சட்டென அடங்கிய சிரிப்பு! ஒரு நல்ல விஷயம் வந்ததும்.. அடுத்த கெட்ட விஷயமா.. கோபத்தில் சிவந்த எடப்பாடி?
சென்னை: இரட்டை இலை சின்ன வழக்கில் வெற்றி பெற்றும் கூட எடப்பாடி பழனிசாமி அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பின் வேறு தேர்தல் ரீதியான காரணங்கள் உள்ளதாம்.
அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு என்ன?: அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, பன்னீர் செல்வம் தரப்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
இந்த வழக்கு இந்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வருகிறது, இதுவரை பதில் மனுதாக்கல் செய்யவில்லை, தன்னை பொது செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி அவகாசம் வாங்கினார்கள், ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார்.
ஒபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நம்பர் ஆகிவிட்டது, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம், குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அப்போது நீதிபதி சதீஷ்குமார் எத்தனை முறை இந்த விவகாரத்தில் இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனைமுறை ஒரே வாதத்தை வைப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார். இ.பி.எஸ். தரப்பில் நான்கைந்து மாதங்களில் முக்கியமான எம்.பி தேர்தல் வரவுள்ளது, ஆனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக அதே பதவியை பயன்படுத்துகிறார், எங்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவிக்கிறார், பொதுமக்கள் மற்றும் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் என வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கின் முடிவில் அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி ஹாப்பி: இந்த வழக்கில் வெற்றிபெற்றதால் எடப்பாடி மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் அதிமுக என்ற பெயரை ஓ பன்னீர்செல்வம் லெட்டர்பேடில் பயன்படுத்த முடியாது. அந்த சின்னத்தை அவர் சட்டையில் அணிய முடியாது.
அதோடு இல்லாமல்.. அவர் காரில் கூட அதிமுக கொடியை பயன்படுத்த முடியாது. இப்படி ஓ பன்னீர்செல்வத்திற்கு வைக்கப்பட்ட செக்கிற்காக எடப்பாடி பழனிசாமி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம். ஆனால் அதே சமயம் ; இரட்டை இலை சின்ன வழக்கில் வெற்றி பெற்றும் கூட எடப்பாடி பழனிசாமி அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பின் வேறு தேர்தல் ரீதியான காரணங்கள் உள்ளதாம்.
சோகத்திற்கு என்ன காரணம்?: அதன்படி அதிமுகவில் பூத் கமிட்டியை அமைக்க எடப்பாடி சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் 10க்கும் மேற்பட்ட லோக்சபா தொகுதிகளில் இன்னும் பூத் கமிட்டி அமைக்கப்படவில்லையாம். இதை கேள்விப்பட்டுதான் எடப்பாடி கோபத்தில் இருக்கிறாராம்.
நாம் இந்த முறை தனியாக நிற்கிறோம். கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக இல்லை. அப்படி இருக்க நிர்வாகிகள் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்களே.. அதோடு நான் பொதுச்செயலாளராக சந்திக்கும் முதல் தேர்தல் இதில் வெல்ல வேண்டும். ஆனால் அங்கே திமுக பூத் வேலைகளை செய்துகொண்டு இருக்கும் போது நாம் பூத் கமிட்டியில் சொதப்புவது சரியில்லை என்ற கோபத்தில் இருக்கிறாராம். கட்சியில் 10க்கும் மேற்பட்ட லோக்சபா தொகுதிகளில் இன்னும் பூத் கமிட்டி அமைக்கப்படவிலையாம்.
இவர்களை அழைத்து விரைவில் ரெய்டு விடும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாராம்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications