Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆமா.. ஏன் பெண்கள் அணியும் சட்டை, பேண்ட்களில் பாக்கெட் இல்லை தெரியுமா? பின்னணியில் ‛சில்லி’ காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்கள் அணியும் சட்டை, பேண்ட்களில் பாக்கெட் இருக்கும் நிலையில் பெண்கள் அணியும் சட்டை, பேண்ட்டுகளில் பாக்கெட்டுகள் பெரும்பாலும் இருப்பது இல்லை. இதன் பின்னணியில் 3 முக்கிய காரணம் உள்ளன.

பிறப்பால் ஆண், பெண்கள் இருவரும் சமம்தான். ஆனால் இந்த சமூகத்தில் என்னவோ எளிதாக ஆண்களுக்கு கிடைத்த பல உரிமைகளை பெண்கள் போராடி பெற வேண்டிய சூழல் தான் உள்ளது. வரலாற்றை புரட்டி பார்த்தால் நமக்கு அது கண்கூடாக நன்றாகவே தெரியும்.

Why does womens shirts and pants have no pockets?, 3 major reasons here

முன்காலத்தை ஒப்பிடும்போதும் இப்போது ஆணுக்கு நிகராக பெண்கள் மதிக்கப்பட்டு, உரிமைகளை பெற்றாலும் கூட சில விஷயங்களில் ஆணாதிக்கம் என்பது இன்னும் மேலாங்கி இருப்பதை நம்மால் நிச்சயம் மறுக்க முடியாது. தற்போதும் நிலைமை இப்படி இருக்க ஆடை விஷயங்களில் கூட பெண்களுக்கு ஓரவஞ்சனை இழைக்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், இது உண்மை தான். ஆண்களுக்கு நிகராக பெண்கள் மாடர்ன் உடைகள் அணிவதை நாம் பார்த்து வருகிறோம். ஆனாலும் அந்த உடையை நன்கு உற்று கவனித்தால் அதில் உள்ள பாகுபாடு நம் கண்களுக்கு நன்றாகவே தெரியும். அதாவது ஆண்கள் அணியும் சட்டை, பேண்ட்களில் பாக்கெட்டுகள் இருக்கும். மாறாக பெண்கள் அணியும் சட்டை, பேண்ட்களில் பாக்கெட்டுகள் இருக்காது. சில சட்டை மற்றும் பேண்ட்களில் சிறிய அளவிலான பாக்கெட்டுகள் இருக்கும்.

இருப்பினும் அந்த பாக்கெட்டை வைத்து பயன் ஒன்றும் இருக்காது. அதாவது ஆண்கள் அணியும் ஆடையில் உள்ள பாக்கெட்டில் செல்போன், பர்ஸ், சார்ஜர் உள்ளிட்ட பல பொருட்களை வைக்க முடியும். ஆனால் பெண்கள் அணியும் சட்டை, பேண்ட்களில் பாக்கெட்டுகள் இருந்தாலும் கூட அதில் எந்த பொருளையும் வைக்க முடியாத சூழல் தான் இன்றளவும் உள்ளது. இது மறுக்க முடியாத உண்மை.

சரி, மேட்டருக்கு வருவோம். அதாவது ஆண்களின் சட்டை, பேண்ட்டில் பாக்கெட்டுகள் இருப்பது போல் பெண்களின் சட்டை, பேண்ட்களில் ஏன் பாக்கெட் இல்லை அல்லது எந்த பொருட்களையும் வைக்க முடியாத வகையில் சின்ன பாக்கெட் மட்டுமே இருப்பது ஏன்? என்று என்றைக்காவது நாம் யோசித்து இருக்கிறோமோ?. இந்த கேள்விக்கு விடை சொல்ல வேண்டுமானால் சிலர் யோசித்து இருக்கலாம். ஆனால் பலபேர் அதுபற்றிய சிந்தனை செய்யாமல் இருந்து இருக்கலாம்.

இப்படியாக யோசித்தவர்கள் மற்றும் யோசிக்காத இருதரப்பினருக்கும் விளக்கம் அளிக்கவே இந்த செய்தி. உண்மையில் பெண்கள் சட்டை, பேண்ட்டுகளில் பாக்கெட் இல்லாமல் இருப்பதன் பின்னணியில் முக்கிய 3 காரணங்கள் உள்ளன. அதற்கு முன்பாக பேண்ட்டுகளில் பாக்கெட் வைக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது என்று பார்த்துவிடலாம். அதாவது முன்காலத்தில் இருந்தே பேண்ட்களில் பாக்கெட் வைத்து தயாரிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக மாறியது.

பணம் உள்பட அன்றாடம் பயன்பாட்டுக்கு தேவையான பொருட்களை கையில் எடுத்து செல்வதை விட அணியும் சட்டை, பேண்ட்டில் வைத்து எடுத்து செல்லாம் என்ற யோசனையின் பிறப்பிடம் தான் இந்த பாக்கெட். இது ஒகே இனி பெண்களின் சட்டை, பேண்ட்டுகளில் பாக்கெட் இல்லாததற்கான காரணத்தை பார்ப்போம். அதாவது 17 ம் நூற்றாண்டுக்கு முன்பு ஆண்களும், பெண்களும் பாக்கெட் வைத்த ஆடைகளை அணிந்து வந்தன. அந்த சமயத்தில் மிகவும் பெரிய பாக்கெட்டுகள் இருந்தன. அதில் பணம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்து எடுத்து சென்றனர். அப்போது திருடர்கள் பாக்கெட்டை குறிவைத்து திருடினர். பாக்கெட்டுகளின் சைஸ் பெரியதாக இருந்தது திருடர்கள் கைவரிசை காட்ட எளிமையாகவும் இருந்தது.

இதில் நிறையபேர் பணம் உள்ளிட்டவற்றை இழந்தனர். இந்த பிரச்சனையில் இருந்து மீளும் வகையில் மாற்று யோசனை கையில் எடுக்கப்பட்டது. அதாவது பல அடுக்கு ஆடைகளை அணிய தொடங்கினர். பாக்கெட் இருக்கும் சட்டையை முதலில் அணிந்து அதில் பொருட்களை வைத்த பிறகு அதன்பிறகு கோட் உள்ளிட்டவற்றை அணிய தொடங்கினர். பாக்கெட்டில் இருக்கும் பொருட்களை எடுக்க வேண்டும் என்றால் கோட் உள்ளிட்ட ஆடையை கழற்ற வேண்டிய சூழல் இருந்தது. இது ஆண்களுக்கு ஏற்றதாக இருந்தது. மாறாக பெண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் பாக்கெட் வைத்த ஆடைகள் அணிந்தாலும் தங்களின் பொருட்களை தனியே பேக் ஒன்றில் எடுத்து செல்ல தொடங்கினர். இதன்மூலம் பெண்களுக்கான பாக்கெட் பயன்பாடு குறைய தொடங்கியது. இது முதல் காரணம்.

அதன்பிறகு 1989ல் பிரெஞ்சு புரட்சி ஏற்பட்டது. இந்த வேளையில் பெண்களின் ஆடை அலங்காரம் முற்றிலுமாக மாறிப்போனது. அதாவது Slimmer Shapes மற்றும் Close-Fitting Skirts ஆடைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இது பாக்கெட் இல்லாமல் இருந்தது. இந்த ஆடைகளை அணிவது தான் நாகரீகம் என பெண்கள் கருதினர். இதனால் பெண்களும் பாக்கெட் இல்லாத ஆடைகள் அணிய தங்களை பழக்கப்படுத்தி கொண்டனர். தொடர்ந்து ஹேண்ட்பேக்-கை பெண்கள் பயன்படுத்துவது அதிகரித்தது. இது 2வது காரணம்.

அதோடு 3வது காரணம் என்பது உங்களுக்கு ‛சில்லி'யாக தெரியலாம். ஆனால் இது உண்மை என்றே கூறப்படுகிறது அதாவது ஹேண்ட்பேக் விற்பனையை அதிகரிக்கும் நோக்கம் தான் பெண்கள் அணியும் சட்டை, பேண்ட்டுகளில் பாக்கெட் இல்லாமல் இருப்பதற்கு இன்னொரு காரணமாக கூறப்படுகிறது. முன்காலத்தில் இருந்து பாக்கெட் பயன்பாட்டை பெண்கள் குறைத்து கொண்ட நிலையில் அதனை இப்போதும் சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். மேலும் பெரும்பாலான பெண்கள் பேண்ட் அல்லது சட்டையில் பாக்கெட் இருக்க வேண்டும் என்பதை எதிர்ப்பார்ப்பது இல்லை. அதோடு தங்களுக்கு தேவையான பொருட்களை ஹேண்ட்பேக்கில் எடுத்து செல்வதை வழக்கமாக்கி கொண்டனர். இதனால் இன்றைக்கும் கூட பெண்களின் பேண்ட்களில் பாக்கெட் இல்லாத சூழல் உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+