இந்தியர்களை வெறுக்க வேண்டும்.. மோசமான மாஸ்டர்மைண்டை மீண்டும் கொண்டு வரும் டிரம்ப்.. போச்சு
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கிய அரசின் திறன் துறைதான் "DOGE". இதன் தலைவர் எலான் மஸ்க். ஏற்கனவே இதன் இன்னொரு தலைவராக இருந்த இந்தியரான விவேக் ராமசாமி இந்த துறையில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில்தான் இந்த துறையில் இருக்கும் மார்கோ எல்ஸ் என்ற முக்கிய மாஸ்டர்மைண்ட் சமீபத்தில் இந்த துறையில் இருந்து வெளியேறினார். இதற்கு காரணம் இவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம். சமீபத்தில் இவர்.. இந்தியர்களை வெறுக்க வேண்டும்.. இந்தியர்களை வெறுப்பதை சாதாரணமான விஷயமாக மாற்ற வேண்டும். அவர்கள் மீது வெறுப்பை உமிழ வேண்டும் என்று கூறினார்.

இது சர்ச்சையாகவே அவர் அந்த துறையில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இவரை மீண்டும் பதவியில் எடுக்க வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் தெரிவித்தார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதை ஆதரித்து உள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் முடிவை நான் ஆதரிக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை வழி மொழிவதாக அமெரிக்க அரசின் திறன் துறைதான் "DOGE" தலைவர் எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். இதனால் இந்தியர்கள் பற்றி தவறாக பேசிய மார்கோ எல்ஸ் மீண்டும் இந்த துறைக்கு திரும்பும் வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கனவே டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் இந்தியர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
1. டிரம்ப் ஆதரவாளர்கள் தீவிர வலதுசாரிகள். அவர்களுக்கு அமெரிக்கர்கள் - வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமே முதல். மற்ற நாட்டினர் யாரையும் அவர்கள் மதிக்க மாட்டார்கள்.
2. இத்தனை காலம் டிரம்ப் ஆதரவாளர்களின் எதிர்ப்பாக கறுப்பின அமெரிக்கர்கள் இருந்தனர். இப்போது அதே வெள்ளை அமெரிக்கர்கள் இந்தியர்களை எதிர்க்க தொடங்கி உள்ளனர்.
3. இந்தியர்களுக்கு எதிராக வெள்ளையின அமெரிக்கர்கள் திரும்ப தொடங்கி உள்ளனர். இந்தியர்கள் தங்கள் வேலைகளை எடுத்துக்கொள்கிறார்கள், முக்கிய பொறுப்புகளுக்கு இந்தியர்கள் வருகிறார்கள் என்று வெள்ளையின அமெரிக்கர்கள் வாதம் வைக்கின்றனர். இதை அவர்கள் விரும்புவது இல்லை.
4. 2023 நிதியாண்டில் அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களில் 72.3% இந்தியர்கள் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அங்கே இந்தியர்கள் இதனால் மேலும் குடியேறுவார்கள் என்ற அச்சம் உள்ளது. இதை வெள்ளையின அமெரிக்கர்கள் எதிர்க்கின்றனர். இந்தியர்கள் அமெரிக்கா வந்து அமெரிக்காவின் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள். சொந்த நாட்டில் ஜாதி, மத பிரிவினைகளை ஏற்படுத்தி மக்களை பிரச்சனையில் தள்ளிவிட்டு சொகுசாக அமெரிக்காவில் சிலர் குடியேறிவிடுகிறார்கள். ஆனால் அமெரிக்காவிற்கும் அவர்கள் நேர்மையாக இருப்பது இல்லை என்று வெள்ளையின அமெரிக்கர்கள் இந்தியர்கள் மீது வெறுப்பை உமிழ தொடங்கி உள்ளனர்.
5. இவர்கள் பெரும்பாலும் டிரம்ப் ஆதரவாளர்கள். இந்த டிரம்ப் ஆதரவாளர்கள் இந்தியர்களுக்கு எதிராகவே திரும்பி உள்ளனர். டிரம்ப்பை ஆதரித்த அதே இந்தியர்களை டிரம்ப்பை ஆதரிக்கும் வெள்ளை அமெரிக்கர்கள் எதிர்க்க தொடங்கி உள்ளனர். வரும் நாட்களில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவது போல இந்தியர்கள் அமெரிக்காவில் தாக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதன் தொடக்கமே மார்கோ எல்ஸ் வருகை என்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications