ரூட்டை மாற்றிய ஸ்டாலின்.. பிடிஆர் முதல் இறையன்பு வரை.. ஜெ. பாணியில் அதிரடி ஆக்சன்.. ஏன் தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் முதல்வர் ஸ்டாலின் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2011 மற்றும் 2014 ஆட்சி காலங்களில் அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவதை வழக்கமாக இருந்தார். இரவில் தூங்க போகும் அமைச்சர்கள் காலையில் எழுந்து பாத் ரூம் போகும் தங்களுக்கு அமைச்சர் பதவி இருக்கிறதா என்று சோதித்து பார்த்துக்கொள்ளும் அளவிற்கு அப்போது நிலைமை இருந்தது.

முக்கியமாக பெரிய பொறுப்புகளில் இருக்கும் அமைச்சர்களை எல்லாம் ஜெயலலிதா நிமிடத்தில் தூக்கி அடித்த சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. சட்டசபையில் நன்றாக பேசுகிறார், திமுகவை விமர்சனம் செய்கிறார் என்பதற்காக எல்லாம் பெரிய அமைச்சரவை போஸ்டிங்குகளை ஒரே நாளில் ஜெயலலிதா சில புது முகங்களுக்கு தூக்கி கொடுத்த சம்பவங்களும் நடந்து உள்ளன.
அதேபோல் ஐஏஎஸ் அதிகாரிகளையும் அடிக்கடி மாற்றுவார். ஆனால் இது போன்ற மாற்றங்களை மேற்கொள்ளாத முதல்வர் ஸ்டாலின் இந்த முறை அடுத்தடுத்து டிரான்ஸ்பர் நடவடிக்கைகளை செய்து வருகிறார்.
பிடிஆர் மாற்றம்
அதன்படி நிதி அமைச்சகத்தில் நன்றாக செயல்பட்ட அமைச்சர் பிடிஆரை கூட மாற்றினார்.தமிழ்நாடு அமைச்சரவையில் 4 நாட்களுக்கு பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
இதில் பிடிஆர் மாற்றம் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரிகள் மாற்றம்:
அதன்பின் தனக்கு நெருக்கமான அதிகாரி உதயசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்டோரை கூட ஸ்டாலின் மாற்றினார். அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதும் எதிர்பார்த்தது போலவே உயர் அதிகாரிகள் மாற்றமும் நடந்தது.
அதன்படி முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அடுத்து யார்?
இது போக தமிழ்நாடு தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் மாற்றப்பட உள்ளார். இவர் இந்த பொறுப்பிற்கு கடந்த 2021ல் தேர்வு செய்யப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் பதவிக்காலம் முடிய உள்ளது. இந்த நிலையில் அடுத்த தலைமை செயலாளர் யார் என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. அந்த வகையில்தான் முதல்வர் ஸ்டாலின் தற்போது 5 பேர் கொண்ட லிஸ்டை எடுத்து இருக்கிறாராம்.
கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் 1986 ஆம் வருட பேஜ் அதிகாரியாக ஹன்ஸ்ராஜ் வர்மாவும், 1987 ஆம் வருட பேஜ் அதிகாரியாக டி.வி.சோமநாதனும் இருக்கிறார்கள். இதில் ஹன்ஸ்ராஜ்வர்மா தற்போது டிக் நிறுவனத்தின் சேர்மனாகவும் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார். சோமநாதன், மத்திய அரசின் நிதித்துறையில் செலவினங்கள் பிரிவின் செயலாளராக இருக்கிறார்.
1988 ஆம் வருட பேஜ் அதிகாரிகளில் இறையன்புவை தவிர்த்து விட்டால், விக்ரம்கபூர் இருக்கிறார். இவரும் மூத்த அதிகாரி. கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருகூறார்.
அதுல்யமிஸ்ரா இதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இவர் அரசின் டாப் தரப்பிற்கு மிகவும் நெருக்கம். அதோடு இவரும் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார்.
ஜித்தேந்திரநாத் ஸ்வைன் அதிகாரியும் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார். இவர்களில் ஸ்வைன் மத்திய அரசு பணியிலும், மற்ற இருவரும் மாநில அரசு பணியிலும் இருக்கின்றனர்.
இந்த லிஸ்டில் பிரதீப் யாதவ் ஐஏஎஸ்ஸும் இணைந்து உள்ளார். இவர் 1992 தமிழ்நாடு பேச்சை சேர்ந்தவர். பல்வேறு துறைகளில் பணியாற்றிய இவர் அதிமுக ஆட்சியில் கல்வித்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதே இவரின் செயல்பாடுகள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அதன்பின் இந்த ஆட்சியில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இவர் பணியாற்றி வருகிறார். தற்போது இவர் கூடுதல் தலைமை செயலாளராக பதவியும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளதால், அவரும் இந்த ரேஸில் இணைந்துள்ளார்.

டிஜிபி மாற்றம்
இது போக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பதவிக்காலம் முடிய உள்ளது.. லஞ்ச ஒழிப்புத்துறை கந்தசாமி ஐபிஎஸ் பதவிக்காலம் முடிந்துவிட்டது.
இவர்களுக்கு மாற்று அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அதேபோல் 2024 லோக்சபா தேர்தலுக்காக புதிய நம்பிக்கையான போலீஸ் அதிகாரிகளை உயர் பொறுப்புகளில் நியமிக்க வேண்டும். இது போக அடுத்து மாவட்ட ஆட்சியர்கள் பலர் மாற்றப்பட உள்ளனர். அதன்பின் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் மாற்றப்பட உள்ளனர்.
ஏன் இப்படி?
2024 லோக்சபா தேர்தல், 2026 சட்டசபை தேர்தல் இரண்டையும் மனதில் வைத்தே முதல்வர் ஸ்டாலின் இந்த மாற்றங்களை செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தல், 2026 சட்டசபை தேர்தல் இரண்டையும் மனதில் வைத்தே முதல்வர் ஸ்டாலின் இந்த மாற்றங்களை செய்து உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்று 2 வருடம் ஆகிவிட்டது.
இப்படிப்பட்ட நேரத்தில் தேர்தலில் வெற்றிபெற வசதியாக, பணிகளை செய்ய வசதியாக இந்த மாற்றங்களை முதல்வர் ஸ்டாலின் செய்கிறாராம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications