பின்வாங்கிய எலான் மஸ்க்! தமிழ்நாட்டுக்கு 20 ஆயிரம் கோடி இழப்பு? எப்படித் தெரியுமா?
சென்னை: எலான் மஸ்க் பயணம் ரத்து செய்யப்பட்டதால் தமிழ்நாட்டுக்குத்தான் அதிகபட்ச இழப்பு என்று கூறுகிறார் இந்தியத் தொழில் முனைவோர் சங்கம் இரகுநாதன்.
கடந்த 2 நாள்கள் முன்னதாக டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் இந்தியப் பயணத்தைக் கடைசி நேரத்தில் தள்ளி வைத்துள்ளதாக அறிவித்திருந்தார்.

அவர் பிரதமர் மோடியைச் சந்திக்க இருந்த நிலையில், பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நேரப்படி இரவு 9 மணிக்கு எக்ஸ் தளத்தில் எலான் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டுக்கு என்ன சம்பந்தம்?
எலான் மஸ்க் வருகை என்பது ஏதோ சுற்றுலா சாந்த பயணத் திட்டம் அல்ல. கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு சார்ந்த சமாச்சாரம். உலகின் மிகப் பெரிய கோடீசுவரர்களில் ஒருவர் எலான் எஸ்க் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் தளம் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
அமெரிக்கா மற்றும் சீனாவில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை காரணங்களால் டெஸ்லா கார் விற்பனை என்பது மந்தமாகியுள்ளது. ஆகவேதான் எலான் மஸ்க் இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்தத் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில்தான் இந்தியாவில் தேர்தல் காலம் தொடங்கிவிட்டது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்பதால், பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் ஒப்பந்த நடவடிக்கைகளை ஒத்தி வைக்க முடிவெடுத்துள்ளன.

எலான் மாஸ் அதிகபட்சமாகக் குஜராத்தில் முதலீடு செய்ய உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அவரது அதிகபட்ச தேர்வு தமிழ்நாடாக இருக்கிறது என்றும் சொல்லப்பட்டது.
இதனிடையே தான் அவரது பயணம் மறு தேதி எதையும் கூறாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது வெறும் பயணம் சார்ந்த விசயம் அல்ல. நாட்டின் பயன்பாடு சார்ந்த விசயம்.
ஆகவே, அவரது பயணம் தள்ளிப் போய் உள்ளது இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் என்பதைவிடத் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் என்றே சொல்லப்படுகிறது.
அது பற்றி இந்தியத் தொழில் முனைவோர் சங்கம் இரகுநாதன் விரிவாக அலசி ஆராய்ந்து பேசி உள்ளார்.
மிகப் பெரிய அதிர்ச்சியான செய்தி:
"எலான் மஸ்க் இந்தியா வருவது என்பது ஒரு உலகமே உற்றுப் பார்க்கின்ற நிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும். அவரது டெஸ்லா உலக அளவில் கார் உற்பத்தியில் மிகப் புகழ்வாய்ந்த நிறுவனம்.
ஏற்கெனவே இந்த நிறுவனம் சீனாவில் காலூன்றி விட்டது. அடுத்து இந்தியாவுக்கு வர உள்ளனர். கிட்டத்தட்ட இந்தியாவில் 20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டிருக்கிறார்.
இவ்வளவு பெரிய தொகையை அவர் இந்தியாவில் முதலீடு செய்யப் போகிறார் என்றதும் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகவே இருந்தது.
கடந்த 3 ஆண்டுகளாகவே மத்திய அரசு உலக முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறி வருகிறது.
பல உலக நாடுகளை இந்தியா திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. ஆகவே நாட்டின் தொழில் கட்டமைப்பு என்பது பெருகிக் கொண்டுள்ளது என்று அடிக்கடி மத்திய அரசு கூறி வருகிறது.
அப்படியான ஒரு பின்புலத்தில்தான் எலான் மஸ்க் இந்தியா வர இருந்தார். ஆகவே உச்சக்கட்ட எதிர்பார்ப்பு கூடியது. அந்த நேரத்தில் அவர் தனது பயணத்தைத் தள்ளி வைத்திருக்கிறார்.

இந்தச் செய்தியை அவர் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டபோது அதிர்ச்சியாகவே இருந்தது. அவர் நாட்டின் பிரதமரைப் பார்க்க வர இருந்தார். அவரது வருகைக்காக மிகப் பெரிய அளவு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. பலரது உழைப்பு அதன் பின்னதாக உள்ளது.
அப்படி உள்ள போது அமெரிக்க நேரப்படி இரவு 9:30 மணிக்கு இந்த முடிவை எடுத்து அறிவித்திருக்கிறார். ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகு இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்தால் பரவாயில்லை.
கடந்த 4 மாதங்களாகவே அமெரிக்காவில் உள்ள டெஸ்லா நிறுவனம் பல சோதனைகளைச் சந்தித்து வருகின்றது. இதன் சந்தை மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. விலை குறைப்பு நடவடிக்கைகளை அந்நிறுவனம் இறங்கி உள்ளது. ஆகவே, அதை எல்லாம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், எலான் என்ன சொல்கிறார்? இந்த ஆண்டின் இறுதியில் இந்தியா வருவேன் என்று சொல்கிறார். அதுதான் மிகப் பெரிய பயத்தையே கிளப்புகிறது. இத்தனை மாதங்களை அவர் தள்ளிப் போடுவதால், ஒருவேளை அவரது முதலீடே தள்ளிப் போய்விடுமா என்ற ஐயம் உருவாகி உள்ளது.
கோவையைத் தேர்வு செய்ய வாய்ப்பு:
இந்தியாவில் மூன்று மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் அவர் முதலீடு செய்யலாம் எனச் சொல்லப்பட்டது. குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு இவற்றில் ஒன்றை அவர் தேர்வு செய்வார் என்கிறார்கள். இதற்காக எலான் மஸ்க் குழுவினர் இந்த மாநிலங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
அதிகபட்சமாகத் தமிழ்நாட்டில் தான் முதலீடு செய்வார் என்று உறுதியாக நம்பப்பட்டது. ஒரு எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்புக்கு இரண்டு வகையான உபகரணங்கள் மிக முக்கியமானவை.
ஒன்று, சிப். இரண்டு, Forging. தமிழ்நாட்டில் சிப் தயாரிப்பு என்பது நல்ல வாய்ப்பு உள்ளது. Forging கோட்டையாகக் கோயமுத்தூர் உள்ளது. ஆகவே, டெஸ்லா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருந்தன.
குஜராத் மாநிலமும் நமக்கு இணையாக நிறுவனங்களை ஈர்ப்பதில் முன்னணியில் உள்ளது. ஆகவே அவர்களும் முயற்சி செய்கிறார்கள். அப்படி என்றால், இந்த இரண்டு மாநிலங்களில் ஒன்றைத் தேர்வு செய்வதில் எலான் குழப்பத்தில் உள்ளாரா? ரிலயன்ஸ் நிறுவனத்தைப் பங்குதாரராகச் சேர்ப்பதாக எலான் கூறி இருந்தார். அதில் ஏதேனும் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளதா?
இப்படிப் புதிது புதிதாக பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன" என்கிறார்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications