விஜயின் அரசியல் வருகை.. காலியான நம்பர் 2 இடம்.. அதிமுக கேம்ப் அதிர்ச்சியானது ஏன்? இதுதான் காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயின் அரசியல் வருகையால்.. அதிமுக தரப்பிற்கு கடுமையான டென்ஷன் ஏற்பட்டுள்ளதாம். வரிசையாக அதிமுகவின் முக்கிய தலைவர்கள் விஜயின் அரசியல் வருகையை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே.. நடிகர் விஜய் அரசியல் என்ட்ரியை அறிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தில் இந்த பெயர் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்சி தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கைதான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Why is AIADMK upset over Actor Vijays political entry? What is the reason?

நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

அரசியல் கட்சி அறிவிப்பு: தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

அரசியல் மாற்றம் முக்கியம்: மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

விஜயின் அரசியல் என்ட்ரி - அதிமுக அப்செட் : விஜயின் அரசியல் வருகையை திமுக தரப்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் என்று பலரும் பாராட்டி உள்ளனர். இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையும் விஜயின் அரசியல் வருகையை பாராட்டி உள்ளார்.

ஆனால் அதிமுக தரப்பில் பலரும் விஜயின் அரசியல் வருகையை விமர்சனம் செய்துள்ளனர். முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிலிருந்து, வைகை செல்வன், கோவை சத்தியன், கிசோர் கே சாமி வரை விஜயின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக தாக்கி பேசி உள்ளனர்.

அவருக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்று மோசமாக விமர்சனம் வைக்கிறார்கள். விஜயின் வருகையை விமர்சனம் செய்த அதிமுகவின் கோவை சத்யன், தமிழ்நாட்டில் வளர்ந்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் பாஜக உள்ளது என வெளிப்படையாக தெரிகிறது. ரஜினிகாந்தை கட்சி தொடங்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால், அவர் தப்பித்துவிட்டார். அடுத்த தூண்டில் விஜய்தான். தமிழ்நாட்டில் வளர்ச்சியை பெற |திரைத்துறையில் இருந்து ஒரு முகம் தேவை என பாஜக நினைக்கிறது. அந்த தேவையை விஜய் பூர்த்தி செய்வார் என நம்புகிறார்கள், என்றுள்ளார்.

மாஜி அமைச்சர் ஜெயக்குமார் வைத்துள்ள விமர்சனத்தில், யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியல் என்பது பெருங்கடல். அதில் மூழ்கிப் போனவர்களும் உண்டு; நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு. விஜய் என்னவாகப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஊழல், மதவாதம் பற்றி விஜய் தனது அறிக்கையில் விமர்சனம் செய்துள்ளது திமுக, பாஜகவுக்குதான் பொருந்தும், என்றுள்ளார்.,

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிலிருந்து, வைகை செல்வன், கோவை சத்தியன், கிசோர் கே சாமி வரை விஜயின் அரசியல் பிரவேசத்தை தாக்கி கேலி கிண்டல் உள்ளனர். திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை அதாவது அதிமுக, நாதக மற்றும் பாஜகவிற்கு செல்லும் வாக்குகளை விஜய் தான் பிரிக்க போகிறார்.

முக்கியமாக அதிமுகவில் பெரிய தலைமை இல்லை என்ற வாதத்திற்கு விஜய் வலிமை சேர்க்கும் வாய்ப்புகள் உள்ளன. திமுக.. திமுகவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் விஜய் என்ற நிலை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதிமுகவின் நம்பர் 2 இடத்தை விஜய் பிடிக்க வாய்ப்பு உள்ளதால்.. அதிமுக தரப்பு அப்செட் ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+