பாமகவை எப்படியாவது வளைச்சு போடுங்க.. துடிதுடித்த எடப்பாடி.. பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?
சென்னை: பாமக உடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுக கூட்டணிக்கு வர முடிவு செய்துள்ளன என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கூட்டணி உறுதி: அதன்படி பாமக 6 சீட். தேமுதிக 3 சீட் என்று இறங்கி வர முடிவு செய்துள்ளன. இரண்டு ராஜ்யசபா இடங்கள் இரண்டு கட்சிக்கும் தலா 1 என்று பிரித்து கொடுக்கப்பட உள்ளன. இது போக பணம் கேட்டதில் நான்கில் ஒரு பகுதி பிரித்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாம். பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்.. நாம் பெரிய கூட்டணி அமைப்போம் என்று அதிமுக வைத்த வாதத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டார்களாம்.
அண்ணாமலையும் பாஜக சார்பாக கூட்டணி வைக்க இறங்கி வரவில்லை என்பதால் இப்படி அதிமுக பக்கம் செல்ல இவர்கள் முடிவு செய்துள்ளார்களாம். இதனால் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையும் நிலைக்கு வந்து இருப்பதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுகவை சேர்ந்து விஐபி ஒருவர் திரைமறைவு பேச்சுவார்த்தைகளை செய்து வருகிறாராம். அதன் மூலமே இந்த கூட்டணி உருவாகி வருகிறதாம்.
எடப்பாடி விடாப்பிடி: இந்த நிலையில்தான் பாமக உடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அவர் ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், பாமக இனிமேல் தமிழ்நாட்டில் வெற்றி கூட்டணியை முடிவு செய்யும் கட்சி அல்ல. அது இரண்டாவது இடத்தை முடிவு செய்யும் கட்சி . 2009 வரைதான் பாமக பலமாக இருந்தது. 2004, 2009 வரை எல்லாம் பாமக வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. இப்போது வடமாவட்டங்களில் பாமக வெறுமனே இரண்டாம் இடத்தை பிடிப்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறி உள்ளது.
10.5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தும் கூட.. அதிமுக கூட்டணியில் இருந்தும் கூட பாமக பெரிதாக அதிமுகவை வெற்றிபெற வைக்க முடியவில்லை. இன்னொரு பக்கம் பாமக திமுக கூட்டணிக்கும் செல்ல முடியாது. ஏனென்றால் விசிக - திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. அப்படிப்பட்ட பாமகவின் கதவை அதிமுக தட்டிக்கொண்டு இருக்கிறது. பாமக இருந்தால்தான் 20 இடங்களில் அதிமுக இரண்டாம் இடமாவது வரும்.
கூட்டணி: எப்படியாவது இரண்டாம் இடம் வந்துவிட வேண்டும் என்பதில்தான் அதிமுக உறுதியாக உள்ளது. இரண்டாம் இடத்தை பாஜகவிற்கு விட்டுக்கொடுத்துவிட கூடாது என்பதற்காகவே பாமகவின் உதவியை நாடிக்கொண்டு இருக்கிறது அதிமுக. பாமக திமுக கூட்டணிக்கும் செல்ல முடியாது. விசிக உடன் இருக்கும் வெற்றி கூட்டணியை திமுக வேண்டாம் என்று சொல்லாது.
இதுவரை தமிழ்நாட்டில் பாமகதான் இரண்டாம் இடம் பிடிக்க போகும் கூட்டணியை முடிவு செய்துள்ளது. அதனால் பாமக உடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications