அரக்கோணம்- சென்னை.. 2 ஸ்டேசனில் நிற்காமல் போன மின்சார ரயில்.. லோகோ பைலட் பதிலால் ஆடிப்போன பயணிகள்
சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி சென்ற மின்சார ரயில் திருவள்ளூர் மாவட்டத்தில் 2 ரயில் நிலையங்களில் நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பயணிகள் அபாய சங்கிலையை இழுத்து பிடித்து நிறுத்தியதுடன், லோகோ பைலட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லோகோ பைலட் சொன்ன பதில் தான் ஆச்சரியமானது..
சென்னையில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மின்சார ரயில்கள் தான், சென்னை புறநகர் பகுதியில் வாழும் பல லட்சம் மக்களுக்கு முக்கியமான போக்குவரத்து இணைப்பாக உள்ளது.

இதில் சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்னை கடற்கரை-அரக்கோணம் வழித்தடம் என்பது மிகவும் முக்கியமான வழித்தடங்களில் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் ஓடும் மின்சார ரயில்கள் வடசென்னை மக்களுக்கும், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தினமும் சென்னை வந்து வேலை செய்வோருக்கு இந்த ரயில்கள் தான் இதயமாக உள்ளன.
இந்நிலையில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 6.40 மணியளவில் சென்னை சென்ட்ரல் நோக்கி புறநகர் மின்சார ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலானது அரக்கோணம் - திருவள்ளூர் வரை உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்வது வழக்கமாகும். இந்தநிலையில் அரக்கோணம் அடுத்துள்ள புளியமங்கலம், மோசூர் ரயில் நிலையங்களில் மின்சார ரயில் நிற்காமல் சென்றது. இதனால் அந்த ரயில் நிலையங்களில் இறங்க வேண்டிய பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆனால் ரயில் உடனே நிற்கவில்லை.. அடுத்ததாக உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நின்றது. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் நேராக ரயில் என்ஜினை நோக்கி ஆவேசத்துடன் சென்றனர். ஏன் ரயிலை நிறுத்தவில்லை என்று லோகோ பைலட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பயணிகளிடம், லோகோ பைலட் நான் புதிதாக இந்த மார்க்கத்தில் ரயிலை இயக்க வந்துள்ளேன். எனவே மேற்கண்ட ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும் என்பது தெரியவில்லை என கூறி தவறுக்கு மன்னிப்பு கோரினாராம். இதனிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டு விரைந்து வந்த ரயில்வே போலீசார் பொதுமக்களை சமரசம் செய்தனர். அதன்பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து ரயிலில் ஏறினார்கள். தொடர்ந்து மின்சார ரயில் சென்னை சென்ட்ரல் நோக்கி புறப்பட்டு சென்றது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications