ஏன் "ஆப்சென்ட்".. உடனே விசாரிங்க! டெல்லியை தவிர்த்த இளையராஜா! விசாரணையில் குதித்த காவி! இதான் காரணமா
சென்னை: 'மோடியும் அம்பேத்கரும்' புத்தக வெளியீட்டு விழாவிற்கு இளையராஜா எம்பி செல்லாதது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடியை இளையராஜா பாராட்டி பேசி இருந்தார். ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.
அதில், மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று பாராட்டி இருந்தார். அதோடு மோடி பற்றி பேசிய கருத்துக்களை வாபஸ் வாங்க மாட்டேன் என்று இளையராஜா குறிப்பிட்டு இருந்தார்.
மோடியை இப்படி இளையராஜா பாராட்டியது தேசிய அளவில் கவனம் பெற்றது. தேசிய அளவில் இதை பலரும் வைரலாக விவாதம் செய்தனர்.

இளையராஜா என்ன சொன்னார்?
பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவு மூலம் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று இருக்கிறார் மோடி, என்று இளையராஜா தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இளையராஜா கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர். பாஜக எதிர்ப்பாளர்கள் பலர் இளையராஜா கருத்தை கடுமையாக விமர்சித்தனர். அதே சமயம் இளையராஜா தனது கருத்துரிமையை வெளிப்படுத்தி உள்ளார்.

கங்கை அமரன்
கங்கை அமரன் இது தொடர்பாக அளித்த விளக்கத்தில், மோடி குறித்து இளையராஜா பேசியது பற்றி அவருக்கே போன் செய்து கேட்டேன். உங்களை நிறைய பேர் விமர்சிக்கிறார்களே என்று இளையராஜாவிடம் கேட்டேன். அதற்கு பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று இளையராஜா என்னிடம் சொன்னார். அது தன்னுடைய சொந்த கருத்து என்றார், என்று கங்கை அமரன் இதற்கு விளக்கம் கொடுத்து இருந்தார்.

எம்பி பதவி
இந்த நிலையில்தான் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ராஜ்ய சபா எம்பி பதவி கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. குடியரசுத் தலைவர் 12 பேரை ராஜ்ய சபாவிற்கு எம்பிக்களாக நியமிக்க முடியும். இதில் இந்த முறை இளையராஜா இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்தது. அதன்படியே அவருக்கு எம்பி பதவியும் கொடுக்கப்பட்டது. நியமன எம்பியாக இவர் ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார்.

பாஜக பிளான்
இந்த நிலையில் பாஜக இவரை தமிழ்நாட்டில் சிறப்பாக பயன்படுத்தும். அடித்தட்டு மக்கள் இடையே பிரபலம் அடைய பாஜக இவரை பயன்படுத்திக்கொள்ளும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகத்தை டெல்லியில் வெளியிடுவதாக இருந்தது. இதற்கு இளையராஜா எம்பி சிறப்பு விருந்தினராக வருவதாக இருந்தது. அழைப்பிதழிலும் அவர் பெயர் இருந்தது.

என்ன காரணம்
ஆனால் கடைசி நேரத்தில் இளையராஜா இந்த நிகழ்விற்கு வரவில்லை. அவர் கடைசி வரை வருவதாகவே இருந்தது. ஆனால் இசை தொடர்பாக சில பணிகள் இருப்பதாக கூறி அவர் கடைசி நேரத்தில் வரவில்லை. இளையராஜாவின் இந்த முடிவு கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கடந்த முறை இதே புத்தக நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதுதான் சர்ச்சையானது. இந்த முறை அந்த நிகழ்வை இளையராஜா தவிர்த்து இருக்கிறார்.

புகைச்சல்
இதுதான் தற்போது டெல்லியில் பெரிய புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறதாம். என்னங்க இது தமிழ்நாட்டில் இவரை வைத்து கவனம் ஈர்க்கலாம் என்று நினைத்தோம். இளையராஜா மோடி பற்றி பேசினால் அதை கேட்க பலர் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு எம்பி பதவி கொடுத்தும் அவர் இந்த நிகழ்விற்கு வர வரவில்லையே? என்று கொஞ்சம் விரக்தியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்களாம். இளையராஜா ஏன் வரவில்லை.. விமர்சனம் வேண்டாம் என்று இப்படி தவிர்த்துவிட்டாரா? என்ன காரணம் என்று டெல்லி தரப்பு விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications