21 மணி நேர கண்ட்ரோல்.. அசைய கூட முடியல.. சோர்வான முகத்துடன் வீடு திரும்பிய பொன்முடி.. என்ன நடந்தது?
சென்னை: அமைச்சர் பொன்முடி நேற்று அதிகாலையில் இருந்து அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால் மிகவும் சோர்வான முகத்துடன் விசாரணைக்கு பின் வீடு திரும்பினார்.
நேற்று அதிகாலை 7 மணிக்கு அமலாக்கத்துறை சார்பாக அமைச்சர் பொன்முடி வீடுகளில் ரெய்டு தொடங்கியது. அதிகாலை 7 மணிக்கு அவர் சென்னை வீட்டில் முதலில் ரெய்டு தொடங்கியது. அதை தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள வீட்டிலும் ரெய்டு தொடங்கியது.

மொத்தம் 9 இடங்களில் நேற்று ரெய்டு நடந்தது. இதில் ஒவ்வொரு இடங்களிலும் தலா 50 பேர் ரெய்டுக்காக களமிறக்கப்பட்டனர். அப்போது விழுப்புரம் வீட்டில் ரெய்டு செய்ய முடியாமல் அமலாக்கத்துறையினர் கடுமையாக திணறினர்.
அங்கே அதிகாரிகள் 20 பேர் குவிந்தனர். போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் முதல் கட்டமாக அவரின் வீட்டை துணை ராணுவப்படை சுற்றி வளைத்தனர்.
அவரின் வீட்டை சுற்றி துணை ராணுவப்படை துப்பாக்கியுடன் நிறுத்தப்பட்டனர். அதன்பின் அதிகாரிகள் கேட்டை திறந்து உள்ளே சென்றனர். ஆனால் உள்ளே யாரும் இல்லை. செந்தில் பாலாஜியின் உதவியாளர் செல்வம் மற்றும் ஒரே ஒரு தோட்டக்காரர் மட்டுமே இருந்தார் என்று கூறப்படுகிறது. மற்றபடி விழுப்புரம் வீடு பூட்டப்பட்டு இருந்தது.
அதை திறக்க ஆள் இல்லை. இதனால் அதிகாரிகள் உள்ளே செல்வதா இல்லையா என்று தெரியாமல் குழப்பத்திற்கு உள்ளாகினர். முதலில் பூட்டை உடைக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின் செல்வம் தனது வீட்டிற்கு சென்று பொன்முடி வீட்டின் இன்னொரு சாவியை எடுத்து வந்தார்.
இதையடுத்து பூட்டை உடைக்காமல் அதிகாரிகள் உள்ளே சென்றனர். உள்ளே இருந்த பீரோவை கள்ளச்சாவி போட்டு திறந்தனர். அதேபோல் அவரின் வீட்டில் இருந்த சொகுசு காரில் இருந்து முக்கியமான பல ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் அவரின் வீட்டில் இருந்த வெளிநாட்டு கரன்சிகள் சில பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.
7 மணியில் இருந்தே பொன்முடி அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில்தான் இருந்தார். ரெய்டுக்கு இடையே அவரிடம் விசாரணையும் செய்யப்பட்டது. அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அவர் யாரையும் பார்க்கவோ, பேசவோ அனுமதிக்கப்படவில்லை. உணவு கூட அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பெயரிலேயே வழங்கப்பட்டது.
நாள் முழுக்க அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருந்தவர் இரவு 8.30 மணிக்கு வீட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டார். இரவு 9 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகம் கொண்டு செல்லப்பட்ட அவரிடம் விசாரணை விடிய விடிய நடந்தது. 7 மணி மணி நேரம் விசாரணை நடந்து அதிகாலை 4 மணிக்கே பொன்முடி அனுப்பப்பட்டார்.
அவரை தூங்க விடாமல் பல்வேறு முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டு அவரிடம் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டு உள்ளன. அமைச்சர் பொன்முடி நேற்று அதிகாலையில் இருந்து அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால் மிகவும் சோர்வான முகத்துடன் விசாரணைக்கு பின் வீடு திரும்பினார். அவர் அதிகாலை 4 மணிக்கு வீடு திரும்பும் போது மிகவும் சோர்வான முகத்துடன் காணப்பட்டார்.
அவருக்கு வயது 72 என்பதால் இரவு முழுக்க நடத்தப்பட்ட விசாரணையால் உடல் சோர்வு அடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் சரவணன், "இப்போது 3.30 மணி. காலை 10 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 3.30 மணி வரை விசாரித்து இருக்கிறார்கள். அவருக்கு வயது 72. ஏற்கனவே உடலில் பல சில பிரச்சனைகள் உள்ளன. இப்படித்தான் அமலாக்கத்துறை மனிதாபிமானமற்ற முறையில் நடக்கிறது, என்று விமர்சனம் வைத்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications