மதுரை மாநாட்டில்.. "கவனிக்கப்பட்ட" ஆர்.பி உதயகுமார்.. எடப்பாடி செயலால் ஒரே பூரிப்பு.. என்ன காரணம்?
சென்னை: இன்று மதுரையில் நடக்கும் அதிமுக எழுச்சி மாநாட்டில் ஆர்.பி உதயகுமாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் எடப்பாடிக்கு அடுத்தபடியாக முழு போகஸ் இவர் மீதுதான் உள்ளது.
அதிமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக காலை கொடியேற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அங்கே 51 ஆண்டுகளை குறிக்கும் வகையில் 51 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் மலர் தூவ கொடி கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றினார்.

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின் நடக்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் இது. மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்த கூட்டம் நடக்கிறது. கிட்டத்தட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தென்மாவட்டம்: முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள்.
ஓ பன்னீர்செல்வம் காரணமாக முக்குலத்தோர் அப்செட் ஆக கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தை அவர் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆர்பி உதயகுமார் ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் மட்டுமின்றி திமுக, பாஜகவும் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த கூட்டம் இருக்க போகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இன்று மதுரையில் நடக்கும் அதிமுக எழுச்சி மாநாட்டில் ஆர்.பி உதயகுமாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் எடப்பாடிக்கு அடுத்தபடியாக முழு போகஸ் இவர் மீதுதான் உள்ளது. தென் மாவட்டங்களில் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி வளர்த்துவிடுவதாக ஏற்கனவே தமிழ்நாடு அரசியலில் ஒரு விவாதம் இருந்தது. இரண்டு பேருமே முக்குலத்தோர் பிரிவை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் முக்குலத்தோர் ஆதரவை பெரும் வகையில் எடப்பாடி இப்படி செய்ததாக கூறப்பட்டது.
ஆர் பி உதயகுமார்: அதேபோல் முக்குலத்தோர் ஓ பன்னீர்செல்வம் பக்கம் சாயாமல் இருக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஆர் பி உதயகுமாரை வளர்த்துவிட்டதாக விவாதங்கள் எழுந்தன. அதை உறுதி செய்யும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் உதயகுமாருக்கு எடப்பாடி பழனிசாமி துணை எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுத்துள்ளார். ஜெயக்குமார், வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் போன்றவர்கள் ரேஸில் இருந்தும், ஆர்பி உதயகுமாரை எடப்பாடி தேர்வு செய்ய இதுவே காரணம் என்கிறார்கள்.
அப்போதே கூட ஆர்பி உதயகுமாரே இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார். நான் இதை டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன் அவர் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், இது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு.. தாய் உள்ளதோடு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். உங்களோடு பார்க்கும் போதுதான் எனக்கு அந்த விஷயமே தெரிந்தது. உங்களோடு டிவி பார்த்துதான் நான் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டேன்.
இதற்கு நன்றி. மற்ற விஷயங்களை கட்சி பார்த்துக்கொள்ளும். சபாநாயகர் இதில் எடுக்க போகும் முடிவு பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. சட்டப்படி முடிவுகள் எடுக்கட்டும். நான் இதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை. என்னை இந்த பொறுப்பிற்கு தேர்வு செய்ததற்கு நன்றி என்று ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆர்பி உதயகுமாருக்கு வேறு ஒரு முக்கிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தென் மாவட்டம்: அதன்படி தென் மண்டலத்தில் இருக்கும் முக்குலத்தோர் சொந்தங்களை மொத்தமாக ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதன் பொருட்டே இன்று நடக்கும் எழுச்சி மாநாட்டிலும் ஆர்.பி உதயகுமாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதாம். அதன்படி, ஓபிஎஸ் இப்போது இல்லை என்றாலும் முக்குலத்தோர் வாக்குகளை வைத்து தேர்தல் நேரத்தில், நமக்கு குடைச்சல் கொடுப்பார். அப்போது வாக்குகளை பிரிக்க பார்ப்பார்.
இதனால் இப்போது முக்குலத்தோர் பிரிவை அவரிடம் இருந்து பிரிக்கும் டாஸ்க் ஆர்பி உதயகுமார் தரப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சி துணை தலைவர் ஆன சூட்டோடு அந்த பணியையும் அவர் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.அதற்கான தொடக்கம்தான் மதுரை மாநாடு என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications