நேரம் ஆகிடுச்சு! ஏன் எங்களை விடுவிக்கல.. போலீசாருடன் வாக்குவாதம் செய்த பாஜக அண்ணாமலை, தமிழிசை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாங்கள் எதற்காக போராட்டம் செய்தோம். உங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு தானே போராட்டம் செய்தோம். நாங்கள் ஏதோ தப்பு செய்தது போல எங்களை கைது செய்து வைத்திருக்கிறீர்கள். பெண்கள் பலரும் இங்கு இருக்கும் நிலையில் மாலை 6 மணி ஆகியும் எங்களை ஏன் விடுவிக்கவில்லை. எங்களை விடுவிக்க விடாமல் தடுப்பது யார்.. யார் அந்த சார் என்பதை சொல்லுங்கள் என்று தமிழிசை சவுந்தராஜன் கூறினார்.

டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறிய புகாரை வைத்து சென்னையில் இன்று பாஜக சார்பில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு இந்த முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி கேட்டு இருந்தனர். மேலும் அங்கு வந்த பாஜக தொண்டர்களையும் போலீசார் அனுமதிக்க விடாமால் தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தினர். இதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலையை வீட்டின் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து காரில் வெளியே வந்த அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். இதேபோல், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

TASMAC Annamalai Tamilisai Soundararajan

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பாஜக தொண்டர்கள், பெண்கள் பலரும் மாலை 6 மணி ஆகியும் விடுவிக்கப்படவில்லை. இதனால் ஏன் எங்களை விடுவிக்கவில்லை என்று கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.

ஏன் எங்களை விடுவிக்கவில்லை என்றும், பெண்கள் பலரும் இருப்பதால் எங்களை விடுவிக்க வேண்டும் என்று கூறி போலீசுடன் வாக்குவாதம் செய்தார். இதேபோன்று தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் போராட்டம் நடத்தியவர்களும் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களும் மாலை 6 மணி ஆகியும் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஏன் எங்களை விடுவிக்கவில்லை என்று கூறி போலீசுடன் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த பாஜக பெண் தொண்டர் ஒருவர் மயக்கமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இது குறித்து பேசிய தமிழிசை சவுந்தராஜன், நாங்கள் எதற்காக போராட்டம் செய்தோம். உங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு தானே போராட்டம் செய்தோம். நாங்கள் ஏதோ தப்பு செய்தது போல எங்களை கைது செய்து வைத்திருக்கிறீர்கள்.

பெண்கள் பலரும் இங்கு இருக்கும் நிலையில் மாலை 6 மணி ஆகியும் எங்களை ஏன் விடுவிக்கவில்லை. எங்களை விடுவிக்க விடாமல் தடுப்பது யார்.. யார் அந்த சார் என்பதை சொல்லுங்கள்" என்று கூறி போராட்டம் செய்தனர். இதன் பின்னர் மாலை 7.00 மணியளவில் சென்னை அக்கரையில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அண்ணாமலை தரப்பினர் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து அண்ணாமலை கூறுகையில், "தேதி இனி சொல்ல மாட்டோம். காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி கேட்டு காவல்துறையிடம் அனுமதி கேட்கமாட்டோம். அடுத்த ஒரு வாரத்திற்கு நடக்கக் கூடிய போராட்டத்தில், டாஸ்மாக்கில் உள்ள எல்லா கடைகளிலும் பாஜக பெண் தொண்டர்கள் முதல்வரின் பிரேம் போட்ட புகைப்படத்தை ஒட்ட போகிறோம். இன்னொரு போராட்டம் என்னவென்றால் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்துவோம்." இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+