"மருத்துவ சுற்றுலா!" தமிழகம் தான் எப்போதும் டாப்.. உலக நாடுகளில் இருந்தும் நோயாளிகள் வருவது ஏன்
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காகவே பலரும் தமிழகம் வருகிறார்கள். இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
சென்னையில் 1664 ஆம் ஆண்டில் பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆங்கிலேயர்கள் முதல்முறையாக ஒரு மருத்துவமனையை அமைத்தனர். கிழக்கிந்திய கம்பெனியின் நோய்வாய்ப்பட்ட வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்க அது பயன்படுத்து.

தமிழகம்: அப்போது நாட்டின் வேறு எங்கும் இதுபோன்ற வசதிகள் இல்லை. இந்தியாவில் வந்த முதல் நவீன மருத்துவமனை இது என்று கூடச் சொல்லலாம். பிறகு அது கோட்டைக்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இப்போது அது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையாக மாறி இருக்கிறது. இப்போது பல சிறப்புப் பிரிவுகளுடன் 2,700க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையாக அது கம்பீரமாக இருக்கிறது.
இப்படி தொடக்கம் முதலே சுகாதாரத் துறையில் வலுவான கட்டமைப்பைக் கொண்ட தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பில் ஒரு முக்கிய மையமாக இருந்து வருகிறது, ஒவ்வொரு ஆண்டும் சிகிச்சை பெறவே இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் அவ்வளவு ஏன் ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்தும் பயணிகள் சென்னை வருகிறார்கள். இதை மருத்துவ சுற்றுலா என்றே அழைக்கிறார்கள்.
சிகிச்சை: நாட்டில் சுகாதாரத் துறையில் டாப் இடத்தில் இருக்கும் தமிழ்நாடு சுகாதாரப் பாதுகாப்புக் குறியீடுகளில் முன்னிலையில் இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்குச் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், மருத்துவச் சிகிச்சையையும் சுற்றுலாவையும் ஒருங்கிணைக்க அரசு பல ஆண்டுகளாக முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சிகிச்சைக்காகவே தமிழகம் வருவோர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.
இந்தியாவில் எத்தனையோ மருத்துவமனைகள் இருக்கிறது. இருந்தாலும் ஏன் அவர்கள் தமிழகம் வருகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்தை வேறுபடுத்திக் காட்டுவது இங்கே உள்ள மருத்துவ உள்கட்டமைப்பு தான். தமிழகத்தில் பல நூறு மருத்துவமனைகள் உள்ள நிலையில், இங்கே ஒவ்வொரு துறையிலும் சிறப்பு மருத்துவர்கள் கொ உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இந்தளவுக்கு விரிவான ஒரு கட்டமைப்பு இருக்காது.
உள்கட்டமைப்பு: தமிழ்நாட்டில் இப்போது மொத்தம் 12,500 படுக்கைகள் உள்ளன. மேலும், சுமார் 10 லட்சம் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள், 48 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன; இது தவிரப் பல தனியார் மருத்துவமனைகளும் உள்ளன. இதுபோக ஆயுர்வேத, சித்தா மற்றும் யுனானி சிகிச்சை மையங்களும் உள்ளன. உள்ளன. அதேபோல சுமார் 400 மருந்து உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. இந்தளவுக்கு ஒரு மிகச் சிறப்பான மருத்துவ கட்டமைப்பைத் தமிழகம் கொண்டுள்ளது.
மேலும், மருத்துவ செலவுகள் என்று வரும் போதும் தமிழ்நாட்டில் குறைவாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு வங்கதேசத்தில், பிஇடி ஸ்கேன்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை செலவாகும், ஆனால் தமிழகத்தில் ரூ.20,000 மட்டுமே செலவாகும். இதன் காரணமாகவே பல்வேறு நாடுகளில் இருந்தும் அவர்கள் சிகிச்சைக்காகத் தமிழகம் வருகிறார்கள்.
ஆண்டுதோறும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காகத் தமிழகத்திற்கு வருகை தருவதாகத் தமிழக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே மருத்துவ சுற்றுலாவை பிரமோட் செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளாகத்தில் மருத்துவ சுற்றுலா தகவல் மையத்தையும், சென்னை மற்றும் மதுரையில் உதவி மையத்தையும் நிறுவியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications