திடீரென தமிழ்நாடு வரும்.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.. காரணத்தை கேட்டா.. ஷாக் ஆகிடுவீங்க
சென்னை: ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நாளை தமிழ்நாடு வருகிறார்.
ஒரே நாடு; ஒரே தேர்தல் எனும் திட்டம் தொடர்பான கருத்தரங்க கூட்டம் ஒன்றை தமிழக பாஜக நாளை (26 -ந்தேதி) சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் அரங்கத்தில் நடத்துகிறது. இதில் பாஜக தலைவர்கள் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்த திட்டத்தின் கருத்துருவாக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளும் இதில் பகிரப்படும் எனத் தெரிகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கலந்து கொள்கிறார். இதற்காக, இன்று இரவு 7:30-க்கு சென்னை வருகிறார் பவன் கல்யாண். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கராத்தே தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் அவரை வரவேற்கின்றனர்.

இன்று இரவு பவன் கல்யாண் தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் தவிர, தமிழக பிரபலங்கள் சிலரை சந்திக்க அவர்களுக்கு அப்பாயிண்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். இன்று அல்லது நாளை அவர்களை சந்திக்கிறார் பவன். தமிழகத்தில் ஜனசேனா கட்சியைத் துவக்கும் ஒரு யோசனையை சில மாதங்களாக அசை போட்டு வரும் பவன் கல்யாண், அது குறித்து விவாதிக்கவிருக்கிறாராம். இதற்காகவே, இந்த சந்திப்பை வைத்திருக்கிறார் என்கிறார்கள்.
'ஒரே நாடு ஒரு தேர்தல்' (ONOP) செயல்படுத்த அரசாங்கம் என்ன மாதிரியாக திட்டமிட்டுள்ளது என்று இங்கே பார்க்கலாம்:
ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்
முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும்
இரண்டாம் கட்டமாக, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
இரண்டாம் கட்ட தேர்தல் முதல் பொதுத் தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் நடத்தப்படும்
அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் இருக்கும்
நாடு முழுவதும் விரிவான பிரச்சாரம் நடக்கும். இதனால் 5 வருடத்திற்கு ஒரு முறை அந்த 3 மாத காலம் மட்டும் தேர்தல் காலமாக இருக்கும்.
ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அமலாக்கக் குழு அமைக்கப்படும்.
செலவுகள் குறையும்: தேர்தல் செலவுகள் இதன் மூலம் குறையும். அதேபோல் தேவையில்லாத பிரச்சார செலவுகளும் இதன் மூலம் குறையும். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி இந்த தேர்தல் முறை கொண்டு வரப்பட உள்ளது.
ஆனால் சில சிக்கல்கள் உள்ளன: ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் சில சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. அரசியல் வல்லுனர்கள் இது தொடர்பாக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளனர்.
1. தேர்தல் முடிந்த பின் மாநில அரசு திடீரென கவிழ்ந்தால் என்ன ஆகும்?
2. தேர்தல் முடிந்த பின் மத்திய அரசு கவிழ்ந்தால் என்ன ஆகும்?
3. ஒரு சில மாநிலங்களில் மட்டும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் என்ன ஆகும்?
4. இப்போது சமீபத்தில் தேர்தல் நடந்த மாநிலங்களில் ஆட்சி நீட்டிக்கப்படுமா, கவிழ்க்கப்படுமா?
5. சட்டமன்றங்கள், மாநில சட்டமன்றங்களை கலைப்பது தொடர்பான சட்டப்பிரிவு 174 ல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும். ஆனால் அப்படி செய்தால் மாநிலங்களின் உரிமை நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications