அமித் ஷா வேற வராரே! திக்குமுக்காட வைத்த திமுக! முரண்டு பிடித்த "தலை".. டெல்லியில் தமிழிசை பஞ்சாயத்து
சென்னை: தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் ஆளும் திமுக தரப்பிற்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது.. இது போதாதென்று புதுச்சேரியிலும் தமிழிசைக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் முதல்வர் கே சந்திரசேகர ராவ் ஆகியோருக்கு இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி - ஆளும் திமுக இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் உச்சம் அடைந்த நிலையில் தமிழ் புத்தாண்டு அன்று ஆளுனர் ரவி கொடுத்த தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தெலுங்கானாவிலும் ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் கே சந்திரசேகர ராவ் ஆகியோருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தமிழிசை
அதன்படி பட்ஜெட் கூட்டதொடரில் ஆளுநர் உரை இடம்பெறவில்லை, ஆளுநர் செல்லும் இடங்களில் அவரை வரவேற்க ஆட்கள் யாரும் வரவில்லை, உகாதி விருந்துக்கு யாரும் வரவில்லை என்று தெலுங்கானாவிலும் கேசிஆர் - தமிழிசை இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதை பற்றி புகார் அளிக்க தமிழிசை கடந்த வாரம் டெல்லி சென்று இருந்தார். அப்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கூட தமிழிசை சந்தித்து புகார் அளித்தார்.

தமிழிசை தெலுங்கானா
இதில் புதுச்சேரி அரசியல் பற்றியும் தமிழிசை பஞ்சாயத்து கூட்டியதாக கூறப்படுகிறது. புதுச்சேரியின் முதல்வர் ரெங்கசாமி தரப்பிலிருந்தும் எனக்கு ஒத்துழைப்பு இல்லை என்று தமிழிசை புகார் அளித்ததாக தகவல்கள் வந்தன. தலைமைச் செயலாளரிடம் இது பற்றி நான் கேள்வி எழுப்பினால், "பாஜகவின் சீனியர் அமைச்சர் நமச்சிவாயம் தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறாரே... என அலட்சியமாக சொல்கிறார்கள் ஆளும் கூட்டணியில்" என்று புலம்பியிருக்கிறாராம் தமிழிசை என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

துணை நிலை ஆளுநர்
அங்கு துணை நிலை ஆளுநரான தமிழிசைக்குதான் அதிக அதிகாரம் இருக்க வேண்டும். ஆனாலும் அவரை கட்சி நிர்வாகிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் முக்கியமான முடிவுகளை நமச்சிவாயம்தான் எடுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழிசைக்கு மேலும் செக் வைக்கும் வகையில் அவரின் தேநீர் விருந்தை திமுகவும் புறக்கணித்தது. தமிழகத்தை போல புதுச்சேரியிலும் சித்திரை முழு நிலவு தினமன்று தேநீர் விருந்து கொடுப்பதாக துணை ஆளுநர் தமிழிசை அழைத்தார்.

புதுச்சேரி திமுக
ஆனால் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பை திமுக அங்கு ஏற்கவில்லை. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டத்தை புறக்கணித்தது. திமுகவின் இந்த புறக்கணிப்பு மூவை.. தேவையற்ற வீண் அரசியல்.. எல்லாத்தையும் இப்படி அரசியலாக்கினால் எப்படி.. நல்ல உறவை எப்படி மேற்கொள்வது என்று விமர்சித்து இருக்கிறார் தமிழிசை. ஒரு பக்கம் திமுக அழுத்தம்.. இன்னொரு பக்கம் தெலுங்கானாவில் கேசிஆர்.. புதுச்சேரியில் பாஜகவில் இருந்தே எதிர்ப்பு என்று ஆளுநர் தமிழசை திக்குமுக்காடி போய் இருக்கிறார்.
Recommended Video

திமுக ஆளுநர் தமிழிசை
இந்த நிலையில் அடுத்தடுத்த அரசியல் அழுத்தங்கள் பற்றி டெல்லியில் முறையிட தமிழிசை முடிவு செய்து இருக்கிறாராம். டெல்லி மேலிடத்தினரைச் சந்திக்க தமிழிசை சவுந்தரராஜன் ஏர் இந்தியா விமானத்தில் டில்லி விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை இருக்கும் நிலையில் அவர் மாற்றப்பட்டு அங்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில்தான் தமிழிசை இந்த அவசர பயணத்தை மேற்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications