பெரிய "வேகத்தடை".. ஆனால் எடப்பாடியை பாருங்களேன்.. ரொம்ப கூலா இருக்காராமே? அதுதான் காரணமாம்!
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு எதிராக இடைக்கால உத்தரவு வந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு சில தீவிரமான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம். நேற்று இடைக்கால உத்தரவு வந்த நிலையில் மாலையில் இருந்து பல்வேறு ஆலோசனைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவில் இந்த முடிவை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை.
பொதுக்குழு முடிவை தொடர்ந்து 4 மாதங்களில் தேர்தல் நடத்தி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி நின்று, தொண்டர்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக பொதுச்செயலாளர் ஆவதே திட்டமாக இருந்தது.
ஆனால் இந்த பொதுக்குழுவிற்கு எதிராக அடுத்தடுத்து ஓ பன்னீர்செல்வம் வழக்குகளை தொடுத்தார்.

அதிமுக பொதுக்குழு
சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலில் பொதுக்குழுவிற்கு எதிராக வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் தனி நீதிபதி தீர்ப்பு ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக வந்தது. அதே சமயம், இரட்டை நீதிபதி அமர்வில் வந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்தது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். இந்த நிலையில்தான் அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்று வந்தார்.

எடப்பாடி பழனிசாமி
இதற்கு தொண்டர்கள் வாக்களிக்க வேண்டும். தொண்டர்கள் இடையே ஆதரவு இருக்க வேண்டும். இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுக்க சென்று பொதுக்கூட்டங்களை நடத்த முடிவு செய்து இருந்தார். அதன்படியே எடப்பாடி பழனிசாமி வரிசையாக பொதுக்கூட்டங்களை நடத்தி வந்தார். சமீபத்தில் சேலத்தில் எடப்பாடி சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் நேற்று முதல்நாள் மதுரையில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டங்களை நடத்தினார்.

பொதுக்கூட்டம்
அதன்பின் சிவகாசியில் எடப்பாடி கூட்டம் நடத்தினார். எடப்பாடி வெற்றிபெற வேண்டும் என்றால் தொண்டர்கள் ஆதரவு தேவை. இதற்கு தென் மண்டலத்திலும் அவர் வலுவாக இருக்க வேண்டும். ஆனால் முக்குலத்தோர் இடையில் எடப்பாடிக்கு தற்போது போதிய ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆதரவை பெற வேண்டும் என்றுதான் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களுக்கு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இது எல்லாம் பொதுச்செயலாளர் தேர்தலை மனதில் வைத்துதான்.

வழக்கு
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு உச்ச நீதிமன்றம் ஸ்பீட் பிரேக் போட்டுள்ளது. வழக்கு முடியும் வரை பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த கூடாது என்று உத்தரவிட்டது. இதை எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு எதிராக இடைக்கால உத்தரவு வந்துள்ள நிலையிலும் எடப்பாடி பழனிசாமி அதை பற்றி பெரிதாக கவலைப்படவில்லை என்று கூறப்படுகிறது.

உத்தரவு
முக்கியமாக எடப்பாடி பழனிசாமி, இப்படி ஒரு உத்தரவு வரும் என்பதை எதிர்பார்த்துதான் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. அதாவது கோர்ட் இப்படி இடைக்கால தடை விதிக்கலாம் என்று எடப்பாடி தரப்பு தயாராகவே இருந்துள்ளதாம். இதனால்தான் கோர்ட் கேட்டவுடன்.. நாங்கள் தேர்தல் நடத்த மாட்டோம் என்று எடப்பாடி உறுதி அளித்துள்ளார் என்கிறார்கள். இதை பற்றி நேற்று எடப்பாடி தனது ஆதரவாளர்கள், வக்கீல்களுடன் ஆலோசனை செய்துள்ளார்.

வழக்கு முடியும்
அதன்படி வழக்கு முடியும் வரை மட்டும் தானே காத்திருக்க வேண்டும். காத்திருக்கலாம். வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்துவிடும். அதுதான் முக்கியம் என்று கூலாக இருக்கிறாராம். எப்படியும் டிசம்பர் மாத தொடக்கத்திற்குள் தீர்ப்பு வந்துவிடும். அதில் சாதகமாக தீர்ப்பு வந்தால் கண்டிப்பாக உடனே தேர்தலை அறிவுத்துவிடலாம். இடைக்கால தடை என்பது ஸ்பீட் பிரேக்தான்.. புல் ஸ்டாப் கிடையாது என்று எடப்பாடி தரப்பு இந்த விஷயத்தை கூலாக அணுகி வருகிறதாம்.












Click it and Unblock the Notifications