கேஸ் சிக்கலாகுது.. ஜனநாயகனின் அந்த காட்சி.. மத்திய அரசு எதிர்க்க காரணமே இதுதான்! கோர்ட்டில் வாதம்
சென்னை: நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகமெங்கும் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவிருந்தது. இந்தப் படத்தின் வெளியீடு தற்போது சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் நேற்று தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான (CBFC) சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். மறுபுறம், KVN புரொடக்ஷன்ஸ் LLP நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் உதவியுடன் வாதாடினார். பட வெளியீட்டில் ஏற்படும் தாமதம் நிதி ரீதியாகவும், மன ரீதியாகவும், நற்பெயருக்கும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

ஜனநாயகன் Censor Board
KVN புரொடக்ஷன்ஸ் LLP சுமார் ₹500 கோடி முதலீடு செய்து, 5,000 திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தது. இந்த பெரிய முதலீடு மற்றும் வெளியீட்டு திட்டங்கள் தாமதத்தால் பெருமளவில் பாதிக்கப்படும் என வழக்கறிஞர் சதீஷ் பராசரன் நீதிபதியிடம் எடுத்துரைத்தார். மன உளைச்சல் மற்றும் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
நீதிபதி பி.டி. ஆஷா, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசனுக்கு, திரைப்படம் குறித்த புகார் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நேற்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டார். வெள்ளிக்கிழமை அன்று படம் வெளியாகவிருந்த அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆவணங்களை இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு நீதிபதி கோரினார்.
படத்தின் பிந்தைய தயாரிப்புப் பணிகள் டிசம்பர் 15, 2025 அன்று முழுமையாக முடிவடைந்து, டிசம்பர் 18 அன்று CBFC-யிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, CBFC-யின் பரிசீலனைக் குழு, சில குறிப்பிட்ட வெட்டுக்கள் மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்டு U/A 16+ சான்றிதழ் வழங்கப் பரிந்துரைத்தது. தயாரிப்பாளர்கள் இந்த பரிந்துரைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு, அத்தனை மாற்றங்களையும் செய்து முடித்தனர்.
மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய பதிப்பு வாரியத்திடம் டிசம்பர் 24 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் உடனடியாகவும் முழுமையாகவும் அனைத்துப் பரிந்துரைகளையும் பின்பற்றியபோதிலும், CBFC கிட்டத்தட்ட 10 நாட்களாக எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை என பராசரன் குறிப்பிட்டார். ஜனவரி 9, 2026 அன்று படம் வெளியாகவிருந்ததை பலமுறை நினைவுபடுத்தியும் பதில் கிட்டவில்லை என அவர் தெரிவித்தார்.
ஜனவரி 5 அன்று, CBFC சென்னை மண்டல அதிகாரியிடமிருந்து பெற்ற தகவலால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்தது. திரைப்படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு (ஒரு மேல்முறையீட்டு அமைப்பு) அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் மற்றும் ஆயுதப் படைகளைக் சித்தரிப்பது தொடர்பான ஒரு புகார் கிடைத்ததே இந்த முடிவுக்கு ஒரே காரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், புகாரளித்த தனிநபரின் விவரங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை என பராசரன் சுட்டிக்காட்டினார். மேலும், தயாரிப்புக் குழுவினரும் பரிசீலனைக் குழு உறுப்பினர்களுமே படத்தைப் பார்த்ததால், அதன் உள்ளடக்கம் குறித்து வெளியாட்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக வாதிட்டார்.
திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் வாதம்
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சார்பில் ஆஜரான ASG, பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர், தான் திரைப்படம் பார்த்த பிறகு தனது ஆட்சேபனைகள் கூறி இருந்தாலும்.. அது பதிவு செய்யப்படவில்லை என்று புகார் அளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் தேவை என்றும் அவர் கோரினார்.
U/A 16+ சான்றிதழ் வழங்குவதற்காக வாரியம் பரிந்துரைத்த வெட்டுக்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரும், படத்தை மறுபரிசீலனைக்கு அனுப்ப CBFC எவ்வாறு முடிவு செய்ய முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த ASG, CBFC தலைவர், பரிசீலனைக் குழு படம் பார்த்த பிறகும் கூட, ஒரு திரைப்படத்தை மீண்டும் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட முழுவதும் அதிகாரம் பெற்றவர் என வாதிட்டார்.
ஜன நாயகன் படத்தின் சிக்கலுக்கு முக்கிய காரணம்
'ஜன நாயகன்' திரைப்படம் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்களைப் பயன்படுத்தியுள்ளது. இத்தகைய காட்சிகளைக் கையாளும்போது, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் அவர் கூறினார்.
ஒரு திரைப்படம் பரிசீலனைக் குழுவால் பார்க்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் வழங்கப்பட்ட பிறகும் கூட, அக்குறிப்பிட்ட பரிந்துரைகளில் CBFC தலைவர் திருப்தி அடையாத பட்சத்தில், மறுபரிசீலனை செய்வதற்காக அதை சீராய்வுக் குழு அல்லது மறுபரிசீலனைக் குழுவிற்கு அனுப்ப அவருக்கு முழு அதிகாரம் உள்ளது என ASG விளக்கினார். சினிமாட்டோகிராஃப் சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகள் இந்த நடைமுறைகளை தெளிவாக வரையறுக்கிறது.
பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வது இறுதி முடிவு அல்ல. CBFC தலைவருக்கு படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு அனுப்பும் அதிகாரம் இன்னும் உள்ளது. இந்தப் பரிசீலனைக் குழுவில் தணிக்கைக் குழுவில் ஏற்கனவே இருந்த உறுப்பினர்கள் இடம்பெற மாட்டார்கள். ஒரு புதிய குழுவால் படம் மறுபரிசீலனை செய்யப்பட்டு, அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என ASG வலியுறுத்தினார்.
தணிக்கைச் சான்றிதழ்
தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பாகவோ அல்லது மறுக்கப்படுவதற்கு முன்பாகவோ தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுக முடியாது என்றும் ASG வாதிட்டார். புகார் கிடைத்ததை அடுத்து, தணிக்கைச் சான்றிதழ் வழங்கல் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு பரிந்துரைக்குமாறு சென்னை மண்டல அதிகாரிக்கு CBFC தலைவர் கடிதம் எழுதி இருந்ததும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது.
இந்த சட்டபூர்வமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், CBFC-யின் தலைவர் சட்டத்தின்படி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியே இந்த முடிவை எடுத்தார் என்றும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த சிக்கலான வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பே 'ஜன நாயகன்' படத்தின் வெளியீட்டுக்கான அடுத்த அடியை முடிவு செய்யும்.
-
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு












Click it and Unblock the Notifications