அதே இடத்தில்.. அதே மாதிரி.. நேஷனல் லெவலில் திமுக போட்ட போடு.. குறுக்கே புகுந்த "ரவி".. அனல் பறக்குதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த இடத்தில் நீங்கள் என்னை எதிர்த்து பேசினீர்களோ.. அதே இடத்தில்.. அதே மாதிரி நான் உங்களை எதிர்த்து பேசுவேன் என்று தனது எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார் ஆளுநர் ஆர். என் ரவி.

ஆளுநர்களுக்கு எதிராக மோதலை தேசிய அளவில் கொண்டு செல்வதற்கான பணியில் இறங்கி உள்ளது தமிழ்நாட்டை ஆளும் திமுக. இதற்காக சமீபத்தில் கேரளாவில் நடந்த ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் திமுக கலந்து கொண்டது.

முக்கியமாக கேரளாவில் ஆரிப் கானுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கு மோதல் நிலவி வருகிறது. அங்கு நிதி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய சொல்லும் அளவிற்கு ஆளுநர் அத்துமீறி வருகிறார்.

போராட்டம்

போராட்டம்

இதையடுத்து சிபிஎம் தலைமையில் எல்டிஎப் கூட்டணி சார்பாக அங்கு ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுக சார்பாக திருச்சி சிவா எம்பி கலந்து கொண்டார். ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிரான போராட்டம் என்பதால் திமுக தனது பிரதிநிதியை அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆளுநரின் அத்துமீறலை எதிர்க்க சிபிஎம் ஆதரவு அளிக்கிறது. அதைப்போலவே கேரளாவில் சிபிஎம் கட்சிக்கு ஆதரவாக திமுக களமிறங்கி உள்ளது.

 தேசிய அளவில் செல்லும்

தேசிய அளவில் செல்லும்

ஆளுநருக்கு எதிராக எங்கு போராட்டம் நடந்தாலும் அங்கு நாங்கள் இருப்போம் என்று சொல்லாமல் சொல்லும் அளவிற்கு திமுக களமிறங்கி உள்ளது. திமுக சார்பாக எம்பி அல்லாமல் கன்னியாகுமரி நிர்வாகிகள் சிலர் அடங்கிய டீமும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் ஆளுநர்களின் அத்துமீறல்களை கேள்வி கேட்போம். தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களிலும் ஆளுநருக்கு எதிராக குரல் கொடுப்போம் என்று திமுகவினருக்கு இந்த போராட்டம் பற்றி கூறி உள்ளனர்.

ஆளுநர் பதிலடி

ஆளுநர் பதிலடி

இந்த நிலையில்தான் திமுகவின் இந்த நிலைப்பாடு காரணமாக தமிழ்நாடு ஆளுநர் ரவி தரப்பு அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. திமுக கேரளா வரை சென்று போராட்டம் செய்ததை ஆளுநர் விரும்பவில்லை என்கிறார்கள். இதையடுத்தே திமுகவிற்கு, திமுகவின் பாணியிலேயே ஆளுநர் ரவி பதிலடி கொடுத்துள்ளாராம். அதன்படி கேரளாவில் நடைபெற்ற கேரள லோக் ஆயுக்தா தின நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி தனது பதவி பற்றி பேசினார். ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் பதவி இல்லை.

பதவி

பதவி

எங்கள் பதவிக்கும் அதிகாரம் இருக்கிறது. நாங்கள் நினைத்தால் அரசின் மசோதாக்களை தடுக்க முடியும். நாங்கள் கையெழுத்து போடாமல் இருக்க முடியும். எங்களுக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. அதற்கான திறன் எங்களுக்கு உள்ளது என்று கூறினார். அதேபோல் திராவிடம் என்ற இனக்குழுவே கிடையாது. அது ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த விஷயம். நாம் எல்லாம் இந்தியர்கள் என்றும் ஆளுநர் ரவி பேசினார்.

திமுக

திமுக

ஆளுநர் பதவி என்பது போஸ்ட்மேன் பதவி. ஆட்டுக்கும் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் ஏன்? ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்றெல்லாம் திமுகதான் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. இந்த நிலையில்தான் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆளுநர் ஆர். என் ரவி இப்படி பேசி இருக்கிறார். இதனால் தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி - திமுக இடையிலான மோதல் பெரிதாகி உள்ளது. ஆளுநரின் இந்த பேச்சுக்கு திமுக பதிலடி கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+