175 கி.மீ பயணம் செய்து மனைவி கிட்ட போனது இதுக்கா? அடங்காத கள்ளக்காதல் சேட்டையால் சென்னை, ஒடிசா பரபர
சென்னை: கள்ளக்காதல் கொலைகள் எல்லைமீறி நடந்து கொண்டிருப்பது, பொதுமக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது. அதேபோல இளம் தம்பதிகளின் தற்கொலைகள், கொலைகளும், பெருகி வருகின்றன.. இதனால் தம்பதிகளின் குழந்தைகள் எதிர்காலத்தை இழந்து, அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகின்றன. நேற்று முன்தினம் ஒரே நாளில் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த கொலை சம்பவங்கள் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.
சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் 28 வயது அன்பு கணபதி (28). பிளம்பராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது வீட்டின் அருகே 30 வயதுடைய ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார்..

இதில், அன்பு கணபதிக்கும், ராஜதுரை மனைவிக்கும் கடந்த 6 மாதங்களாகவே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.. இந்த விஷயம் ராஜதுரைக்கு தெரியவந்ததையடுத்து, கள்ளக்காதல் ஜோடியை கண்டித்துள்ளார். ஆனால், ராஜதுரையை இருவருமே மதிக்கவில்லை.
கள்ளக்காதல் மனைவி
இதனால் இந்த விவகாரம் தொடர்பாக ராஜதுரைக்கும், அவரது மனைவிக்கும் நேற்றுமுன்தினம் இரவும் தகராறு வெடித்துள்ளது.. இதைக்கேள்விப்பட்ட இரு வீட்டு பெரியவர்களும், தம்பதியிடம் சமாதானம் பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு போனார்கள்.. ஆனாலும், ஆத்திரம் அடங்காத ராஜதுரை, தன்னுடைய குடும்பம் சிதைய காரணம் அன்பு கணபதி தான் என்பதால், அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
நாம மது குடிக்கலாமா
இதற்காக அன்றைய தினம் இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அன்பு கணபதியிடம், "நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நான் எல்லாத்தையும் மறந்துவிட்டேன். நாம மது குடிக்கலாம் வா" என்று பெருங்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் மது குடித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் போதை தலைக்கேறியதுமே, என் மனைவியிடம் உனக்கென்னடா பேச்சு என்று கேட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் அன்பு கணபதியை ராஜதுரை சரமாரியாக குத்தினார்.. ரத்த காயங்களுடன் அன்பு கணபதி துடிதுடித்து இறந்துவிட்டார்.. இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த துரைப்பாக்கம் போலீஸார், ராஜதுரையை கைது செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
பிடிவாதம் பிடித்த மனைவி
இதுபோலவே, தன்னுடன் வாழ மறுத்து பிடிவாதம் செய்து கொண்டிருந்த மனைவியை, தாலி கட்டிய கணவர் கொலை செய்துள்ளார்.. இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அம்ஜத்.. இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால், தன்னுடைய மனைவியுடன் நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டது.. ஒருகட்டத்தில் வெறுப்படைந்த மனைவி, கணவரை விட்டு பாலசோர் நகருக்கு தனியாக பிரிந்து சென்றுவிட்டார்..
175 கிமீ பயணம்
இதனால், நேற்று முன்தினம், மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக, , 175 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பாலசோர் நகருக்கு சென்றுள்ளார். அங்கு மனைவியை சந்தித்துப் பேசியிருக்கிறார்.. ஆனால், மறுபடியும் தம்பதிக்குள் வாக்குவாதம் வெடித்தது.. இதனால் ஆத்திரமடைந்த அம்ஜத், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை கொலை செய்ய பாய்ந்தார்..
பொதுமக்கள் கண் முன்னாடியே, மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக அம்ஜத்தை சுற்றிவளைத்து பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். அதற்குள் ரத்த வெள்ளத்தில் அம்ஜத்தின் மனைவி உயிருக்கு போராடினார்..
மனைவி சீரியஸ் கண்டிஷன்
அவரை மீட்ட பொதுமக்கள், பாலசோர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு சிகிச்சை தரப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.. எனினும் தற்போது அந்த பெண் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் முன்பே, இந்த கொலை வெறித்தாக்குதல் நடந்ததால், இந்த கொடூர சம்பவம் வீடியோவாகவும் சோஷியல் மீடியாவில் பரவி, காண்போரை நிலைகுலைய வைத்து வருகிறது. அத்துடன் இணையவாசிகளின் பெரும் கண்டனங்களையும் பெற்று வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications