EPS No to OPS: தினகரனுக்கு ஓகே! ஆனா ஓபிஎஸ் பெயரை கேட்டாலே எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் அத்தனை கோபம்!
சென்னை: டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க முடியாது என கூறி வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனை மட்டும் அதிமுக கூட்டணியில் இணைத்த நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு ஏன் மறுக்கிறார் என்பதை பார்க்கலாம். அப்படி ஓபிஎஸ் மீது அவருக்கு என்ன கோபம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அ.தி.மு.க.வில் கடும் உட்கட்சி மோதல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக வி.கே.சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் ஓபிஎஸ்ஸும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவிற்கு இரட்டை தலைமையாக இருந்தனர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற கோஷம் எழுந்த நிலையில் ஓபிஎஸ் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கோர்ட்டுக்கு சென்றார். பின்னர் அதிமுக பொதுக் குழு கூட்டத்தை கூட்டி கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் நீக்கப்பட்டனர்.
அதிமுக பொதுச் செயலாளர்
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றி, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஆனார். வெளியேற்றப்பட்டவர்களில், டி.டி.வி.தினகரன் மட்டும் தனிக்கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை (AMMK) தொடங்கினார்.
துரோகி
இந்த நிலையில், முன்பு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக "துரோகி" என்று விமர்சித்த தினகரன், தற்போது அ.தி.மு.க. இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துள்ளார். இதனை அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக் கொண்டார்.
அதிமுக ஒற்றுமை
அதே நேரத்தில், அ.தி.மு.க. ஒற்றுமை வேண்டும் என்று தொடர்ந்து பேசி வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அது சாத்தியமில்லை என முடிவு செய்து, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு
ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சித்தார். நீண்ட நாட்களாக அமைதியாக இருந்தார். அவர் விஜயின் கட்சியில் சேரலாம் என்ற பேச்சும் இருந்தது.
சேகர்பாபுவுடன் பேச்சு
இதனிடையே சேகர்பாபுவுடன் அவர் சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறையில் ஆலோசனை செய்ததால் அவர் திமுகவில் இணைவார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய அவர், "நான் அ.தி.மு.க.வில் சேர தயாராக இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமியும், தினகரனும் தயாரா?" என்று கேள்வி எழுப்பி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஓபிஎஸ் கோரிக்கை
ஆனால், பன்னீர்செல்வத்தின் இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி உடனடியாக நிராகரித்தார். இதனால், முன்பு "துரோகி" என அழைத்த தினகரனை ஏற்றுக் கொண்டவர், பன்னீர்செல்வத்தை ஏன் மறுக்கிறார் என்ற கேள்வி எழுந்தது.
என்ன காரணம்
இதற்கான காரணம் என்னவென்றால், கட்சியின் முழு கட்டுப்பாடும் தன்னிடமே இருக்க வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் முக்கிய நோக்கம் என கூறப்படுகிறது. தினகரன் தனிக்கட்சி நடத்துவதால், அவரை கூட்டணியில் சேர்த்தால் அ.தி.மு.க.வில் உள் பிரச்சினை ஏற்படாது என்று பழனிசாமி கருதுகிறார்.
ஓபிஎஸ் இரட்டை தலைமை
ஆனால், எந்தக் கட்சியும் தொடங்காத ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்தால், "இரட்டைத் தலைமை" பிரச்சினை மீண்டும் எழும் என்று அவர் அஞ்சுகிறார் என்கிறார்கள். மேலும், நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தை அணுகியதும், கட்சி அலுவலகம் தொடர்பான பழைய சம்பவங்களும், பன்னீர்செல்வம் மீது எடப்பாடி பழனிசாமிக்குள்ள கோபத்திற்கு காரணமாக உள்ளன.
தினகரன் கூட்டணி
அதனால் தான், தினகரனை கூட்டணியில் ஏற்றுக் கொண்டு, பன்னீர்செல்வத்தை புறக்கணிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தினகரன் கூட்டணியில் இருப்பதால் தென் மாவட்டங்களில் உள்ள வாக்கு வங்கி பாதுகாக்கப்படும் என்றும், இனி பன்னீர்செல்வத்தின் ஆதரவு அவசியமில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கருதுவதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன.
-
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
சல்லி சல்லியா போகுதே என்டிஏ ஆசை.. டிடிவி தினகரன், அன்புமணி கறாரால் அதிரும் பாஜக! அமித்ஷா முடிவு என்ன -
அதிமுகவுக்கு கூடுதல் சீட் கேட்டு டெல்லி சென்ற இபிஎஸ்! "அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா? நேரு -
அதிமுக கதை குளோஸ்.. விஜய் வீட்டு கதவை தட்டும் எடப்பாடி பழனிசாமி.. பங்கப்படுத்திய பன்னீர்செல்வம் -
அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகம் வர முடியுமா? அதனால நாங்கள் டெல்லிக்கு போறோம்! என்ன தவறு? தினகரன் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications