பசும்பொன் பக்கம் வந்துடாதீங்க.. காலடி எடுத்து வச்சா அவ்வளவுதான்! எடப்பாடிக்கு பறந்த பகீர் எச்சரிக்கை
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னிற்கு வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தேனி கர்ணன் இது தொடர்பாக எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த மாதம் 30ம் தேதி பசும்பொன்னிற்கு செல்ல உள்ளார். தேவர் குருபூஜையை கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் பசும்பொன்னிற்கு செல்ல உள்ளார். இது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சசிகலா ஆதவாளர் தேனி கர்ணன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதே எடப்பாடியால் இங்கே வர முடியவில்லை. அப்போது போலீஸ் அவர் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போதே அவர் வரவில்லை. அப்போதே வருவதற்கான தைரியம் அவருக்கு இல்லை. அப்படி இருக்க இப்போது எப்படி வருவார். எந்த நம்பிக்கையில் அவர் இங்கே வர முடியும்.
ஆட்சியில் இருக்கும் போது ஒரு முதல்வராக இங்கே வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லையே. ஒரு முதல்வராக செய்ய முடியாதவர் இப்போது எப்படி செய்ய முடியும். அவர் அங்கே வர வேண்டும் என்று நினைப்பதே தவறு. அங்கே இருக்கும் மக்கள்.. முக்குலத்தோர் என்று இல்லை.. எல்லா ஜாதியினரும்.. எல்லா மக்களும் எடப்பாடி வர வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.
யார் வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் எடப்பாடி வர வேண்டாம். எடப்பாடி மட்டும் இங்கே வரவே கூடாது. அவர் எங்களுக்கு வேண்டாம் என்று நினைக்கின்றனர். அவர் துரோகம் செய்தவர். துரோகி ஒருவர் இங்கே வரக்கூடாது என்று நினைக்கின்றனர். அங்கே இருக்கும் மக்கள் எல்லோரும் இதைத்தான் நினைக்கின்றனர்.
வந்தால் பிரச்சனை வரும். அவருக்கு இங்கே வேலையே இல்லை. நீங்கள் அசிங்கப்பட்டு போவீர்கள் என்று அறிக்கை வெளியிடுகிறார்கள் பல தென்னக தலைவர்கள். அவர் நயவஞ்சகர். அவர் வந்தால் பெண்கள் தாக்குவார்கள் .. சிலர் செருப்பை வீசலாம்.. சிலர் விளக்கமாற்றை வீசலாம். அது பெரிய அசிங்கம். அது பெரிதாக திரும்பும். அதிமுக பொதுச்செயலாளர் என்று சொல்லிக்கொண்டு அவர் வர கூடாது.
ஆட்சியில் இருந்த போதெல்லாம் அவர் வரவில்லை. இப்போது தேர்தலை வைத்துக்கொண்டு எப்படி வரலாம். எங்களை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் மக்கள் உங்களை ஏற்கவில்லை. நீங்கள் தாக்கப்படலாம், அசிங்கப்படுத்தப்படலாம்.. இந்த பயம் எங்களுக்கு உள்ளது. யார் வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் எடப்பாடி வர வேண்டாம். எடப்பாடி மட்டும் இங்கே வரவே கூடாது. அவர் எங்களுக்கு வேண்டாம் என்று நினைக்கின்றனர்.
ஒரு ஜாதியினர் இல்லை. எல்லா மக்களும் இதைத்தான் நினைக்கின்றனர். அவர் துரோகி என்று மக்கள் நினைக்கின்றனர். அவரை மக்கள் ஏற்கவே மாட்டார். மதுரையில் உள்ளே தேவர் சிலைக்கு கூட மாலை போடாமல் மாநாடு நடத்தி இருக்கிறார். மதுரைக்கு உள்ளே கூட எடப்படியால் மாலை போட முடியவில்லை. அவரால் எப்படி குருபூஜைக்கு வர முடியும். அவர் முக்குலத்தோரை பிரித்து பார்க்கிறார். அதனால் முக்குலத்தோர் எப்படி எடப்பாடியை ஏற்றுக்கொள்வார்கள். எடப்பாடியை தலைவராக முக்குலத்தோர் பார்க்கவில்லை. இதை எடப்பாடி புரிந்துகொள்ள வேண்டும் என்று சசிகலா ஆதவாளர் தேனி கர்ணன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications