செம ட்விஸ்ட்.. சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி, ஓபிஎஸ் ஒரே அணியில்.. ஓ.பி.ரவீந்திரநாத் ஒரே போடு!
மதுரை: சசிகலா, டிடிவி தினகரன், இபிஎஸ், ஓபிஎஸ் அனைவரும் ஒரு குடையின் கீழ் திரள வேண்டும் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்த நிலையில், மீண்டும் கட்சி இணைய வேண்டும் என்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக நிராகரித்ததோடு, தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.
ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்த போது, திமுகவோடு ஓ.பன்னீர் செல்வம் கூட்டு வைத்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஓபிஎஸ் மகனும், அதிமுக எம்பி-யுமான ஓ.பி.ரவீந்திரநாத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடக்கம் முதலே விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஓபிஆர் பேச்சு
அப்போது ஓ.பி.ரவீந்திரநாத் கூறுகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் எத்தனையோ அவமானங்களை சந்தித்துள்ளார். ஆனாலும் கழகம் ஒன்றுபட என்ற எண்ணத்தோடு, அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். ஏனென்றால் அதிமுக பிரிந்திருப்பதால், திமுகவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

தொண்டர்களை குழப்புகிறார்
சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளோம். அதனால் தான் வரும் காலத்தை கணக்கில் கொண்டு, அனைவரும் ஒன்றிணைய அழைப்பு விடுத்தார். அதேபோல் 1989ல் ஜெயலலிதாவுக்கு எதிராக வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக ஓபிஎஸ் வேலை செய்ததாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
அன்றைய சூழலில் அதிமுகவின் ஜானகி அணிக்காக ஆதரவாக செயல்பட்டார். அதன்பின்னர் ஜெயலலிதாவுடன் ஆதரவாக நின்றார். அன்று முதல் கடைசி வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் தான் இருந்துள்ளார். தொண்டர்களை குழப்புவதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்.

முதல்வர் சந்தித்தது ஏன்?
2019ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் அதிமுகவின் சாதனைகளை பேசி வந்துள்ளேன். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தற்கு, விசாகா கமிட்டி கூட்டம்தான் காரணம். அன்றைய கூட்டத்தில் அதிமுக சார்பாகவே கலந்துகொண்டேன். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்பாக செயல்பட்ட பாராட்ட வேண்டும். அப்படிதான் திமுகவை பாராட்டினேன். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் முதல் நபராக நான் குரல் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

அனைவரும் இணைய வேண்டும்
தொடர்ந்து, அனைவரும் இணைந்து செயல்பட்டால் தான் அதிமுக வெற்றிபெறும். அதுதான் தொண்டர்களின் மனநிலை. அதனைதான் ஓபிஎஸ் வெளிப்படுத்தினார். அதையே நானும் வலியுறுத்துகிறேன். சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் இபிஎஸ் என அனைவரும் ஒரு குடையின் கீழ் வர வேண்டும் என்று அனைவருக்கும் நல்லது என்று தெரிவித்துள்ளார்.
-
கோவை தெற்கில் பந்தயம் அடிக்கணும்.. செந்தில் பாலாஜிக்கு வேலுமணி செக் -
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
மிகப்பெரிய இரும்பு ராட்சசன்.. சென்னையின் 2 பெரிய பகுதிகளை இணைக்கும் கோடு! வரப்போகும் மெகா மாற்றம் -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
விஜயின் தவெகவிற்கு ‘செக்'.. சென்னையின் 16 தொகுதிகளில் வெல்ல சபரீசன் வியூகம்.. ரெடியான 5 லட்சம் பேர் -
பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னை புறநகர் ரயில்கள் சேவை ரத்து.. ரயில்வே முக்கிய அறிவிப்பு -
எடப்பாடி பழனிசாமி போட்ட 3 கண்டிஷன்? தஞ்சையில் தினகரன் சொன்ன 1 விஷயம்.. உடைந்தது அரசியல் மர்மம் -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர்












Click it and Unblock the Notifications