சென்னையில் 8 டிராபிக் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வாகன அபராதம் விதிக்க தடை ஏன்.. கூடுதல் கமிஷனர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மடிப்பாக்கம், நீலாங்கரை, துரைப்பாக்கம், பரங்கிமலை, மீனம் பாக்கம், மீனம் பாக்கம் விமான நிலையம், மாதரவாயல், மாதவரம் ஆகிய 8 போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் வாகன அபராதம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சாமுண்டீஸ்வரி விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சாமுண்டீஸ்வரி கூறுகையில், சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குள் 56 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மடிப்பாக்கம், நீலாங்கரை, துரைப்பாக்கம், பரங்கிமலை, மீனம் பாக்கம், மீனம் பாக்கம் விமான நிலையம், மாதரவாயல், மாதவரம் ஆகிய 8 நிலையங்களில் 'இ-கோர்ட்டு' மூலம் ஆன்லைனில் அபராதம் செலுத்தும் வசதி கிடையாது.

Why has the imposition of vehicle fines been banned at eight traffic police stations in Chennai

இந்த சூழலில் தாம்பரம், ஆவடி கமிஷனரகங்கள் புதிதாக தொடங்கப்பட்டபோது, இந்த 8 நிலையங்களில் ஆன்லைன் வசதியை ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு தனி நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. மற்ற போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் 'இ-கோர்ட்டு' மற்றும் ஆன்லைன் வசதி இருக்கிறது. அபராத தொகையை ஆன்லைன் மூலமாகவே செலுத்தும் நடைமுறை உள்ளது. இந்த 8 நிலையங்களில் விதிக்கப்படும் அபராதத்தை, சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் மூலம் வாகன ஓட்டிகள் நீதிமன்றத்தில் நேரடியாக செலுத்தி வந்தனர். பின்னர் அந்த தொகை அரசு கருவூலத்துக்கு சென்றது.

அதேபோல் சென்னையில் எங்குமே போக்குவரத்து போலீசார் அபராத தொகையை கையில் வாங்க முடியாது. ஆனால் 8 போலீஸ் நிலையங்களில் போலீசார் அபராத பணத்தை கையில் வாங்கி முறைகேடு செய்ததாக தவறான தகவல்கள் பரவின. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில், அதில் உண்மை இல்லை என்பதும் எங்களுக்கு தெரியவந்தது. எனினும், தவறான தகவல்கள் பரவியதால், ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்படும் வரை இந்த 8 போலீஸ் நிலையங்களிலும் அபராதம் விதிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

எனவே மடிப்பாக்கம், நீலாங்கரை, துரைப்பாக்கம், பரங்கிமலை, மீனம் பாக்கம், மீனம் பாக்கம் விமான நிலையம், மாதரவாயல், மாதவரம் ஆகிய 8 போலீஸ் நிலையங்களுக்கும் 'இ-கோர்ட்டு' மற்றும் ஆன்லைன் வசதி செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வசதி ஏற்படுத்தப்பட்டவுடன் அபராதம் விதிக்க அனுமதி வழங்கப்படும்.

மேலும், மடிப்பாக்கம், நீலாங்கரை, துரைப்பாக்கம், பரங்கிமலை, மீனம் பாக்கம், மீனம் பாக்கம் விமான நிலையம், மாதரவாயல், மாதவரம் ஆகிய 8 போலீஸ் நிலைய எல்லைகளில் பலர் அபராத தொகையை செலுத்தாமல் உள்ளனர். அவர்களை கண்டறிந்து கோர்ட்டு மூலம் அபராதத்தை வசூலிக்க உதவி கமிஷனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. அபராத தொகையை போலீசார் கையில் வாங்கக்கூடாது என்ற நடைமுறை கடந்த 2013-ம் ஆண்டிலிருந்தே அமலில் உள்ளது. அவ்வாறு பணம் வாங்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+