KN நேரு துறையில் லஞ்சம்.. அமலாக்கத்துறை நேரடியாக ஆக்ஷன் எடுக்காமல் DGPக்கு கடிதம் எழுதியது ஏன்?
சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனம் செய்ததில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் அமலாக்கத்துறை தம்மிடம் உள்ள ஆதாரங்கள் அடிப்படையில் நேரடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல், தமிழக காவல்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியது ஏன்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்திருப்பதாக அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளில் 2,538 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றுள்ளது.

அதில், ஒவ்வொரு பதவிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதற்காக சில செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களும் அவர்களது நெருங்கிய தொடர்புடையவர்களும் தேர்வு செயல்முறையை முறைகேடாக மாற்றி, 2025 ஆகஸ்டில் குறைந்தது 150 தேர்வர்ளுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது, இந்த முறைகேடு தெரியவந்ததாகவும் அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பொறியாளர்களை பணி நியமனம் செய்ததில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் அமலாக்கத்துறை தம்மிடம் உள்ள ஆதாரங்கள் அடிப்படையில் நேரடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல், டி.ஜி.பிக்கு கடிதம் எழுதியது ஏன்? வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லையா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அமலாக்கத்துறை தமக்கு கிடைத்துள்ள ஆதாரத்தின் அடிப்படையில் இந்த பிரச்சனையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை. அதன் காரணமாகவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அமலாக்கத்துறை டி.ஜி.பிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
ஒருவேளை டி.ஜி.பி உத்தரவின்பேரில் இந்த பிரச்சனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தால் அந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை உடனடியாக மேல் நடவடிக்கையில் இறங்கும். அதுபோல்தான் இந்தியா முழுவதும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, ரெய்டுகள் நடத்தும்போது சொத்துகளுக்கு சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. அதேசமயம், பணமோசடி தடுப்புச் சட்டம் (பி.எம்.எல்.ஏ.) பிரிவு 17-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, சோதனையின்போது பூட்டை உடைத்து திறக்க அதிகாரம் உள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக நடந்த முறைகேட்டில் அவர் மீது முதலில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கின் அடிப்படையில் தான் செந்தில் பாலாஜி மீது கைது நடவடிக்கையில் அமலாக்கத்துறை இறங்கியது குறிப்பிடத்தக்கது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications