் கோவில் பக்தர்கள் இங்கே வந்தார்கள். எதன் அடிப்படையில் அவர்கள் குளத்தில் இறங்கினார்கள். பக்தர்கள் எப்படி சரியாக இங்கே வந்தனர் என்றும் விசாரிக்க வேண்டும். ஏனென்றால் 18 வயது சிறுவர்களும் இங்கே வந்து குளத்தில் குதித்து உள்ளனர். அதுதான் அதிர்ச்சி அளிக்கிறது. இங்கே முறையாக விதிகளை பின்பற்றினார்களா என்று விசாரித்து வருகிறோம். இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே கூடாது என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Why does Edappadi Palanisamy talk like BJP in the Nanganallur priests death and What is the reason?

எடப்பாடி குரல் மாற்றம்?

பொதுவாக அறநிலையத்துறை மீது பாஜகதான் தீவிர குற்றச்சாட்டுகளை வைக்கும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை மீட்க வேண்டும் என்று பாஜக புகார் வைக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த புகாரை.. பாஜகவை போலவே பதிவு செய்து இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+