5000 "பைல்ஸ்".. அடித்து ஆடும் பிடிஆர்! ஸ்டாலின் தந்த "ப்ரீ ஹேண்ட்".. அப்படியே திரும்பி போன கோப்புகள்
சென்னை: தன்னிடம் 5000க்கும் மேற்பட்ட கோப்புகள் வந்துள்ளதாகவும், அதில் பல நூறு கோப்புகளை திருப்பி அனுப்பி உள்ளதாகவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிதி துறையை மட்டுமே கவனித்து வந்தாலும் கூட, சட்டப்படி மற்ற துறைக்கான சில கோப்புகளிலும் கையெழுத்து போட வேண்டும். அதாவது வேறு துறையில் இருந்து நிதி துறைக்கு நிதி ஒதுக்க கேட்டு கோப்புகள் வரும்.
இந்த கோப்புகளை ஆய்வு செய்து, தேவையான கோப்புகளில் நிதி அமைச்சர் கையெழுத்து போட வேண்டும். சில துறைகளுக்கு இதன் மூலமே நிதித்துறையின் பணம் அளிக்கப்படும்.

என்ன சொன்னார்?
இந்த நிலையில்தான் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த நிதி விவகாரம் பற்றி பேசி இருக்கிறார். மதுரையில் அவர் அளித்த பேட்டியில், எனக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் உள்ள கொள்கை என்னவென்றால்.. நாங்கள் திராவிட கொள்கைகளை தீவிரமாக கடைபிடிக்கிறோம். எந்த முடிவு எடுத்தாலும் கொள்கை அடிப்படையில்தான் அந்த முடிவை எடுக்கிறோம். ஒரு கோப்பில் கையெழுத்து போடும் முன் கூட.. இது கொள்கை அடிப்படையில் சரியாக இருக்கிறதா? கொள்கைக்கு ஏற்றபடி இருக்கிறதா? என்று ஆய்வு செய்கிறோம். கொள்கை அடிப்படையிலேயேதான் நிதி ஒதுக்குகிறோம்.

கோப்புகள்
என்னிடம் 5000க்கும் மேல் கோப்புகள் வந்து உள்ளன. இவற்றில் பலவற்றை நான் திருப்பி அனுப்பி இருக்கிறேன். பல நூறு கோப்புகளை திருப்பி அனுப்பி உள்ளேன். முதல்வர் ஸ்டாலின் எனக்கு அந்த அளவிற்கு ஊக்கம் தருகிறார். பல துறைகளில் இருந்து வரும் கோப்புகள் நிதி துறை ஒப்புதலுக்கு வரும். அதில் பல அதிகாரிகள் கையெழுத்து போட்டு இருப்பார்கள்.

அதிகாரிகள்
10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதில் கையெழுத்து போட்டு இருப்பார்கள். ஆனால் கொள்கை ரீதியாக அந்த கோப்புகள் முரணாக இருந்தால் அதை திருப்பி அனுப்பி இருக்கிறேன். அதேபோல் கொள்கை ரீதியாக எதிராக இருக்கும் கோப்புகளை திருத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லியும் திருப்பி அனுப்பி இருக்கிறேன். முதல்வருக்கு தெரியும் நான் ஏன் இப்படி விளக்கம் கேட்கிறேன் என்று.

கோப்பு
அவருக்கு தெரியும் நான் ஏன் இப்படி சில கோப்புகளை திருப்பு அனுப்புகிறேன் என்று. முதல்வர் கொடுத்த சுதந்திரம் மற்றும் ஊக்கம் இது. அவரின் சுதந்திரம் இல்லை என்றால் இப்படி என்னால் செயல்பட முடியாது என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார். கடந்த ஆட்சியில் போல நடந்ததை போல சில திட்டங்களை அமலுக்கு வந்துவிட கூடாது. எந்த திட்டமும் கொள்கைக்கு எதிராக இருக்க கூடாது என்ற "மேலிட" உத்தரவு காரணமாக அமைச்சர் இப்படி கோப்புகளை திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications