வங்கிப்பணத்தை திருடும் செயலி: உங்கள் செல்போனில் இந்த செயலி இருந்தால் நீக்குங்கள்
சென்னை: போன் மூலமாக வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் 136 ஆப்களை கூகுள் பிளே ஸ்டோர் மொத்தமாக பிளாக் செய்துள்ளது. மக்களிடம் பல காலமாக இந்த ஆப்கள் பணம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மக்களிடம் ஏமாற்ற கூடிய, வைரஸ்கள் அடங்கிய ஆப்களை கூகுள் அனுமதிக்காது. ஒரு தவறான ஆப் உருவாக்கப்பட்டாலும் கூகுள் பிளே ஸ்டோர் உடனே அந்த செயலிகளை தூக்கிவிடும். ஆனால் இதை மீறியும் அவ்வப்போது கூகுள் பிளே ஸ்டோரில் ஏதாவது தவறான ஆப்கள், வைரஸ்கள் அடங்கிய ஆப்ஸ்கள் வந்துவிடுவது வழக்கம்.
இதுபோன்ற ஆப்கள் குறித்து புகார் வந்ததும் கூகுள் பிளே ஸ்டோர் அதை தூக்கிவிடும். அந்த வகையில்தான் கூகுள் பிளே ஸ்டோர் சமீபத்தில் 136 செயலிகளை பிளாக் செய்தது. மக்களிடம் பணம் திருடியதாக இந்த செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

எப்படி
அதன்படி தடை செய்யப்பட்ட 136 செயலிகள் GriftHorse டிரோஜன் என்ற வைரஸ் மூலம் உங்கள் போனில் இருந்து தகவல்களை திருடி உள்ளது. உங்கள் போன் எண் மூலம் அதில் இணைக்கப்பட்டு இருக்கும் வங்கி கணக்கின் விவரத்தை திருடி, உங்களின் மற்ற ஷாப்பிங் செயலிகளில் சேவ் செய்யப்பட்டு இருக்கும் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் போன்ற வங்கி விவரங்களை திருடி அதன்மூலம் பணம் திருடி உள்ளது. மொத்தமாக திருடுவது கடினம் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக திருடி உள்ளது.

எப்படி திருடுகிறது
அதாவது உங்கள் வங்கி விவரங்களை திருடி, அதன்பின் போனுக்கு ஒடிபி அனுப்பி அதை உங்களுக்கு முன்பாகவே இந்த வைரஸ் கொண்ட செயலிகள் படித்து, உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி உள்ளது. சில மோசமான ஆப்களை நீங்கள் பயன்படுத்தினால், நிறைய விளம்பரங்கள் வரும். இதை வாங்குங்கள், அதை வாங்குங்கள், உங்களுக்கு இவ்வளவு கோடி பரிசு வந்துள்ளது. இதை கிளிக் செய்யுங்கள் என்று நிறைய விளம்பரங்கள் வரும். பலர் தவறி இந்த விளம்பர பாப் அப்களை கிளிக் செய்வதும் உண்டு.

திருடும்
இப்படி ஆப்களில் வரும் விளம்பரங்களை கிளிக் செய்யும் போது அது தானாக உங்கள் போனில் வைரஸை அனுப்பி, உங்கள் வங்கி விவரங்களை திருடிவிடும். அதோடு மிக முக்கியமாக உங்கள் வங்கி கணக்கை ஏதாவது ஒரு சந்தா தொகைக்கு சப்ஸ்கிரைப் செய்துவிடும். இதனால் மாதா மாதம் உங்கள் வங்கியில் இருந்து 100, 50 ரூபாய் என்று கழியும். பலரும் சிறிய தொகைதானே என்று அதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால் இப்படி 100 ரூபாய், 50 ரூபாயாக பல யூசர்களிடம் இருந்து இந்த செயலிகள் பணத்தை திருடி இருக்கின்றன.

என்ன செயலிகள்
பிரபல பிட்னஸ் செயலிகள், ஜிபிஎஸ் செயலிகள், லாக்கர் செயலிகள் இது போன்று திருடி இருக்கின்றன. Heart Rate and Pulse Tracker, Geospot: GPS Location Tracker, ICare - Find Location,Free Translator Photo, Locker Tool, Fingerprint Changer, Slime Simulator, Keyboard Themes, What's Me Sticker, , Fingerprint Defender, Lifeel - scan and test, Launcher iOS 15, உள்ளிட்ட 136 செயலிகள் உங்கள் விவரங்களை இப்படி திருடும் திறன் கொண்டது. அம்பி போல நல்ல சேவைகளை வழங்கும் ஆப் போல செயல்பட்டு அந்நியன் போல இன்னொரு பக்கம் மோசமாக செயல்பட்டு பணம் திருடி உள்ளது.

டிரோஜன்
இதனால் GriftHorse டிரோஜன் கொண்ட செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோர் நீக்கி இருக்கிறது. இந்த செயலிகளை ஏற்கனவே இன்ஸ்டால் செய்த நபர்கள் உடனே தங்கள் போனில் இருந்து செயலிகளை நீக்க வேண்டும் என்று கூகுள் கூறியுள்ளது. Handi Translator Pro, Scanner App Scan Docs & Notes, Chat Translator All Messengers, Hunt Contact, Icony, Horoscope : Fortune, My Chat Translator ஆகிய பிரபல செயலிகளும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications